Tourist Places Around the World.

Breaking

Wednesday, 5 June 2019

குதம்பை சித்தர் வரலாறு / Kuthambai Siddhar

குதம்பை சித்தர் வரலாறு 

Kuthambai Siddhar

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

குதம்பை என்ற சொல்லுக்கு விளக்கம் பார்த்தோமெனில் காதில் அணியும் ஒருவகை தொங்கட்டான் என்று தெரிகிறது. ஆணாகப் பிறந்திட்ட பாலகனுக்கு காதில் எதற்கு அந்த அணிகலன்?  என்றுதானே அடுத்த சந்தேகம் எழுகிறது. ஆண் வாரிசாகப் பிறந்திட்ட அந்த சிசுவோ பார்ப்பதற்கு பெண் குழந்தை போல் பரிமளித்தது.

நவரசமும் முகமும் நர்த்தனமாட… பார்த்தாள் அந்த புண்ணியத்தாய்! அவனது காதிலே ஆசை ஆசையாக ஒரு அணிகலனைத் தொங்கவிட்டு அழகு பார்த்தாள். அந்த அணிகலன் ஆடும்போதெல்லாம் பரவசப்பட்டு தனது குழந்தைக்கு ‘குதம்பை’ என்றே பெயர் வைத்து விளிக்க ஆரம்பித்துவிட்டார்.

வயது பதினாறு வரை தாயை பிரியாத சேயாகவே குதம்பையார் இல்லம் சுற்றி வந்தார். கணநேரம் கூட தாய் முகம் காணாமல் இருக்க மாட்டார். தாயோ மகனை எங்கும் தனித்து விட மாட்டாள். உற்றார் உறவினர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மகனை தனித்து சிந்திக்க விட்டதில்லை.  பெற்ற தாயும் தந்தையும் அப்படியிருந்துவிடலாம். ஆனால், உமையொருபாகன்  சும்மாயிருப்பாரா?

தன்னால் தரணிக்கு அனுப்பப்பட்டவனுக்கு கடமை என்னவென்று கருத்திலிட வேண்டாமா!... என்று தயை கொண்டார். சித்தராகச் சென்றார் சிறுவனிடம்… கோடி சந்திரப் பிரகாசமாக ஜ்வலித்திட்டவரை பார்த்திட்ட அந்நொடியே உலகம் மறந்த சிறுவன்… ‘உத்தரவுக்கு காத்திருக்கேன் அடியாரே!’ என்று இதழ் பொத்தி பணிவு காட்டினான்.

“பிள்ளாய்! நீ யாரென்று நினைத்தாய். திருமண பந்தத்தில் சுழன்று கணவனாக, தந்தையாக கடமையாற்ற வேண்டியவன் என்றா நினைக்கிறாய்? உண்மை அதுவல்ல! சென்ற பிறவியில் ஒரு மாபெரும் தவத்தில் கண்ணுற்று இருந்தபோது சுழன்றடித்த பெரும்புயலில் உயிர்நீத்து இப்பிறவி கண்டிருக்கிறாய்! உனக்கு இறை தரிசனம் வேண்டும்தானே? உடனே புறப்பட்டு வா” என்று கூறிச் சென்றார்.

அதுவரை தாய் மட்டுமே உலகம் என்றிருந்த குதம்பை, மலர்ச்சியான முகத்துடன் “அசரீரியை விடுத்தார். ‘நீ வைகுண்டம் வரத்தேவையில்லை… குமாரா! இந்த அண்டத்திற்கு உன்னால் பெற வேண்டிய உபகாரங்கள் வெகுவாக உள்ளன. சரியாக நீ இங்கு வந்தமர்ந்த பிரதேசம் விந்தியமலை. இங்கு வாரணங்களின் சஞ்சாரம் அதிகம்… மிக அதிகம் (யானைக்கூட்டம்). அவற்றுக்கு மந்திரங்களை கிரஹிக்கும் சக்தியும் மிக அதிகம். நான் இப்போது உனக்கு வருண ஜப உச்சாடனத்தை உபதேசிக்கிறேன். நீ அதை மனதில் ஏற்றி யானைக் கூட்டங்களுக்கு செவியில் தீர்க்கமாக கேட்கும்படி உச்சாடனம் செய்… பிறகு நடப்பதைப்பார்…! “தாயிடம் சென்றார். உள்ளதை உள்ளபடி சொன்னார். அன்னைக்கு அதிர்ச்சி ஆகாசம் தாண்டியது. அதிர்ந்தாள். அழுதாள். அவனுக்கு நல்ல வார்த்தைகளாக கூறினாள்.“மகன்… என் மகன் நீ!... இப்போது என்னவோ சித்தனைப் போல் பேசுகிறாய். வேண்டாம் குதம்பை குமாரனே! துறவறம் துவர்ப்பானது. இல்லறம் இனிப்பானது… குழந்தைகளைப் பெற்றெடுத்து என்னைப் பாட்டியாக்கி மனம் குளிரச் செய்யப்பா!” என்று பரிதவித்தாள்.

ஆனால், சித்தரின் தரிசனத்திற்குப்பிறகு குதம்பையாரின் மனசு முற்றிலும் மாறிப்போயிருந்தது. அன்றிரவே நடுநிசியில் – இல்லம் தவிர்த்து அடவி சென்றான். அங்கு அவனுக்காக ஒரு அத்தி மரம் காத்து நின்றது. அதற்குள்ளாக ஒரு பொந்தும் இருந்தது. பூர்வ ஜன்மம் நினைவுக்கு வந்தது. அவ்வளவே! அந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். எவருமே வெளியிலிருந்து பார்க்க முடியாத இடமாகிப் போனது. ஒரு வேளை அன்னையோ, தந்தையோ தேடிவந்து விட்டால்?

மிகவும் எச்சரிக்கையுடன் தன் உடலை முழுவதுமாக மறைத்தபடி தவம் தொடர்ந்தார்.   நாட்களும், மாதங்களும், ஆண்டுகளும் கடந்தன…! உணவு ஒன்றுமில்லை, கண்களோ உறக்கம் கண்டதில்லை… பிடிவாதமோ தளரவில்லை.குதம்பையின் பிடிவாதம் முன்பு பரந்தாமனின் பிடிவாதமே நசிந்து போனது.

“அசரீரியை விடுத்தார். ‘நீ வைகுண்டம் வரத்தேவையில்லை… குமாரா! இந்த அண்டத்திற்கு உன்னால் பெற வேண்டிய உபகாரங்கள் வெகுவாக உள்ளன. சரியாக நீ இங்கு வந்தமர்ந்த பிரதேசம் விந்தியமலை. இங்கு வாரணங்களின் சஞ்சாரம் அதிகம்… மிக அதிகம் (யானைக்கூட்டம்). அவற்றுக்கு மந்திரங்களை கிரஹிக்கும் சக்தியும் மிக அதிகம். நான் இப்போது உனக்கு வருண ஜப உச்சாடனத்தை உபதேசிக்கிறேன். நீ அதை மனதில் ஏற்றி யானைக் கூட்டங்களுக்கு செவியில் தீர்க்கமாக கேட்கும்படி உச்சாடனம் செய்… பிறகு நடப்பதைப்பார்…! “

அசரீரி மறைந்து உபதேசம் அரங்கேறியது. குதம்பையார் கஜ கூட்டங்களின் நடுவே சென்று நின்றபடி மந்திர உச்சாடனம் செய்யச் செய்ய யானைக் கூட்டம் பிளிறத் தொடங்கின. அந்தப் பிளிறல் ஓசையே மந்திரமாக மாறி ஒலிக்க மழை கொட்டித் தீர்த்தது. கொட்டிய மழையில் காடு செழித்தது!.. கானகம் செழித்தால் ஊர் செழிக்கும் அல்லவா? குதம்பையாரின் உதவியால் ஊரும் செழித்தது. தவமியற்றும்போது மரப்பொந்தினில் தானே ஊன் உறக்கமின்றி இருந்தார் என்று பார்த்தோம். அப்போது அவரால் அதி அற்புதமான பாடல்கள் இயற்றப்பட்டு இன்றும் அவை சாகா வரம் பெற்றவையாக கருதப்படுகின்றன.

இவர் பிறந்தது என்னவோ யாதவ குலம். பசுக்களை மேய்த்து வந்த தம்பதியருக்கு பிறந்திட்டார். இவர் பிறப்பிடம் தஞ்சாவூர் அருகே என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 
ஆயிரம் ஆனாலும் மாயூரமாகுமா என்று போற்றப்படும் மயிலாடுதுறையில்தான் இவர் ஜீவசமாதி ஆனார். அது கூட எங்கோ ஒரு மூலையில் அல்ல! மயூரநாதர் ஆலயத்தின் உள்ளே அமையப்பெற்றுள்ளது. 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


18 siddhargal , siddhar jeeva samadhi temples in tamil nadu , siddhar temples , kuthambai siddhar jeeva samadhi , 18 siddhar jeeva samadhi , 18 siddhar temples , 18 siddhargal jeeva samadhi , sitthar kuthambai , kuthambai jeeva samadhi , 

No comments:

Post a Comment