ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அதிசய கோவில்!
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
மலேசியாவில், முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்ட,
ராஜகாளியம்மன் கோவில், உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோகோர் பாரு என்ற நகரத்தில், கட்டப்பட்டுள்ள இந்த கோவில், மிகவும் பழமையானது. 1922ல், சிறிய குடிலில், இந்த கோவில் செயல்பட்டு வந்தது. 1991ல், விரிவாக்கம் செய்யப்பட்டது. சில மாற்றங்களுடன், 1996ல், பக்தர்களின் தரிசனத்துக்காக, மீண்டும் திறக்கப்பட்டது. கோவிலின் தலைமை குருக்கள், ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி, சில ஆண்டுகளுக்கு முன், பாங்காக் சென்றிருந்தார். அப்போது, ஒரு இடத்தில், தூரத்தில், வைரக்கல் மின்னுவதை போன்று, ஒளிவீசுவதை, பார்த்தார். அங்கு சென்று பார்த்தபோது, ஒளிவீசிய அந்த இடம், ஒரு கோவில் என்பதையும், அது, முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டிருப்பதையும், பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
அப்போது தான், ராஜகாளியம்மன் கோவிலையும், இதேபோல், நேர்த்தியாகவும், எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என, முடிவெடுத்தார். இதன்பின், மலேசியா திரும்பிய அவர், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார். கோவிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்கள் முழுவதும், பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. தரைப் பகுதியில், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப் பட்டன. நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகள், இந்த கோவிலில் பொருத்தப்பட்டன. கோவிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை ஆகிய அனைத்து பகுதிகளும், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டன.
இந்த கோவிலில் பொருத்துவதற்காகவே, ஒளியை, வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய, மின் விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டன. இந்த விளக்குகளின் வெளிச்சம், கண்ணாடிகளில் பட்டு, பிரதிபலிக்கும் அழகை பார்ப்பதற்கு, கோடி கண்கள் வேண்டும். கோவில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடைகள் மூலமும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் கிடைத்த பணத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில், ராஜகாளியம்மன் கோவில், நேர்த்தியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒளி வெள்ளத்தில், சொர்க்கம் போல் மிதக்கும் இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காகவும், இதன் அழகை காண்பதற்காகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்த அழகிய கோவில், மலேசியாவின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
No comments:
Post a Comment