Tourist Places Around the World.

Breaking

Thursday, 20 August 2020

ஏன் சிரித்தான் இறைவன் - ஆன்மீக கதைகள் (199)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


கிருஷ்ணசந்திரன் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள். அவர் தன்னிடமுள்ள 50 ஏக்கர் நிலத்தை ஆளுக்குப் பாதியாக பிரித்து எழுத பதிவாளர் அலுவலகம் சென்றார். செல்லும் வழியிலேயே திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார். சில நாட்கள் கழித்து உடனே பிள்ளைகள் மோத ஆரம்பித்தனர். மூத்தவன் சுப்பையன் இளையவன் குமரனிடம், டேய் குமரா! உன்னை அப்பா நன்றாகப் படிக்க வைத்தார். நீ அரசாங்கப் பணிக்கு போய் அதிலும் சம்பாதிக்கிறாய். 


என்னை அப்பா படிக்க வைக்கவில்லை. என் மனைவி, பிள்ளைகளுடன் சிரமப்படுகிறேன். நீ பத்து ஏக்கரை மட்டும் எடுத்துக் கொள். மீதியை எனக்கு கொடுத்து விடு, என்றான். குமரன் கத்தினான். உன்னையும் தான் அப்பா படிக்க வைத்தார். நீ படிக்காமல் ஊர் சுற்றி தோல்வியடைந்தாய். அதனால், உனக்கு வேலை கிடைக்கவில்லை. அதற்காக, என் பங்கை நான் இழக்க முடியுமா? ஆளுக்கு பாதி தான் சரியான முடிவு, என்றான். 


இருவருக்கும் சண்டை வலுத்தது. அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. கடவுள் அசரீரியாகப் பேசினார். பிள்ளைகளே! நீங்கள் எதற்காக அடித்துக் கொள்கிறீர்கள்! இந்த அண்டசராசரமும் எனக்குரியது. நீங்கள் அதில் வாடகைக்கு வாழ வந்துள்ளீர்கள். எனவே என்பூமி, உன் பூமி என்ற பேச்சுக்கே இடமில்லை. இது எனது பூமி, என்றார். பிள்ளைகள் உண்மையை உணர்ந்தார்கள். வம்பின்றி பூமியைப் பிரித்துக் கொண்டார்கள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,   

No comments:

Post a Comment