Tourist Places Around the World.

Breaking

Friday, 1 May 2020

மகா அவதார் பாபாஜி / Mahavatar Babaji

மகா அவதார் பாபாஜி

Mahavatar Babaji

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


பாபாஜியின் இயற்பெயர் நாகராஜ்.  பெற்றோர் நம்பூதிரி பிராமணக் குடும்பத்தினர் ஆவர். அவர்களின் வம்சம் கேரளாவின் மலபார் கடற்கரை பகுதியில் இருந்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே பரங்கிப்பேட்டைக்கு வந்து விட்டனர். பாபாஜி_நாகராஜ் கி.மு. 1203, நவம்பர் 30 ஆம் நாள் தமிழ் நாட்டில் கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பரங்கிப் பேட்டை என்னும் ஊரில் வசித்து வந்த நம்பூதிரிப் பிராமணத் தம்பதியருக்கு குழந்தையாக பிறந்தார்.

கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்த அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயரிடப்பட்டது.  அவருடைய ஐந்து வயதில், ஒரு நாள் பரங்கிப்பேட்டை சிவன் கோவிலில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரது அழகால் கவரப்பட்ட வெளிநாட்டு வியாபாரி ஒருவர் குழந்தையை விற்க நினைத்து தூக்கிச் சென்று விட்டார்.  அவர் நாகராஜை கல்கத்தா கொண்டு சென்று அங்கு ஒரு பணக்காரனுக்கு அடிமையாக விற்றுவிட்டார். சில காலம் சென்றபின் இரக்க சித்தமுடைய அந்தப் பணக்காரர் நாகராஜை விடுவித்து விட்டார்.  விடுவிக்கப் பட்டதும் கல்கத்தாவிலிருந்த சந்நியாசிகளின் குழுவுடன் போய்ச் சேர்ந்து கொண்டார் நாகராஜ். அவர்களிடம் வேத உபநிடதங்களையும் இதிகாசங்களையும் கற்று சிறந்த அறிஞனானார்.

பாபாஜி 11 வயதானபோது (கி.பி.1214ல்) இலங்கை சென்று கதிர்காமம் என்னும் திருத்தலத்தில் மகாசித்தர் போக நாதரை சந்தித்தார்.  பாபாஜி அங்கு மகா சித்தர் போக நாதரை குருவாக அடைந்தார். மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர் அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா யோகப் பயிற்சி அளித்தார்.  இப்பயிற்சி இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது. இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள், பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள் தியானமுறைகள் ஆகியவை அடங்கும்.  தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேயே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார்.

பொதிகை மலையில் ஒளி உடலுடன் வாழ்ந்துவரும் போகரின் குருவான அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி தீட்சையைப் பெற திருகுற்றால மலையை அடைந்தார். *(அகத்தியரே ஆதிகுருவும், கிரியா யோகத்தின் மூலகுருவும் ஆவார்)*  குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம் நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர வாழ்த்தி அருளினார். அதோடு..... "மகனே நீ இமய மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக நீ இது வரை உலகம் காணாத அளவிற்கு மிகப் பெரிய சித்த புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும் வாழ்ந்து வருவாய்" ....என்று வாழ்த்தி மறைந்தார்.

ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய மலையின் ஒரு முகட்டில் தவக்குடில் அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து வருவதாக வரலாறு கூறுகிறது.  பாபாஜியின் தவக்குடில் இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல் உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு "கொரிசங்கர பீடம்" என்று பெயர்.  இரண்டாயிரம் ஆண்டுகளாக இமயமலை யில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி, சிவாபாபா என்று பல பெயர்களில் அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும் 16 வயது சிறுவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கடவுளைக் காணும் ஆர்வம் மிக்கவர்களாக வும், கடவுளை காணும் வழி தெரியாமல் தவித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்து வருபவர்கள் தெய்வீக உணர்வை பெறுவதற்கு உதவி செய்வதையே பாபாஜி தம் குறிக்கோளாக கொண்டிருக்கிறார் என அவரது வரலாறு கூறுகிறது.  உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள் பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி. இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு செய்பவர்கள் மூலமாக உலகுக்கு வெளிப்படுகிறது.

பாபாஜி குகை துங்கநாத் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து செல்ல வேண்டும். குகை போகும் வழி வரை செல்ல ஊர்தி வசதி உண்டு.  கடுங்குளிர்.சாலை முடிவிலிருந்து குகை மேலே ஏற வேண்டும்.  முடிவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பெரிய புக் ஸ்டால் வைத்து பாதைகளை சரிபடுத்தி உள்ளார்.  சின்ன குகைதான். தியானம் செய்தால் மனம் லயித்து சிந்தனை ஏதும் இல்லாமல் இருந்தால் உடலில் அதிர்வு அலைகள் உணரலாம்.

குகை மேல் போகமுடியாது. ஆனால் அங்கு தான் சொர்ணபுரி என்ற இடத்தில் இன்று ம் இரவு 12மணி அளவில் பூஜைமணி அடிக்கும் ஒலி வருகிறது என அங்குள்ள குடிசைவாசிகள் தெரிவிக்கிறார்கள்.  எந்த தொல்லை ஏற்பட்டாலும் பாபா என அழைத்தால் ஓடிவந்து நீக்குவதாக ஆடு மேய்க்கும் சிறுவர்கள் தெரிவித்தார்கள்.  படிப்பு வசதி அங்கு இல்லை. ஆனால் இயற்கை அன்னை பரந்து மனதை கொள்ளை கொள்கிறார்கள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


cuddalore sithargal, mahans in cuddalore , cuddalore siddhargal , jeeva samadhi in cuddalore , cuddalore siddhar , siddhar temple in cuddalore , cuddalore siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in cuddalore , siddhar jeeva samadhi temples in tamil nadu , 

No comments:

Post a Comment