1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
நீதிபதியாக இருப்பவருக்கு சட்டஅறிவும், திறமையும் மட்டும் போதுமா! இன்னும் சில தகுதிகள் வேண்டும் என்கிறது ஆன்மிகம். இதோ! ஒரு அரசனின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி. உஜ்ஜயினியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் விக்கிரமாதித்த மகாராஜா. இவரது காலத்தில் நீதிநெறி தழைத்திருந்தது. எந்த வித விருப்பு வெறுப்புக்கும் இடமின்றி தீர்ப்பளிப்பார். அவர் முன்னால் வழக்கு சார்ந்தவர்கள் வந்ததும், அவர்களை ஒரு தீர்க்கமான பார்வை பார்ப்பார். அந்த பார்வைக்குப் பயந்தே குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்வார்கள்.
விக்கிரமாதித்தன் தீர்ப்பு சொல்லும் போது 25 தேவதை பொம்மைகளால் சுமக்கப்படும் ஒரு பளிங்கு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். விக்கிரமாதித்தனின் காலம் முடிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கடந்ததும், அவரது அரண்மனை, சிம்மாசனம் உள்ளிட்டவை மண்ணில் புதைந்து போனது. அந்த இடம் ஒரு காலத்தில் மேய்ச்சல் நிலமானது. அதில் சிறுவர்கள் ஆடுகளை மேயவிடுவார்கள். அவர்கள் பொழுது போக்குக்காக ஏதாவது விளையாடுவது வழக்கம்.
ஒருநாள் மேடான இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்தான். மற்றவர்களிடம், நான் தான் நீதிபதி. நீங்கள் ஏதாவது குற்றம் செய்தவர்கள் போல் நடித்து வாருங்கள். நான் தீர்ப்பளிக்கிறேன், என்றான். சக சிறுவர்களும் ஏதோ குற்றம் செய்தது போல், நீதிபதியிடம் முறையிட, நீதிபதி சிறுவன் அருமையாக தீர்ப்பு சொன்னான். அவனது வார்த்தைகள் ஆடு மேய்ப்பவனுக்கு உரியதைப் போல் இல்லை. ஆணித்தரமாக நடுநிலையோடு இருந்தது. இதுபற்றி, ஊர்மக்கள் கேள்விப்பட்டனர். தங்கள் சொந்த வழக்குகளை அந்த மேட்டில் அமர்ந்திருந்த சிறுவனிடம் கொண்டு வந்தனர்.
சிறுவனும் மிக நியாயமான தீர்ப்பளிக்கவே வழக்குகள் தேங்குமளவுக்கு கூட்டம் அதிகரித்தது. இந்த தகவல் அவ்வூர் மன்னரை எட்டியது. அவர் இதுபற்றி மந்திரிகளிடம் கேட்கவே, மகாராஜா! படிப்பறிவில்லாத ஆடு மேய்க்கும் சிறுவன் அமர்ந்திருக்கும் மேடான இடத்தில், விக்கிரமாதித்த மகாராஜா அமர்ந்திருந்த சிம்மாசனம் புதைந்திருக்குமோ என்று எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. தோண்டிப்பார்க்கலாமா! என்றனர். ராஜா சம்மதிக்கவே, அவ்விடத்தைத் தோண்டினர்.
எதிர்பார்த்தபடி சிம்மாசனம் கிடைத்தது. அதை அரண்மனைக்கு கொண்டு வந்தனர். மன்னர் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து வழக்கை விசாரிக்க ஆசைப்பட்டு அருகில் சென்றார். அப்போது, சிம்மாசனத்தை தாங்கிய ஒரு தேவதை, ஏ மன்னா! நீ பல நாடுகளை அபகரித்தவன், அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுபவன் இதில் அமர தகுதியில்லை என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது. மன்னன் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் அமரப்போனான். மற்றொரு தேவதை, நீ அடுத்தவர் நாட்டை மட்டுமல்ல, உன் மக்களுக்கு செலவழிக்க வேண்டிய செல்வத்தையே ஊழல் செய்து கவர்ந்தவன்.
உனக்கு இதில் இருக்க தகுதியில்லை, என சொல்லி விட்டு மறைந்தது. இப்படி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தேவதையும் அவனது கெட்ட குணங்களை சொல்லி மறைந்து விட்டன. ஒரே ஒரு தேவதை மட்டுமே எஞ்சியிருந்தது. எல்லா தீய குணங்களையும் நான் விட்டுவிடுகிறேன். இனியாவது எனக்கு அமரும் தகுதி உண்டா? என அவன் கேட்கவே, நான், எனக்கு என்ற வார்த்தைகளை அழுத்தமாக அகங்காரத்துடன் உச்சரித்த நீ இதில் அமர முடியாது, என சொல்லி மறைந்து விட்டது.
ஆசை, கோபம், விருப்பு, வெறுப்பு இவற்றை எவனொருவன் விடுகிறானோ அவனே தீர்ப்பு சொல்ல தகுதியானவன். ஆடு மேய்க்கும் சிறுவனிடம் இவை அத்தனையும் இருந்தன. அதனால், அவன் சரியான தீர்ப்பு சொன்னான். மன்னனுக்கு அத்தகைய தகுதிகள் இல்லாததால், அவனால் தீர்ப்பு சொல்ல இயலவில்லை. நீதி வழங்கும் ஸ்தானத்தில் உள்ளவர்கள் இந்தக் கதையை மனதில் கொள்ள வேண்டும்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment