Tourist Places Around the World.

Breaking

Wednesday 19 August 2020

திருப்பம் தந்த திருப்பதி - ஆன்மீக கதைகள் (164)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


திருமலைக்கு, ஏழுமலையான் என்றால் ரொம்ப விருப்பம். அவன் வசிப்பது திருநெல்வேலி பக்கம் இருக்கிற காருகுறிச்சி என்ற சின்ன கிராமத்தில்.. பக்கத்து ஊரான சேரன்மகாதேவி நிலக்கிழார் வீட்டில் இவனுக்கு நெல் அளக்கிற வேலை. வருஷத்துக்கு மூன்று கோட்டை நெல் கூலியாகக் கொடுத்து விடுவார் மிராசுதார்.  மிராசுதார் வருஷத்துக்கு ஒரு தடவை திருப்பதிக்கு குடும்பத்துடன் செல்வார். இரண்டு, மூன்று நாள் சவுகரியத்தைப் பொறுத்து திருமலையில் தங்கி ஏழுமலையானைத் தரிசித்து விட்டு வருவார்.  வந்ததும், ஏலே திருமலை! இந்தா புடிலே, என்று ஒரு பொட்டலத்தை நீட்டுவார். கால் லட்டும், காசிக்கயிறு, நாமக்கட்டி, கொஞ்சம் பொரி, கடலை என இருக்கும். 


பவ்வியமாக அதை பத்திரப்படுத்தி வீட்டில் எல்லோருமாக பிரசாதம் எடுத்துக் கொள்வார்கள். திருமலை நாமக்கட்டியை உரசி ஒரு நாமமும் போட்டுக் கொள்வான். ஒருநாள் இரவு வீட்டில் படுத்திருந்த போது, ஏழுமலையானே! பண்ணையார்களெல்லாம் வருஷம் தோறும் உன் சன்னதிக்கு வருகிறார்கள். அது அவர்கள் செய்த பாக்கியம். என்னைப் போன்ற ஏழைகள் உன் சன்னதிக்கு வருவதென்றால் சும்மாவா! காருகுறிச்சியில் இருந்து உன்னைப் பார்க்க பஸ்சுக்கோ, ரயிலுக்கோ டிக்கெட்டே ஆயிரம் ரூபாய் வேண்டும். அங்கே எத்தனை நாள் ஆகுமோ! மற்ற செலவெல்லாம் ஒரு 200 ஆகும். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன். 


சீனீவாசா! நான் சாவதற்குள் உன்னை ஒருமுறை தரிசித்து விட வேண்டும். நடந்தே கூட வந்து விடுவேன். ஆனால், இங்கே கூலி போய்விட்டால், பிள்ளைகள் பசியில் கிடக்குமே! எனக்கு நீ தான் பாதை காட்டணும்,'' என்று மனதுக்குள் உருக்கமாக வேண்டினான். ஒரு புரட்டாசி சனிக்கிழமை வந்தது. அத்தாளநல்லூர் கஜேந்திர வரதப் பெருமாள் கோயில் அங்கே ரொம்ப பிரசித்தம். ஸ்ரீமத் பாகவத்திலே திரிகூடமலைச்சாரலில், கஜேந்திரனை பெருமாள் முதலையிடம் இருந்து மீட்டதாக கதை வரும். அந்த சம்பவம் நடந்த இடத்தில் தான் இந்தக் கோயில் இருக்கிறது. 


திருமலை வருஷம்தோறும் புரட்டாசி சனிக்கு பெருமாளைச் சேவிக்க அங்கே போய்விடுவான். கோயிலில் உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. திருமலை தரையில் துண்டைப் போட்டு அமர்ந்துவிட்டான். புரியுதோ, புரியலியோ... எதையும் கேட்பது திருமலைக்கு பழக்கம்.  திருப்பதி அடிவாரத்தில் வசித்த ஒரு எறும்புக்கு ஏழுமலையானைத் தரிசிக்க ஆசை இருந்தது. ஆனால், ஏழுமலை, பள்ளத் தாக்கெல்லாம் ஊர்ந்தே செல்வது அவ்வளவு எளிதான விஷயமா! அதற்கு ரொம்ப வருத்தம். 


ஒருநாள், ஒரு சிங்கத்தைப் பார்த்தது. அந்த சிங்கம் மலைகளைத் தாண்டி தாண்டி ஏழுமலை உச்சியை அடைவது பற்றி தன் சகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தது. எறும்புக்கு புத்தி வேகமாக வேலை செய்தது. சிங்கத்தின் மேல் போய் ஒட்டிக்கொண்டது. சிங்கம் பாய்ந்தது. அரை மணி நேரத்தில் ஏழுமலையையும் கடந்து உச்சிக்குப் போய்விட்டது. பிறகென்ன! மெதுவாக ஊர்ந்து சன்னதிக்குள் சென்று ஏழுமலையானை தரிசித்தது. அதுபோல் பகவான் நினைத்தால், யார் வேண்டுமானாலும், அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துவிடும், என்றார் உபன்யாசகர்.  


திருமலைக்கு இதைக் கேட்டு ரொம்ப ஆனந்தம். தனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என கஜேந்திர வரதனிடம் மனப்பூர்வமாக வேண்டித் திரும்பினான். அடுத்த வியாழனன்று, மிராசுதார் திருமலையை அழைத்தார். ஏலே! திருமலை, வீட்டுக்குப் போய் நாலு வேட்டி சட்டை எடுத்துட்டு வா. திருப்பதிக்கு என் கூட நீ வரணும். பெட்டி கிட்டியையெல்லாம் தூக்க வழக்கமா வர்ற பயல் இந்த தடவை எங்கோ ஊருக்கு போயிட்டானாம்! நீ தான் வர்றே! புரட்டாசி சனியன்று அங்கே இருக்கணும், என்றார்.  கோவிந்தோ என அவன் சேரன்மகாதேவியில் இருந்து மனதிற்குள் முழங்கியது, வடக்கே இருக்கிற திருவேங்கடத்தானின் காதுகளில் விழுந்தது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,  

No comments:

Post a Comment