Tourist Places Around the World.

Breaking

Thursday, 6 June 2019

சித்தர் ஸ்ரீ பூண்டி மகான் / Poondi Mahan

சித்தர் ஸ்ரீ பூண்டி மகான்

Poondi Mahan

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


இருபதாம் நுற்றாண்டு இறுதியில் தென் தமிழகத்தில் நினைக்க முக்தி தரும் திருவண்ணமலைக்கு அருகில் போளூர் தாலுகா கலசபாக்கதில் இருந்து 3 கி.மீ தொலைவில் ஒரு ஞானி இருந்தார். அவருக்கென்று பேர் கூட கிடையாது. ஜீவ முக்தி அடைவதற்கு முன்பு சில காலம் பூண்டி கிராமத்தில் தங்கி இருந்ததால் பூண்டி மகான் என்றும், பூண்டி சாமியார் என்றும் மக்கள் அழைக்கலாயினர். சேயாற்றின் கரையில் பெரும்பாலும் இருப்பார் என்பதால் பூண்டி மகான் ஆற்றுசுவாமிகள் என்றும் அழைக்கலாயினர்.

வட ஆற்காடு மாவட்டம் வேலூருக்கு தெற்கே செல்லும் நெடுஞ்சாலை பாதையிலுள்ள போளூர் என்கிற நகருக்கு மேற்கேயுள்ள கலசபாக்கத்தில் வாழ்ந்தவர்.இவர் சென்ற நூற்றாண்டின் வாழ்ந்த சித்தர் என்பதால் இவரைப் பற்றி பல அமானுஷ்ய தகவல்கள் போளூர், கலசபாக்கம், பூண்டி போன்ற இடங்களில் வாழும் மக்களால் பிரமிப்பாக பேசப்படுகிறது.

நீண்ட தாடியும் தீட்சண்ய பார்வையுமாக மிக எளிமையான மனிதரைப் போல் காட்சியளிக்கும் சித்திரை அவதாரப் புருஷனாக அந்தப்பகுதி மக்கள் பக்தியோடு வணங்கினார்கள். கலசபாக்கம் என்பது ஆற்றங்கரைமான கிராமம் ஆகும். தொடர்ந்து ஒருநாள் முழுதும் மழை பெய்தால் ஆறு முழுதும் வெள்ளம் பெருகி காட்டாறு போல் பொங்கி பெருக்கெடுத்து ஓடும். பூண்டி மகான் அந்த கிராமத்திற்கு வந்தபோது யாரோ ஒரு பித்தன் என்பது போலத்தான் அந்த கிராம மக்கள் பார்த்தனர்.ஆனால் அவருக்குள்ள அமானுஷ்ய சக்தியும், அவர் தந்த திருநீறு மற்றும் மூலிகை இலைகளால் எந்த நோயையும் குணப்படுத்தி அக்கிராம மக்களை காத்து வந்தார். இதனால் பாமரமக்களும், மற்றவர்களும் அவரை தேடியும், நாடியும் வந்து வணங்கி அன்பு செலுத்த ஆரம்பித்தனர். அந்த ஆற்றங்கரை மணல் மேட்டிலே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஒருசமயம், தொடர்ந்து வானம் பெய்த்தால் மழை நின்று போனது. மழை இல்லாத காரணத்தால் பயிர் தொழில், விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் வறுமைச்சூழலில் வேதனையும், அவதியும் பட்டனர், ஊரின் கிராம முன்சீப் கிராம மக்களை ஒன்று கூட்டி , கிராமத்தைக் காப்பாற்றும் படி நாளை மகானிடம் சென்று முறையிடலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றிரவு.., முன்சீப் மகானிடம் எப்படி கேட்பது....,அவர் தியானத்தால் மழை பெய்யுமா? அவருக்கு அந்த அளவு ஆற்றல் இருக்கிறதா? உண்மையிலேயே அவர் சித்தர்தானா? என்று பலவாறு சிந்தித்த வண்ணம் தூங்கிவிட்டார். நள்ளிரவு..., ஆழ்ந்த தூக்கத்திலிருந்த போது, யாரோ கன்னத்தில் மென்மையாக தட்டுவது போல் உணர..., எதிரே மஞ்சள் நிற ஒளியோடு மகான் நின்றிருந்தார்.

‘’என்ன முனிசீப்.., இந்த மகான் நிஜமாகவே சித்தனா? இவனுக்கு அந்தளவு சக்தி இருக்கா! இவன்கிட்டே போய் கேட்டா மழை பெய்யுமான்னு நினைக்கிறியா? கேட்டார். இது கனவா... நிஜமா என்று உணர்ந்திடும் நிலையில்லாத முன்சீப் இருந்தார். ”ஐயா..., தப்பாக நினைக்க வேண்டாம். நீங்கள் கடவுள் என நான் நம்புகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்..’ பணிந்து வேண்டினர்.

’’என்ன முனிசீப் பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க... ஒரு செயலை செஞ்சு முடிக்கறதுக்கு முன்னாடி எப்படி நம்பமுடியும்? இது இயற்கைதானே! சரி... சரி இப்ப எழுந்து உன் வீட்டு வாசலுக்குப் போ நான் நிஜமா பொய்யான்னு தெரியும்...’ என்று சொல்ல அடுத்த நொடி ஏதோ உணர்ந்தவராக முனிசீப் சடாரென எழுந்து உட்கார்ந்தார். அப்படி என்றால் இவ்வளவு நேரம் சித்தர் நம் எதிரில் நின்று பேசியது கனவா? ஆனால், அது கனவாக தெரியவில்லையே..., நிஜத்தில் நடப்பது போலல்வா இருந்தது ‘’? என்று வியந்து யோசித்தபடி வீட்டு வாசலுக்கு வந்தார்.

அப்போது லேசாக தூறல் விழ ஆரம்பித்தது. அடுத்த சில விநாடிகளில் ‘பளீர்’ என்று மின்னல் வெட்டி மழை வலுக்க ஆரம்பித்தது. கொஞ்ச கொஞ்ச வலுத்த மழை பேய் மழையாகி, இடி மின்னலுடன் பெரும் மழையாகியது.

நள்ளிரவு துவங்கி, விடியல் வரை அடைமழையாய் பெய்ததால் பதினைந்து ஆண்டுகள் மழையின்றிகாய்ந்து கிடந்த ஆற்றில் வெள்ளம் வர துவங்கியது. விடிந்ததும் மனசு முழுக்க சித்தரின் நினைவுகள் நிறைந்திருந்தது. நடந்த விபரங்களை ஊர் மக்களிடம் கூறி, அவரை காண ஆற்றங்கரக்குச் சென்றார்.அங்கே சித்தர் இல்லை. பலவிடங்களில் தேடியும் சித்தர் காணவில்லை. அப்போது கூட்டத்திலிருந்த சிறுவன், ‘’அங்க பாருங்க சாமியார் உட்கார்ந்திருந்த இடத்திலே மண் மூடியிருக்கு..; என்று கூற மண் மூடிய இடத்தை தோண்ட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் மண்ணுக்கடியில் இருந்த சித்தரை வெளியே தூக்கி எடுத்தனர். அதிர்ச்சியில் எல்லோரும் நெகிழ்வாக கண்கலங்கி....., சட்டென்று கண் திறந்தார்.

’’போதுமா... நீங்க கேட்ட மாதிரி மழை பெய்துவிட்டது...’’ என்று கூற ஊர் மக்கள் யாவரும் நெகிழ்வாக கரம் கூப்பி வணங்கினர்..

எப்பொழுது இந்த பகுதிக்கு வந்தார்?, எங்கிருந்து வந்தார்?, என எவ்வித தகவலும் கிடையாது. அவருடைய பெற்றோர் யார்?, உற்றார் உறவினர் யார்? என எந்த ஒரு செய்தியும் ஒருவருக்கும் தெரியாது.

சுமார் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கலசபாக்கம், குருவிமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தென்பட தொடங்கியாதாக சிலர் கூறுகின்றனர். மனம் போன போக்கில் பிச்சைக்காரர் போன்று திரிந்து கொண்டு, எவ்வித ஆன்மிக அடையாளமும் இன்றி இருந்ததால் பொது மக்கள் யாரும் கவனிக்கவும் இல்லை கண்டுகொள்ளவும் இல்லை . 

அவரது செய்கைகள் சிலருக்கு பைத்தியக்காரத்தனமாக தோன்றியது. அவர்கள் அவரை ஏளனம் செய்த போதும் எதிர்ப்போ மறுப்போ கூறாமல் அமைதியாக அங்கிருந்து சென்றுவிடுவார். புற உலக சிந்தனை இன்றி சுயம்பாக இருப்பதை ஒரு சில ஆன்மிக பெரியவர்கள் கவனிக்கலாயினர்.

சித்தர் ஸ்ரீ பூண்டி மகானின் பொன்மொழிகள்:

தன் பசித்துன்பத்தைக் போருத்துக்கொல்லுதலும், பிறருக்கு மனதினாலும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் தவத்தின் வலிமையாகும்.

பணம் எட்டாத உயரமும், பாயாத பாதாளமும் இல்லைதான்; ஆனால் சத்தியம் பணத்தின் நிழலில் தங்கக் கூட தயங்குகிறது.

இடி விழுந்தவனுக்கு சிகிச்சை பலிக்காதது போல, நன்றி மறந்தவனுக்கு என்றும் நன்மை கிட்டாது.

மக்களை மக்களென நினைத்து பணியாற்று செய்கை வந்தாலொழிய நாடு நன்மை பெறாது.

மேகம் கருகி மழை பொழிகிறது. மனிதன் பிறனைக் கருக்கி தானே கெடுகின்றான்.

தன்னிலும் இழிந்த ஒருவனைத் தனக்கு சமமாக நினைத்து தன் கடமையை செய்பவன்தான் பெரிய மனிதனும், அறிவுடையவனுமானவன்.

எல்லோரும் தீய பலன்களிலிருந்து தப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் அவற்றை செய்வதில் எல்லோரும் ஒன்று போல் தயக்கம் காட்டுவதில்லை.

மனிதன் மனதில் பூசை செய்து தான் நினைத்த காரியம் நடக்காததை நினைத்து நொந்து மடிகிறான். மனதில் பூசை செய்வதை விட ஜீவனில் பூசை செய்வதே சிறந்தது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in thiruvannamalai , thiruvannamalai siddhargal , jeeva samadhi in thiruvannamalai , thiruvannamalai siddhar , siddhar temple in thiruvannamalai , thiruvannamalai siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in thiruvannamalai , siddhar temples in thiruvannamalai , thiruvannamalai sitthargal , siddhars in thiruvannamalai , 

No comments:

Post a Comment