1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
தமிழ் மூதாட்டி அவ்வையார், கருணாகரன் என்பவனின் ஒரு இல்லத்துக்குச் சென்றார். அந்த இல்லத்தலைவன் பரமசாது. அவன் மனைவி பத்ரகாளியோ, பெயருக்கேற்ப காளியின் அம்சமாகத் திகழ்ந்தாள். அவளது கருத்துக்கு எதிராக கணவன் ஏதேனும் சொல்லிவிட்டால், அவ்வளவு தான்... ஆடித்தீர்த்து விடுவாள். தமிழ் மூதாட்டி தன் வீடு தேடி வந்ததில் கருணாகரனுக்கு பரமானந்தம். அவளை திண்ணையில் அமர்த்திவிட்டு, மனைவியிடம் சென்றான். அன்பே! இன்று தமிழ் மூதாட்டி அவ்வை நம் இல்லம் வந்திருக்கிறார்.
முருகப்பெருமானையே அவர் பார்த்திருக்கிறார். அவர் கொடுத்த கனியை சாப்பிட்டிருக்கிறார். அவரது தரிசனம் கிடைக்க நாம் பாக்கியம் செய்திருக்க வேண்டும். அவருக்கு விருந்தளித்து மகிழ்வோமா! என்றான். பத்ரகாளி கொதித்தெழுந்தாள். உழைத்துக் கொட்டுகிறேன் என்ற திமிரில் நீ பேசுகிறாயா? கிழடுகளுக்கெல்லாம் வடித்துக் கொட்ட இங்கென்ன கஜானா நிரம்பியா வழிகிறது! உனக்கு பொங்கிப் போடுவதே தண்டம்! இதில், நீ தெருவில் போகிறவள் வருகிறவளை எல்லாம் கூப்பிட்டு வருகிறாயே! புத்தி கெட்ட எருமையே! விருந்தாம்... விருந்து! ஓடிவிடு என்றவள், அதோடு விட்டாளா! ஒரு தடியை எடுத்தாள்.
புருஷனை அடிக்க ஓடி வந்தாள். அவன் பறந்தான். விட்டாளா இவள்...தெருவில் விரட்டி விரட்டி அடித்தாள். அவ்வைப்பாட்டி மனம் நொந்தாள். சண்டாளி சூர்ப்பநகை தாடகையை போல் வடிவு கொண்டாளைப் பெண்டென்று கொண்டனையே - தொண்டா! செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்'' என்று பாடினாள்.
இப்படி ஒரு மனைவியைப் பெற்ற ஆணுக்கு எவ்வளவு செல்வம் இருந்து என்ன பயன்? நெருப்பில் விழுவதற்கு சமமாக அல்லவா அவனது நிலைமை இருக்கிறது, என்று வருந்தினாள். இன்று டிவி தொடர்களில் வரும் கதாபாத்தி ரங்களும் கணவனை வாடா போடா என்று பேசுகின்றன. இதன் கதாசிரியர்கள்"பெண்ணுரிமை என்று போர்வை வேறு போர்த்திக் கொள்கிறார்கள். அவ்வைப்பாட்டு, தொடர் ரசிக அம்மணிகளைத் திருத்துகிறதா என பார்ப்போம்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment