Tourist Places Around the World.

Breaking

Friday, 21 August 2020

உன்னால் முடியும் தம்பி - ஆன்மீக கதைகள் (235)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


ஒருவனுக்கு பாட வரும், மற்றொருவனுக்கு ஆட வரும், இன்னொருவனுக்கு படிப்பு வரும், ஒருவனுக்கு விளையாட வரும்... எல்லாம் தெரிந்தவர் யார் தான் உண்டு! ஆனால், சிலர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? பக்கத்து வீட்டு அசோக்நன்றாகப் பாடுகிறான். வினோத் சூப்பரா ஆடுறான். கமலா நன்றாகப் படிக்கிறாள் நம்மிடம் ஒரு திறமை கூட இல்லையே! ஏன் தான் பூமியில் வந்து பொறந்தோமோ! என்று புலம்புகிறார்கள் இவர்கள். 


இவ்வாறு தங்களுக்கு தாங்களே குறை கண்டுபிடிக்கும் இளைய தலைமுறையினர் தங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏதோ ஒரு திறமையைக் கண்டுபிடித்து அதை வளர்க்கலாம் இல்லையா! இன்ஜினியர் இருக்கிறார்... இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பார்வையிலேயே சரி செய்து விடுகிறார். ஆனால், அவரால் மூடை தூக்க முடியாது. அப்படியானால், அவரிடமும் ஏதோ ஒரு திறமை இல்லை. எல்லாத்திறமையும் உள்ள மனிதன் பூமியில் எங்குமில்லை. ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். 


கடலில், படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த பயணிகள் கொண்டு வந்த குடிநீர் காலியாகி விட்டது. சாப்பிட்டதும் குடிக்க நீர் இல்லாமல் நா வறண்டு கிடந்தார்கள். அப்போது, தூரத்தில் மற்றொரு படகு தெரிந்தது. இவர்கள் வெள்ளைக் கொடி காட்டி அதை தங்கள் அருகே வரவழைத்தனர். எங்களிடம் உணவிருக்கிறது, குடிக்க நீர் இல்லை, தந்து உதவுங்களேன், என்றனர். படகில் வந்தவர்கள் சிரித்தனர். சரியா போச்சு! நீங்கள் கடலுக்குள் தான் இருக்கிறீர்கள். ஆனால், இப்போது நீங்கள் மிதந்து கொண்டிருப்பது, கடலுக்குள் பாயும் அமேசான் நதி மேல்! இது முழுக்க நல்ல தண்ணீர்! பக்கெட் பக்கெட்டாக குடியுங்கள், என்று சொல்லி விட்டு போய்விட்டனர். 


ஆம்! தென்அமெரிக்காவில் பாயும் அமேசான் நதி கடலுக்குள் நீண்டதூரம் ஓடிய பிறகு தான் கடலில் கலக்கிறது. அதுபாயும் குறிப்பிட்ட இடத்தில் கடலுக்குள்ளேயே நல்ல தண்ணீர் கிடைக்கும். நல்ல தண்ணீர் கண் முன் இருந்தும், அதைத் தேடி அலைந்த பயணிகளின் நிலை போல் தான், தங்களுக்குள் குறை காணும் இளைஞர்களின் நிலையும் இருக்கிறது. இவர்கள், தங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்த திறமை எது என்பதை மட்டும், சரியாக அடையாளம் கண்டு விட்டால்,வெற்றிப்பாதையில் கால் பதிப்பது உறுதி.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,   

No comments:

Post a Comment