Tourist Places Around the World.

Breaking

Thursday 20 August 2020

இரக்க மனம் வேண்டும் - ஆன்மீக கதைகள் (186)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


சிவனால் சபிக்கப்பட்ட பார்வதிதேவி, மீண்டும் சிவனை அடைவதற்காக காட்டில் தவமிருந்தாள். ஒருநாள் அலறல் சத்தம் கேட்டது. சிறுவன் ஒருவன் முதலையின் வாயில் சிக்கி அலறினான். இதைக்கண்ட பார்வதி, சிறுவனை விடுவிக்கும் படி முதலையிடம் வேண்டினாள். இந்தச் சிறுவனை விட்டுவிட்டால் எனது உணவுக்கு எங்கே போவேன்? என்றது முதலை. 


எனது தவப்பயன் முழுவதையும் உனக்கு தருகிறேன். நீ சிறுவனை விட்டுவிடு என பார்வதி நெகிழ்ச்சியுடன் சொன்னாள். தவப்பயனைக் கொடுத்துவிட்டால் உங்களால் சிவனை மீண்டும் அடைய முடியாதே. என்ன செய்யப் போகிறீர்கள்? என்றது முதலை. தவத்தை மீண்டும் ஒரு முறை செய்துகொள்ளலாம். ஆனால், சிறுவனின் உயிர்போனால் திரும்ப வருமா? இப்போது செய்த தவப்பயன் மட்டுமல்ல. ஏற்கனவே என்னிடம் உள்ள அனைத்து தவப்பலனையும் உனக்கு அளிக்கிறேன். 


குழந்தையை விட்டுவிடு, என்றாள் கருணையுள்ள லோகமாதா. முதலை சிறுவனை விட்டது. அத்துடன் சிவனாக உருவெடுத்தது. முதலையாக வந்ததும் நானே. சிறுவனும் நானே. உனது அன்பின் ஆழத்தை உலகிற்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு செய்தேன். தானம் தவம் ஆகியவற்றின் பலன் செய்பவருக்கு உரியதல்ல. பிறருக்கு அதை அர்ப்பணித்தால் அதுவே பல்கிப்பெருகும், என்றார் சிவன். பிறருக்காக வாழ வேண்டும்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,  

No comments:

Post a Comment