Tourist Places Around the World.

Breaking

Wednesday 24 June 2020

இடைக்காட்டுச் சித்தர் பாடல் (Part 3/3) / Idaikadar Siddhar Songs in Tamil

இடைக்காட்டுச் சித்தர் பாடல் - (Part 3/3)

Idaikadar Siddhar Songs in Tamil (Part 3/3)

இடைக்காட்டுச் சித்தர் பாடல் (Part 1/3)

இடைக்காட்டுச் சித்தர் பாடல் (Part 2/3)

குயிலொடு கிளத்தல்

85: கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே - கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.
சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே - நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


86: உலகமோக் காளமாமென் றோதுகுயிலே - எங்கள்
உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே - எழு
பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.

87: சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே - எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே - மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.

88: எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே - மனம்
ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே
நட்டணையைச் சார்ந்தறிந்து கொள்ளுகுயிலே - ஆதி
நாயகனை நினைவில்வைத் தோதுகுயிலே.

மயிலொடு கிளத்தல்

89: ஆடுமயி லேநட மாடுமயிலே - எங்கள்
ஆதியணி சேடனைக்கண் டாடுமயிலே
கூடுபோகு முன்னங்கதி கொள்ளுமயிலே - என்றுங்
குறையாமல் மோனநெறி கொள்ளுமயிலே.

90: இல்லறமே யல்லலாமென் றாடுமயிலே
பக்தி இல்லவர்க்கு முத்திசித்தி இல்லைமயிலே
நல்லறமே துறவறங் காணுமயிலே - சுத்த
நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே.

91: கற்றூணைப் போல்மனதைக் காட்டுமயிலே - வரும்
காலனையுந் தூரத்தி லோட்டுமயிலே
பற்றூ டுருவவே பாயுமயிலே அகப்
பற்றுச்சறு மிறில்லாமற் பண்ணுமயிலே.

அன்னத்தொடு கிளத்தல்

92: சிறுதவளை தான்கலக்கிற்
சித்திரத்தி னிழன்மறையும்
மறுவாயைத் தான்கலக்கின்
மதிமயங்கு மடவனமே.

93: காற்றின் மரமுறியுங்
காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந்
தூரப்போம் மடவனமே.

94: அக்கினியால் பஞ்சுபொதி
அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே
பாவம் போம் மடவனமே.

95: குளவிபுழு வைக்கொணர்ந்து
கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை
வசப்படுத்து மடவனமே.

96: அப்புடனே யுப்புச்சேர்ந்
துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட
னொன்றிநில்லு மடவனமே.

97: காய்ந்த இரும்புநிறங்
காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து
வளம்பெறுநீ மடவனமே.

புல்லாங்குழலூதல்

98: தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
இல்லையென் றூதுகுழல் - கோனே
இல்லையென் றூதுகுழல்.

99: இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
அந்தமா யூதுகுழல் - கோனே
அந்தமா யூதுகுழல்.

100: மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
கானமா யூதுகுழல் - கோனே
கானமா யூதுகுழல்.

101: நாற்போற் பொறிகளை நாநாவிதம்
விட்டோர் பேயரென் றூதுகுழல் - கோனே
பேயரென் றூதுகுழல்.

102: ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
சாடியே யூதுகுழல் - கோனே
சாடியே யூதுகுழல்.

103: ஆட்டுக்கூட் டங்களை அண்டும் புலிகளை
ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

104: மட்டிக் குணமுள்ள மாரீச நாய்களை
கட்டிவைத் தூதுகுழல் - கோனே
கட்டிவைத் தூதுகுழல்.

105: கட்டாத நாயெல்லாம் காவலுக்
கெப்போதும் கிட்டாவென் றூதுகுழல் - கோனே
கிட்டாவென் றூதுகுழல்.

106: பெட்டியிற் பாம்பெனப் பேய்மன
மடங்க ஒட்டியே யூதுகுழல் - கோனே
ஒட்டியே யூதுகுழல்.

107: எனதென்றும் யானென்றும் இல்லா
திருக்கவே தனதாக வூதுகுழல் - கோனே
தனதாக வூதுகுழல்.

108: அற்றவிடமொன்றே யற்றதோ டுற்றதைக்
கற்றதென் றூதுகுழல் - கோனே
கற்றதென் றூதுகுழல்.

பால்கறத்தல்

109: சாவா திருந்திடப் பால்கற - சிரம்
தன்னி லிருந்திடும் பால் கற வேவா
திருந்திடப் பால்கற - வெறும்
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.

110: தோயா திருந்திடும் பால்கற - முனைத்
தொல்லை வினையறப் பால்கற
வாயா லுமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார வுண்டிடப் பால்கற.

111: நாறா திருந்திடும் பால்கற - நெடு
நாளு மிருந்திடப் பால்கற மாறா
தொழுகிடும் பால்கற - தலை
மண்டையில் வளரும் பால்கற.

112: உலகம் வெறுத்திடும் பால்கற - மிக்க
ஒக்காள மாகிய பால்கற கலசத்
தினுள்விழப் பால்கற - நிறை
கண்டத்தி னுள்விழப் பால்கற.

113: ஏப்பம் விடாமலே பாற்கற - வரும்
ஏமன் விலக்கவே பால்கற.
தீப்பொறி யோய்ந்திடப்பால்கற - பர
சிவத்துடன் சாரவே பால்கற.

114: அண்ணாவின் மேல்வரும் பால்கற - பேர்
அண்டத்தி லூறிடும் பால்கற
விண்ணாட்டி லில்லாத பால்கற - தொல்லை
வேதனை கெடவே பால்கற.

கிடை கட்டுதல்

115: இருவினையான மாடுகளை
 ஏகவிடு கோனே - உன்
அடங்குமன மாடொன்றை
யடக்கிவிடு கோனே.

116: சாற்றரிய நைட்டிகரே
 தற்பரத்தைச் சார்வார் - நாளும்
தவமவமாக் கழிப்பவரே
சனனமதில் வருவார்.

117: அகங்கார மாடுகண்மூன்
றகற்றிவிடு கோனே - நாளும்
அவத்தையெனும் மாடதைநீ
யடக்கிவிடு கோனே.

118: ஒருமலத்தன் எனுமாட்டை
ஒதுக்கிக்கட்டுக் கோனே - உடன்,
உறையுமிரு மலந்தனையு
மோட்டிக் கட்டுகோனே.

119: மும்மலத்தன் எனுமாட்டை
முறுக்கிக்கட்டுகோனே - மிக,
முக்கால நேர்மையெல்லா
முன்பறிவாய் கோனே.

120: இந்திரியத் திரயங்களை
இறக்கிவிடு கோனே - என்றும்
இல்லையென்றே மரணங்குழு
லெடுத்தூது கோனே.

121: உபாதியெனும் மூன்றாட்டை
ஓட்டிவிடு கோனே - உனக்கு
உள்ளிருக்குங் கள்ளமெல்லாம்
ஓடிப்போங் கோனே.

122: முக்காய மாடுகளை
முன்னங்கட்டு கோனே - இனி
மோசமில்லை நாசமில்லை
முத்தியுண்டாங் கோனே.

123: கன்மபல மாடுகளைக்
கடைக்கட்டு கோனே - மற்றக்
கன்மத்திர யப்பசுவைக்
கடையிற்கட்டு கோனே.

124: காரணக்கோ மூன்றனையுங்
கால்பிணிப்பாய் கோனே - நல்ல
கைவசமாஞ் சாதனங்கள்
கடைப்பிடிப்பாய் கோனே.

125: பிரமாந்த ரத்திற் பேரொளி
காணெங்கள் கோனே - வாய்
பேசா திருந்து பெருநிட்டை
சாரெங்கள் கோனே.

126: சிரமதிற் கமலச் சேவை
தெரிந்தெங்கள் கோனே - முத்தி
சித்திக்குந் தந்திரஞ் சித்தத்
தறியெங்கள் கோனே.

127: விண்ணாடி வத்துவை மெய்யறிவிற்
காணுங் கோனே - என்றும்
மெய்யே மெய்யிற்கொண்டு
மெய்யறிவிற் செல்லுங் கோனே.

128: கண்ணாடி யினுள்ளே
கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக்
கண்ணன்றிக்கண்ணாடி
காணவொண்ணா தெங்கள் கோனே.

129: சூனியமானதைச் சுட்டுவா
எங்குண்டுகோனே - புத்தி
சூக்குமமே யதைச்சுட்டு
மென்றெண்ணங் கொள் கோனே.

130: நித்திய மானது நேர்படி
லேநிலை கோனே - என்றும்
நிற்குமென் றேகண்டு நிச்சயங்
காணெங்கள் கோனே.

131: சத்தியும் பரமுந் தன்னுட்
கலந்தே கோனே - நிட்டை
சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே
காணலாங் கோனே.

132: மூகைபோலிருந்து மோனத்தைச்
சாதியெங்கோனே - பர
மூலநிலைகண்டு முட்டுப்
பிறப்பறு கோனே.

இடைக்காட்டுச் சித்தர் பாடல் (Part 1/3)

இடைக்காட்டுச் சித்தர் பாடல் (Part 2/3)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar idaikadar padal , siddhar idaikadar padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,


No comments:

Post a Comment