Tourist Places Around the World.

Breaking

Wednesday, 19 August 2020

குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள் - ஆன்மீக கதைகள் (151)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


பைடணபுரியில் சுலோசனன் என்னும் அந்தணர் இருந்தார். மனைவியை இழந்த இவர், தன் மகள் சுமித்ரையை தாயன்போடு வளர்த்து வந்தார்.  நாட்டியமாடுவதில் வல்லவளான சுமித்ரையின் அழகில் மயங்கிய ஆதிசேஷனான நாகராஜா, அவள் மீது காதல் கொண்டான். ஒரு சந்தர்ப்பத்தில் சுமித்ரை கருவுற்றாள். இவ்விஷயம் ஊரில் பரவியது. அரண்மனைக்கும் விஷயம் சென்றது. அரசன் சுலோசனனையும், சுமித்ரையையும் ஊரை விட்டு விலக்கி வைக்க உத்தரவிட்டான். 


தந்தையும், மகளும் செய்வதறியாது திகைத்தனர். சுமித்ரை தன் நிலைக்கு காரணமான ஆதிசேஷனை நினைத்து வணங்கினாள். ஆதிசேஷன் அவள் முன்தோன்றி, பெண்ணே! உன் வயிற்றில் இருக்கும் குழந்தை சாதாரண குழந்தை அல்ல! தெய்வீகம் நிறைந்த அப்பிள்ளை அறிவில் ஆற்றலிலும் சிறந்து விளங்குவான். இந் நாட்டை ஆளப்பிறந்தவன் அவன். பெரும் புலவன் என்றும் புகழ்  பெறுவான். மன்னனின் ஆணையை ஏற்று  வெளியூருக்குச் செல். எல்லாம் நலமாய் நடக்கும், என்று ஆசி அளித்துவிட்டு மறைந்தான்.  சுலோசனன் சுமித்ரையை அழைத்துக் கொண்டு புரந்தரபுரம் என்னும் ஊருக்குச் சென்று ஒரு குயவர் வீட்டில் தங்கினான். 


அங்கு சுமித்ரை ஆண்குழந்தை பெற்றெடுத்தாள். பிள்ளைக்கு  சாலிவாஹனன் என்று பெயரிட்டனர். பிள்ளையிடம் அவனுடைய தந்தை ஆதிசேஷன் என்பதை தெரிவித்து நல்லமுறையில் சுமித்ரை வளர்த்து வந்தாள். சாலிவாஹனன் மண் பொம்மைகளைச் செய்ய கற்றுக் கொண்டான். யானை, குதிரை பொம்மைகளைச் செய்து, தன்னை ஒரு அரசனாகவும், மற்ற குழந்தைகளை சேனாதிபதி மற்றும் அமைச்சராகவும் கற்பனை செய்து விளையாடி மகிழ்ந்தான். கல்வியிலும் சிறந்து திகழ்ந்தான். இதனிடையே, புரந்தரபுரத்தில் வசித்த தனஞ்ஜெயன் என்னும் வணிகர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் ஆளுக்கொரு பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு இறந்து விட்டார். அப்பொட்டலங்களில் முதல் பிள்ளைக்கு மண்ணும், இரண்டாமவனுக்கு உமியும், மூன்றாமவனுக்கு பொன்னும், நான்காம் பிள்ளைக்கு சாணமும் இருந்தது. 


அவரவருக்குரிய பொட்டலத்தைப் பார்த்துவிட்டு, தந்தையார் ஏன் இந்தப் பொட்டலங்களைத் தந்தார் என்று புரிந்து கொள்ள முடியாமல் விழித்தனர். பலபேரிடம் கேட்டும் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சாலிவாஹனின் புத்திக் கூர்மையை அறிந்து அவனிடம் வந்தனர். விஷயத்தைக் கேட்ட சாலிவாஹனன் சற்றும் யோசிக்காமல் விடையளித்தான்.  மண்ணைப் பெற்ற பிள்ளை நிலத்தையும், உமியைப் பெற்றவன் தானியக் களஞ்சியத்தையும், பொன் பெற்றவன்  ஆபரணப் பெட்டியையும், சாணம் பெற்றவன் ஆடுமாடுகாளையும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று விளக்கம் தந்தான். 


சாலிவாஹனின் விளக்கம் கேட்டு சகோதரர்கள் மகிழ்ந்தனர்.ஒருசமயம் சாலிவாஹனன் மண்குடம் ஒன்றை பொன்குடமாக மாற்றினான். இதைக் கேள்விப்பட்ட விக்கிரமார்க்கன் என்ற மன்னன் அவனை அரண்மனைக்கு வரச்சொன்னான். சாலிவாஹனன் மறுத்துவிட்டான். தன் கட்டளையை மீறிய அவனைக் கொல்ல நேரில் வந்தான். சாலிவாஹனன் தன் தந்தை ஆதிசேஷனை மனதார வணங்கி மன்னனுடன் சண்டையிட்டு வென்றான். மன்னன் நர்மதை நதியின் வடபகுதிக்கு ஓடிவிட்டான். இதன்பிறகு, நர்மதை நதிக்கு தெற்கே உள்ளவர்கள் சாலிவாஹன சகாப்தத்தையும், வடக்கே உள்ளவர்கள் விக்கிரமார்க்க சகாப்தத்தையும் பின்பற்றினர். 


சாலிவாஹன சகாப்தம் கி.பி.78ல் தொடங்கியது. பஞ்சாங்கங்களில் சாலிவாஹன ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தகுதியான பொம்மைகளைக் கொடுத்து, அவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் கதைகளையும் சொன்னால் அவர்கள் முன்னேற்றம் பெறுவார்கள் என்பதற்கு சாலிவாஹனின் வாழ்க்கை ஒரு உதாரணம். -பி. ராமன்பிள்ளை.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,  

No comments:

Post a Comment