Tourist Places Around the World.

Breaking

Tuesday, 11 June 2019

நடை சித்தர் அற்புதங்கள் / Nadai Siddhar

நடை சித்தர் - பிரம்மஸ்ரீ பாலானந்தா சுவாமிகள்

Nadai Siddhar

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சுவாமிகளின் பிறப்பு, உறவுகள், ஊர் என்று யாருக்கும் ஏதும் தகவல் தெரிய இல்லை. சுவாமிகளின் உண்மையான பெயரே ஜீவ ஒடுக்க காலத்தின் போது தாமே மொழிந்தார்கள். உண்மை பெயர் ‘’பால கிருஷ்ணன்’’ என்றும் தாம் கிருஷ்ண பக்தர்களின் பிள்ளை என்றும் உரைத்தார்கள். அதற்க்கு மேல் தம்மை பற்றி எதையும் யாருக்கும் கூறாமல் புன்னகை மட்டுமே பதிலாக உரைப்பார்கள்.

சுவாமிகள் எப்பொழுது எவ்வளவு மோசமான காலநிலையில் கூட அது வெயிலோ, வெப்பமோ, மழையோ, புயலோ வெறும் பாதங்களுடன் வேகமாக நடந்து கொண்டே இருப்பார்கள் அதனாலேயே அவரது அடியார்கள் சுவாமிகளை ‘’நடை சித்தர்’’ என்று அழைத்தனர். தினமும் பழனிக்கும் திண்டுக்களுக்கும் பல முறை பாதயாத்திரையாக சென்று வருவார். சுவாமிகள் மிக தெளிவான மன நிலையுடன் இருப்பார்கள். யார் என்ன மொழியில் பேசினாலும் அந்த மொழியிலேயே அவர்களுக்கு சுருக்கமாக ஒன்றிரெண்டு வார்த்தைகளில் பதில் உரைப்பார்கள் என்பது பலரது அனுபவ உண்மை. சுவாமிகளுக்கு எந்த விதமான தீய பழக்க வழக்கங்கள் கிடையாது.

சுவாமிகள் தனிமையில் இருக்கும் பொழுது தமக்கு கிடைத்த உணவை சிறிது எடுத்து அருகில் இருக்கும் எறும்புகளுக்கும், காக்கைகளுக்கும் வைத்து விட்டு இறைவனுக்கு நன்றி கூறி விட்டு உண்பார்கள். சில சமயங்களில் கருடனும் அவருடைய உணவை உண்டதாக பக்தர்களின் தகவல்.சுவாமிகள் வெள்ளை ஆடை மற்றும் காவி ஆடை மட்டுமே உடுத்துவார்கள். அந்த ஆடை கந்தலான பிறகே தமது அடியார்கள் வழங்கும் புதிய ஆடையை மாற்றி கொள்வார்கள். அப்படி கந்தல் இல்லாமல் ஆடையை மாற்றி விட்டால் சிறிது நேரத்தில் கழற்றி வேலியில் போட்டு விட்டு மீண்டும் பழைய ஆடையுடன் காட்சி தருவார்.

சுவாமிகளின் அற்புதங்கள்:

சுவாமிகளை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடன் வழிபட்டு தரிசனம் செய்தவர்கள் வாழ்வில் மேன்மை அடைந்துள்ளார்கள்.

திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு குடும்பமே தவறான உணவு பழக்கத்தால் நோய் பீடிக்கப்பட்டு கடும் துன்பத்துக்கு ஆளாகி இருந்த காலகட்டத்தில் சுவாமிகள் அவர்களின் வீட்டிற்க்கே சென்று அடிக்கடி உணவு அருந்தி வந்துள்ளார்கள். இதனால் அந்த குடும்பம் வெகு விரைவில் நோயில் இருந்து மீண்டு ஆரோக்கியம் அடைந்துள்ளது. அது முதல் அக்குடும்பமே சுவாமிகளை கடவுளின் அவதாரமாக குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த காலகட்டத்தில் அவரை தரிசிக்க முடியாமல் போனது. சுவாமிகளின் சமாதி பிரதிஷ்ட்டை முடிந்து 48 நாள் மண்டல குரு பூசை விழாவன்று தகவல் கிடைத்து வந்து சுவாமிகளிடம் அலுது புலம்பினர். அந்த சமயத்தில் அந்த குடும்பத்தின் தலைவிக்கு இடுப்பு வலி ஏற்பட்டு நடக்க இயலாமல் இருவர் கைத்தாங்களாக கூட்டி வந்தனர். அடுத்து வந்த ஒவ்வொரு பவர்ணமி இரவு வழிபாட்டில் தொடர்ந்து கலந்து கொண்டார்கள். 3 மாதங்களில் பூர்ண குணம் கண்டு இன்று நன்றாக அனைத்து வேலைகளையும் செய்து மகிழ்வுடன் உள்ளார்கள்.

ஒரு முறை இஸ்லாமிய அன்பர்கள் பொள்ளாச்சி செல்லும் பொழுது திண்டுக்கல் அருகில் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்த காரை நிறுத்தி உள்ளனர். அப்பொழுது அங்கே வந்த சுவாமிகளை கண்ட காரின் ஓட்டுனர் சுவாமிகள் பாதம் பணிந்து விட்டு தேநீர், மற்றும் பலகாரங்கள், தண்ணீர் பாட்டில் வாங்கி கொடுத்துள்ளார். இதை பார்த்த இஸ்லாமிய பயணிகள் அந்த ஓட்டுனரிடம் சுவாமிகளை பற்றி விசாரித்து உள்ளனர். ஓட்டுனரும் சுவாமிகள் பெரிய சித்தர், மகான் என்று கூறவே. இஸ்லாமிய அன்பர்கள் சுவாமிகளின் அழுக்கு ஆடையை மாற்றி விடலாமே என்று கூறி ஓட்டுனரிடம் பணம் கொடுத்து புதிய வெள்ளை வஸ்த்திரம் வாங்கி வர சொல்லி உள்ளனர். ஓட்டுனரும் புதிய வஸ்த்திரம் வாங்கி வந்து பழையதை கழற்றி விட்டு புதிய வஸ்த்திரத்தை அணிவித்து உள்ளார். இதை பொறுமையாக வேடிக்கையுடன் நகைப்புடன் பார்த்து கொண்டிருந்த சுவாமிகள் ஆடை மாற்றியவுடன் ஒட்டன்சத்திரம் சாலையில் நடக்க ஆரம்பித்து விட்டார். ஓட்டுனர் பழைய வஸ்த்திரத்தை அருகில் இருந்த வேலியில் போட்டு விட்டு அவரும் தேநீர் அருந்தி விட்டு அனைவரும் காரில் ஏறி பொள்ளாச்சி பயணம் தொடர்ந்தனர்.

செல்லும் வழியில் சுவாமிகள் பழனிக்கு அருகில் உள்ள குழந்தை வேலப்பர் சன்னதிக்கு முன்பாக அமர்ந்துள்ளதை கண்ட இஸ்லாமியர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது சுவாமிகள் முன்பே கழற்றி வீசப்பட்ட அதே பழைய ஆடையுடன் புன்னகைத்து கொண்டு அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதை கண்ட இஸ்லாமிய அன்பர்கள் நாம் காரில் வந்தோம் அய்யாவை நாம் கடக்க வில்லை எப்படி இவ்வளவு விரைவாக இங்கே வந்தார்கள் என்று ஓட்டுனரிடம் வினாவவே. ஓட்டுனர் சுவாமிகள் யார் வாகனத்திலும், எந்த ஒரு வாகனத்திலும் சென்றதில்லை. அதே நேரம் சுவாமிகள் கண் இமைக்கும் நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்று கேள்விபட்டுள்ளேன். அனால் நானே இன்று தான் நேரில் கண்டு பரவசம் அடைந்துள்ளேன் என்று கூறவே. அனைவரும் ஆச்சரியத்துடனும் பக்தியுடனும் சுவாமிகளை வணங்கி விட்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர். இதே போன்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

பொள்ளாச்சியில் பல ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தையில் தீராமல் இருந்த இஸ்லாமிய அன்பர்களின் சொத்து பிரச்சனை சுவாமிகளின் தரிசனம் மூலம் அன்று சுமூகமாக தீந்துள்ளது. அதன் பின் அவர்கள் சுவாமிகளை சந்திக்கவே இயலவில்லை. சுவாமிகளின் ஜீவ ஒடுக்கத்தின் பின் தகவல் அறிந்து சுவாமிகளின் ஜீவசமாதி தரிசனம் காண குழுவாக வந்திருந்தனர். தரிசனம் செய்து விட்டு அவர்களின் முறைப்படி துவா செய்ய அனுமதி கேட்டனர். நாங்கள் சிரித்து கொண்டே அய்யா இங்கே சாதி, மதம், இனம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகள் இல்லை நீங்கள் உங்கள் வழிபாட்டை செய்யலாம் என்று வேண்டிகொண்டோம். அவர்களும் மகிழ்வுடன் துவா செய்து விட்டு மகிழ்வுடனும், திருப்தியுடனும் சென்றனர்.

சுவாமிகளை தரிசிக்கும் அன்பர்கள் மெய்மறந்து பேரானந்த நிலையில் இருந்து விடுவார்கள். அதனாலேயே அவரை யாரும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு அடியார் சுவாமிகளை படம் எடுக்க அவரிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துள்ளார். படம் எடுத்த கையோடு சுவாமிகள் படத்தையும், சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள் படத்தையும் ஒன்றாக வைத்து சமூக ஊடகங்களில் இருவரும் ஒன்று போல் உள்ளனர் என்று பதிவு போட்டு விட்டார். இதனால் அந்த அடியாரின் கண்களில் சுமார் 6 மாதங்களாக தென்படாமல் இருந்துள்ளார்கள் சுவாமிகள். சுவாமிகளும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகளும் உருவத்தில் ஒத்திருப்பர் என்பதும் உண்மையே

வேடசந்தூர் பகுதியை சேர்ந்த அடியார் சுவாமிகளின் தீவிர பக்தர். அவரின் தங்கை கணவர் குடி பழக்கத்தால் உடல் சீர் கேட்டு மரண தருவையில் இருந்த பொழுது இவரை காண வேண்டும் என்று கூறி உள்ளார். அங்கே சென்ற வேடசந்தூர் அடியார் சுவாமிகளை வேண்டி விபூதி பூசி விட பல நாட்களாக கண் மூடி அன்ன ஆகாரம் இல்லாமல் இருந்தவர் கண்களை திறந்து பார்த்து உள்ளார். அடுத்த வந்த நாட்களில் சுவாமிகளின் மந்திரமாக ‘’ஓம் ஸ்ரீ நடை சித்தர் பாலானந்த சுவாமிகளே போற்றி’’ என்று கூறி விபூதி பூசி வர சில நாட்களிலேயே பூர்ண குணம் கண்டார்.

ஒரு முறை சுவாமிகளுக்கு வழிபோக்கர் ஒருவர் அசைவ உணவு பிரியாணி வாங்கி வந்து கொடுத்துள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டுள்ளனர். சுவாமிகள் சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணியில் இருந்து கம கமவென்று சாம்பார் மனம் வரவே வழிபோக்கருக்கு சந்தேகம் வந்து விட்டது. இருந்தாலும் சுவாமிகளிடம் எப்படி கேட்பது என்று மவுனமாக இருந்து விட்டார். இதை உணர்ந்த சுவாமிகள் சூடு அடங்கும் முன் எலும்பை கடியப்பா உனக்கு தான் பிடிக்குமே என்று கூற. வலிபோக்கரும் குழப்பத்தில் எலும்பை கடித்துள்ளார் அது முருங்கை காய் சுவை மட்டுமே இருந்துள்ளது. உடனே பிரியாணியை வாயில் வைத்தவுடன் சாம்பார் சுவையே இருந்துள்ளது. முன்பு சாப்பிட்டு கொண்டிருந்த பிரியாணி சுவாமிகளின் பார்வையால் சாம்பார் சாதமாக மாறியதை உணர்ந்து சுவாமிகள் பாதம் பணிந்து இனி நான் அசைவம் தொடுவதில்லை என்று சத்தியம் செய்து கொடுத்துள்ளார்.

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த அடியார் சுவாமிகளின் தீவிர பக்தர். அவருக்கு சுவாமிகளின் கருணையினால் பல நன்மைகளை அடைந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் சுவாமிகளை காண முடியாமல் தவித்துள்ளார். அந்த சமயத்தில் அவருடைய ஆன்மீக உறவுகளுடன் வெள்ளியங்கிரி யாத்திரை சென்று உள்ளார். மலை வழி யாத்திரையில் சுவாமிகளின் சிந்தனையில் தங்களை நீண்ட நாட்களாக காண இயலவில்லையே என்று நினைத்துள்ளார். அடுத்த கணமே மலையின் முகட்டில் சுவாமிகள் விஸ்வரூப தரிசனம் தந்துள்ளார். யாத்திரை முடிந்து வீட்டிற்கு வந்த உடன் சுவாமிகளின் ஜீவ ஒடுக்க 48 ஆம் நாள் குரு பூசை தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னரே சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு வந்து வழிபட்டு சென்றுள்ளார்.

சேலம் பகுதியை சேர்ந்த ஒரு பக்தர் சுவாமிகளிடம் தனது பொருளாதார குறைபாட்டை ஒவ்வொரு முறை சந்திப்பிலும் கூறுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்படி அவர் ஒவ்வொரு முறை கூறும் பொழுதும் சுவாமிகள் மண்ணை அள்ளி கொடுப்பார். இதை பல முறை வாங்கிய பக்தர் வீட்டில் துணியில் மூடையாக கட்டி வைத்தார். சரியாக 21 வது முறை சுவாமிகளை சந்திக்கும் பொழுது குறையை எப்பொழுதும் போல் கூறி உள்ளார். அனால் இந்த முறை சுவாமிகள் சிறிது தானியங்களை கொடுத்து அனுப்பி உள்ளார். வீட்டிற்கு சென்றவர் அவருக்கே தெரியாமல் இருந்த பூர்வீக சொத்து அவரை தேடி வீட்டிற்கே வந்தது, அவரின் பொருளாதார பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. ஆனால் அதன் பின் சுவாமிகளின் தரிசனம் அவருக்கு கிடைக்கவே இல்லை. ஜீவ ஒடுக்கத்தின் பின்பே இணையத்தில் பார்த்து வந்து வழிபட்டு சென்றார்.

ஸ்வாமிகள் வாசி யோகம், தவயோகம், போன்ற அட்டாங்க யோகங்களை பயிற்சி செய்தவர். இதனாலேயே சுவாமிகளை தரிசனம் செய்தார்க்கும், ஜீவசமாதியை தரிசனம் செய்பவர்களுக்கும் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

சுவாமிகளின் ஜீவ ஒடுக்கத்தின் சமயம் நாடு முழுவதிலும் உள்ள பல சாதுக்களுக்கு சூட்சும அறிவிப்பாக இடத்தையும், காலத்தையும் பற்றிய தகவல்களை சுவாமிகள் கொடுத்துள்ளார்கள். சுமார் 300 க்கும் மேற்பட்ட சாதுக்கள் ஜீவசமாதி பிரதிஷ்ட்டையின் போது குழுமி விட்டனர். வெண் கழுத்து கருடன் சுழன்று வட்டமிட, சாதுக்கள் கூட்டம் அலைமோதிட, நமசிவாய மந்திரமும் சங்கு நாதங்கள் விண்ணை பிளக்கும் ஓசையுடன் முழங்கிட சித்த வித்தியார்த்த குருமார்களால் சுவாமிகள் சமாதி பிரதிஷ்ட்டை நடந்தேறியது.

சுவாமிகள் ஜீவ ஒடுக்கத்தின் பின்பு சமாதி பிரதிஷ்ட்டை வரை 26 மணி நேரங்கள் வரை உடல் விரைக்காமல் நெகிழ்வு தன்மையுடன் லேசான உஷ்ணத்துடனேயே இருந்தது அருகில் இருந்த பலரின் அனுபவ உண்மை. சுவாமிகளின் சமாதி பிரதிஷ்ட்டைக்கு பின் தொடர்ந்து மூன்று நாட்களும் அவ்வபொழுது பீடத்தில் இருந்து சங்கு நாதம் ஒலித்து கொண்டிருந்ததாக அப்பகுதி வாசிகளின் தகவல். மேலும் அந்த மூன்று நாட்களும் வெள்ளை நாகம் வடிவில் பீடத்தின் மேல் சுவாமிகள் பலருக்கும் காட்சி தந்துள்ளார்கள்.

சுவாமிகளின் ஜீவ அடக்கத்தின் பின்பு பல ஊர்களில் அவர் சஞ்சரிக்கும் காட்சிகளை பலரும் பல ஊர்களில் இருந்து கண்டதாக தகவல் கொடுத்துள்ளனர். சிவகாசி, திருப்பூர், கோவை, ராஜபாளையம், மதுரை, பழனி, சென்னை, வடமதுரை, அய்யலூர், திருச்சி போன்ற ஊர்களில் காட்சி தந்துள்ளதாக தகவல். இப்படி பலருக்கும் பல நன்மைகளையும் செய்தாலும் சுவாமிகளின் பெயர், ஊர், இருப்பிடம் போன்ற விபரங்கள் யாருக்கும் தெரியாதலால் சுவாமிகளின் அற்புதங்களும் அருமையும் பலருக்கும் சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in dindugul dindugul siddhargal , jeeva samadhi in dindugul dindugul siddhar , siddhar temple in dindugul dindugul siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in dindugul , siddhar temples in dindugul dindugul sitthargal , siddhars in dindugul ,

No comments:

Post a Comment