கீரை மஸ்தான் சித்தர்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
கீரை மஸ்தான் சித்தர் எட்டயபுர பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மிகப் பிரபலமாகத் திகழ்ந்திருக்கின்றார். இவரது இயற் பெயர் தெரியாது. இவர் கீரையை மசித்து தினம் தினம் சாப்பிட்டுவருவாராம். இதனால் கீரை மசித்தான் என்று வழக்கிலிருந்து பின்னர் இப்பெயர் கீரை மஸ்தான் என மாறி விட்டதாம்.
அன்றாடத் தேவைக்குள்ள தங்கத்தை உருவாக்கி அதனை வைத்து வாழ்ந்து வந்தாராம் கீரை மஸ்தான். எட்டயபுரத்தில் தெய்வீகத் தன்மை வாய்ந்த மகான்களின் சமாதிகள் இருப்பதாகவும் இது ஒரு சக்தி பூமி என்றும் கூறி மகிழ்ந்தார். இங்கு தவசி தம்பிரான், மௌன குருசாமி, கீரை மஸ்தான், உமறுப் புலவர், முத்துசாமி தீஷிதர், போன்றோர் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர்.
ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் தவசி தம்பிரான். அவரது சமாதியில் அவருக்குத் தினம் காலை 7:30க்கும் மாலை 4:30க்கு பூஜை நடக்கின்றது. காலையில் அபிஷேகம் முடித்து சாதம் பால் பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அதே போல மாலை ரொட்டி, பால், பழம் வைத்து பூஜை செய்யப்படுகின்றது. அவரைப் பற்றி பல கதைகள் உண்டாம். அதில் ஒன்று - தவசி தம்பிரான் குருமலையில் இருந்த போது அவரைத் தேடி பசு மாடு ஒன்று போய் நிற்குமாம். அவர் பால் கறந்து குடித்தவுடன் பசுமாடு சென்று விடுமாம். ஒருவர் எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மிகச் சிறிய குகையில் தான் தவசி தம்பிரான் வாழ்ந்திருக்கின்றார். இங்குள்ள சமாதிக்குக் கூட மிகச் சிறிய வாசல்தான் அமைத்திருக்கின்றார்கள். கீரை மஸ்தான் சமாதியைவிட மிகச் சிறிய அளவிலான சமாதி அது.
கீரை மஸ்தான் சமாதி மஞ்சள் நிறத்தில் அமைந்த ஒரு கோயில். சிறிய பூந்தோட்டம் போன்ற ஒரு அமைப்பு. அதற்கு நடுவே சமாதி அமைக்கபப்ட்டுள்ளது. சமாதிக்கு மேலே சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
கோயிலுக்குப் பக்கத்தில் குளங்கள் இருக்கின்றன. பாதை நடக்க முடியாதவாறு முள் புதற்கள் மண்டிக் கிடக்கின்றன. இந்தக் குளத்தில் தான் கீரை மஸ்தான் குதித்து விழுவாராம். அவர் அப்படி விழும் போது அவர் உடல் 9 துண்டுகளாக தனித்தனியே பிரிந்து விழுமாம். இதனால் அவருக்கு நவயோகி என்ற ஒரு பெயர் உண்டாம். குளத்திலிருந்து மேலே எழும்பி வரும் போது 9 பாகங்களும் இனைந்து முழுமையாகி வருவாராம். கீரை மஸ்தானுக்கென்றே பிரத்தியேகமாக இந்தக் கிணற்றினை எட்டயபுரத்து மன்னர் வழங்கியிருக்கின்றார்.
கீரை மஸ்தான் பாடல்களோ நூல்களோ எழுதிய ஒரு சித்தரல்ல. அவர் வாழ்ந்த கால கட்டத்தில் பல அதிசயங்களைச் செய்து மக்களை ஆச்சிரியப் படுத்தியிருக்கின்றார். தினமும் சிவ பூஜை செய்து தங்கத்தை உருவாக்கி மக்களுக்கு காண்பித்து அவர்களை ஈர்த்திருக்கின்றார். இவர் எட்டயபுர மக்களுக்கு ஒரு அதிசயமான மனிதராகவே வாழ்ந்து மறைந்திருக்கின்றார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
No comments:
Post a Comment