Tourist Places Around the World.

Breaking

Thursday 30 April 2020

அன்னை மாயம்மா / Annai Mayamma

அன்னை மாயம்மா

Annai Mayamma

பராசக்தியின் அவதாரமாய் எல்லோராலும் போற்றி வணங்கப்படும் அன்னை மாயம்மா ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரிக் கடற்கரையில் அருளாட்சி புரிந்து வந்துள்ளார்கள்.
மாயம்மா கன்னியாகுமரிக்கு எங்கிருந்து வந்தார்?அவரது இயற்பெயர் என்ன ? வயது போன்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. எத்தனை ஆண்டுகளாக இங்கு தென்படுகிறார் போன்ற விபரங்களும் மறைபொருளே, வடநாட்டிலிருந்து சுற்றுலா வந்தவர்கள் மத்தியில் வழிதவறிப் போய் இப்பகுதியில் தங்கியிருக்கக் கூடும் என்றோரு யூகமும் உலா வருகின்றது,

ஆதியாய், அநாதியாய் விளங்கும் பரம்பொருளைப் போல எந்த ஒரு தகவலும் தெரியமுடியாமல் வாழ்ந்த அன்னைக்கு மாயம்மா என்ற பெயரும் ஏற்புடையதே,!






கன்னியாகுமரியில் அன்னை 1920ம் ஆண்டு வாக்கில் முதன்முதல் தென்பட்டதாகக் கூறுகின்றனர், அன்று கண்டது போலவே அவரது தோற்றம் மாறாமல் இருப்பதாகக் கூறுகின்றனர், மூப்புக்கு அடையாளமாக உடல் முழுவதும் சுருக்கங்கள். கண்களை இடுக்கிய பார்வை கால்களை எப்போழுதும் நீட்டிய வண்ணமே உட்காருதல் இவையே மாயம்மா.


கடலில் குளிப்பதென்றால் பெரும் விருப்பம், இந்தக் குளியலுக்குக் கால நேரமும் கிடையாது, விதிமுறைகளும் இல்லை, கடல் நீரால் தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொள்வார், சில நேரம் சிறு துணி உடலில் இருக்கும், சில நேரம் அதுவும் கூட இன்றி கடல்நீரில் முழ்கி எழுவார், சுழல் மிகுந்த பகுதியில் எவ்விதத் தயக்கமுமின்றி நீராடுவார், நள்ளிரவில் கூட கழுத்தளவு நீரில் நின்று நீராடுவார்.




ஒவ்வொரு நாளும் கடலில் குளிக்கும் போது சிப்பிகள், பாசிகள் இவற்றைப் பொறுக்கி எடுத்து வருவார், கரையிலே பச்சை வாழைப்பட்டை கிளிஞ்சல்கள் ஆகியவற்றைச் சேர்த்து மலைபோல் குவித்து இரவில் தீ மூட்டுவார், ஈரப்பசையுடன் இருக்கும் அத்தனையும் கொழுந்து விட்டெரியும், அதைப் பார்த்தால் ஏதோ யாகம் பண்ணுகிற மாதிரி இருக்கும், அப்படி எரியும் பொழுது வெறுங் கையாலேயே நெருப்பை அலட்சியமாகத் தள்ளுவார், வாய் ஏதேதோ முணுமுணுக்கும்.முழுக்கவனமும் யாகத்தீயில் லயித்திருக்கும், சுற்றுப்புறச் சுழலை மறந்திருப்பார். அது என்ன யாகமோ? யோக நிலையோ?யாரறிவார்?

மாயம்மா யாரிடமும் அதிகம் பேசியதில்லை, சத்குரு ஞானந்தகிரி சுவாமிகள் போன்ற மகான்கள் மாயம்மாவை ஒரு தெய்வீக அவதாரமாகவே கருதினர்.


mahans in kanyakumari , kanyakumari siddhargal , jeeva samadhi in kanyakumari , kanyakumari siddhar , siddhar temple in kanyakumari , kanyakumari siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in kanyakumari , siddhar temples in tamil nadu , lady siddhar ,

No comments:

Post a Comment