Tourist Places Around the World.

Breaking

Tuesday 18 August 2020

சாய்பாபா நிகழ்த்திக்காட்டிய அற்புதம் - ஆன்மீக கதைகள் (127)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சாய்பாபா தன் பக்தர்களை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடுவதில்லை என்பதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய பல அற்புதங்கள் உள்ளன. அப்படி ஒரு அற்புதத்தை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். நானா சந்தோர்க்கர் (பாபாவின் பக்தர்) ஒரு கோடை நாளில் ஹரிச்சந்திரா என்னும் குன்றின் மீது ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அளவுக்கு அதிகமான தாகம் ஏற்பட்டது. சுற்றுமுற்றும் தேடினர் அனால் எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இவளவு தாகத்தோடு எப்படி மலைஏறுவது என்று வருதினார்.


அப்போது அவர், இன்னேரம் பாபா நம்மோடு இருந்திருந்தால் அவரது அற்புதத்தால் நமக்கு நீர் கிடைத்திருக்கும் என்று தனக்குள் பேசிக்கொண்டார். அந்த நேரத்தில் பாபா நாற்பது மைல்களுக்கப்பால் உள்ள ஷீரடியில் இருந்தார். அப்போது மசூதியில் பக்தர்களோடு உரையாடிக்கொண்டிருந்த பாபா திடீரென, கோடை வெய்யில் கடுமையாக இருப்பதால், குன்றின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் நானா தாகத்தில் தவிக்கிறார். அவருக்கு ஒரு கை நிறையவாவது நீர் அளிக்க வேண்டாமா? என்று கூறுகிறார். அங்கிருந்த பக்தர்களுக்கு பாபா எதை பற்றி பேசுகிறார் என்று ஒன்றும் விளங்கவில்லை.


குன்றின் மேல் இருந்து ஒரு வேடுவன் கீழ் இருகுவதை கண்ட நானா, வேடுவா எனக்கு தாகம் அதிகமாக இருக்கிறது இங்கு எங்காவது குடிப்பதற்கு நீர் கிடைக்குமா என்று கேட்கிறார். வேடுவன் சிரித்தபடியே நீங்கள் அமர்ந்திருக்கு பாறைக்கு கீழே நீர் உள்ளது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிடுகிறான். உடனே நானா அந்த பாறையை நகர்த்தி பார்க்கிறார், என்ன ஒரு ஆச்சர்யம் அங்கு ஒரு கைநிறைய குடிநீர் காணப்பட்டது. அதை பருகிவிட்டு தன் தாகத்தை தனித்துக்கொண்டார் நானா. பல தினங்களுக்கு பின்னர் பாபாவை காண நானா சாந்தோர்க்கர் சீரடிக்குச் சென்றார்.


அப்போது பாபா, என்ன நானா நீங்கள் தாகத்தில் இருந்தபோது நான் உங்களுக்கு நீர் அளித்தேனே அதை நீங்கள் குடித்தீரல்லவா ? என்று கேட்டார். இதை கேட்டதும் நானாவின் உள்ளம் பரவசமானது. ஆன்மீக அன்பால் கண்களில் வழிந்தோடிய நீரோடு பாபாவை வணங்கினார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,  

No comments:

Post a Comment