Tourist Places Around the World.

Breaking

Friday, 21 August 2020

ஆசைக்கு அளவு வேண்டும் - ஆன்மீக கதைகள் (245)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள் 


சிருஞ்சயன் என்ற ராஜாவுக்கு ஒரே ஒரு மகள். தனக்கு மகள் மட்டும் தானே இருக்கிறாள், ஆண் குழந்தை வேண்டுமென்பது ராஜாவுக்கு விருப்பமாக இருந்தது. ஒருசமயம் நாரத முனிவர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார். அவரை அந்தணர்கள் அன்புடன் வரவேற்றனர். அந்தணர்கள் நாரதரிடம், மன்னனுக்கு ஆண் குழந்தை பாக்கியம் கொடுங்கள், என்று வேண்டுகோள் வைத்தனர். நாரதரும் அதை ஏற்றார். பின், அவர் சிருஞ்சயனிடம் சென்று, மன்னா! உன் விருப்பப்படியே எல்லாம் நடக்கும், என்றார். 


சிருஞ்சயன் அவரிடம் என் பிள்ளை புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். நாடே போற்றும்வீரனாகத் திகழ வேண்டும், என்றவன் சற்று தயங்கி, இன்னொன்றும்வேண்டும், என்று இழுத்தான். இதைக்கேட்ட நாரதர், சிருஞ்சயா! விருப்பத்தைச் சொல்வதில் என்ன தயக்கம்! தயங்காமல் உள்ளதைச் சொல், என்றார். முனிவரே! என் மகனின் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வேண்டும், என்றான் பேராசையுடன். அவன் பெரும் பேராசைக்காரனாக இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட நாரதர், அப்படியே அமையும் சிருஞ்சயா! என்றுசொல்லிவிட்டு கிளம்பினார். 


அடுத்த வருடமே சிருஞ்சயனுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு "தங்கமகன்' என்று பெயர் வைத்தான் சிருஞ்சயன். நாரதர் கொடுத்த வரத்தின்படி, அவன் சிறுநீர் கழித்தால் தங்கம், மலம் கழித்தால் தங்கம் குவிந்தது. அதைக்கொண்டு சிருஞ்சயன் தன் மாளிகையையே பொன்மயமாக்கி விட்டான். இப்படி ஒரு தங்கமகன்' அரண்மனையில் இருப்பதைக் கொள்ளைக்காரர்கள் கேள்விப்பட்டனர். கருத்து வேறுபாடு கொண்ட பல கொள்ளைக் கும்பல்கள் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்தனர். எப்படியாவது அரசனின் மகனைக் கடத்தியாக வேண்டும், அரண்மனையில் காவல் அதிகம். அதையெல்லாம் தாண்டி அவனைக் கடத்த வேண்டுமென்றால், நமது கூட்டணி முக்கியம். 


அந்தக்கும்பல்களில் தலைசிறந்த கொள்ளையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடத்தல் திட்டம் தீட்டப்பட்டது. அவர்கள் அரண்மனைக்குள் புகுந்தனர். தங்கமகனை இரவோடு இரவாகத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர். மறுநாள், சிருஞ்சயன் அலறினான். வீரர்களை அனுப்பி அவன் எங்கிருந்தாலும் மீட்டு வர உத்தரவிட்டான். கொள்ளைக்கும்பலுக்கு பயம் வந்து விட்டது. வீரர்கள் நம்மைப் பிடித்தால் மன்னன் தூக்கில் போட்டு விடுவான் என பயந்தனர். உடனே ஒரு கொள்ளைக்கூட்ட தலைவன், சக தலைவர்களிடம், தங்கமகனின் உடலுக்குள் தங்கம் இருப்பதால் தான் அவனது கழி விலும் தங்கம் வருகிறது. நாம் அவனைக் கொன்று உடலைக்கிழித்து தங்கத்தை எடுத்துக் கொள்வோமே! என்றான். 


திட்டம் செயல்படுத்தப்பட்டது. தங்கமகன் இறந்தானே தவிர அவனது உடலில் தங்கம் ஏதும் இல்லை. கொள்ளையர்கள் பயத்திலும் வருத்தத்திலும் தப்பிக்க எண்ணிய போது, வீரர்கள் சூழ்ந்து அவர்களைப் பிடித்து விட்டனர். தன் மகனின் உடலைப் பார்த்து சிருஞ்சயன் வருந்தினான். அவனும் பேராசையால் தன் மகனை இழந்தான். கொள்ளையர்களும் பேராசையால் மன்னனின் மரணதண்டனையை ஏற்று உயிர்விட்டனர். ஆசை ஒரு அளவுக்குள் இருக்க வேண்டும். புரிகிறதா!

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,   

No comments:

Post a Comment