1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒரு கிராமத்தில் வசித்த பெற்றோருக்கு மூன்று பிள்ளைகள். ஒருநாள் தந்தை இறந்து விட்டார். அந்தத் தாய் மூவரையும் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தாள். நன்றி கெட்ட அந்தப் பிள்ளைகள் பெற்றவளை கவனிக்கவில்லை. மருமகள்களோ மாமியாரை வேலைகளைச் செய்யச் சொல்லி விட்டு, அரட்டைக் கச்சேரியில் மூழ்கி விடுவார்கள். வேலை செய்த மாமியாருக்கு வீட்டில் மிஞ்சியதையே சாப்பிடக் கொடுப்பார்கள். அவளுக்கு நோய் வந்தால் மருத்துவமும் செய்யமாட்டார்கள். ஒருசமயம், அந்தத்தாயின் உடல் குண்டாக ஆரம்பித்தது.
அது ஏதோ ஒரு வகை நோய். ஆனால், மருமகள்கள் தங்கள் கணவன்மாரிடம், உங்க அம்மா நாங்க சொன்னதையே கேட்பதில்லை. கண்டதையும் சாப்பிடுறதாலே உடம்பு பெருத்துக்கிட்டே போகுது! நீங்க கண்டிச்சு வையுங்க, என்றார்கள். உண்மை தெரியாத பிள்ளைகளும் அம்மாவைக் கடிந்து கொண்டார்கள். அவள் தனக்கு ஏதோ நோய் என்று சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. ஒருநாள், மருமகள்களின் தொல்லை தாங்கமுடியாமல், வீட்டை விட்டு வெளியேறி விட்டாள் அந்தத்தாய். வழியில் பாழடைந்த மண்டபம் தென்பட்டது.
களைப்புடன் உட்கார்ந்தாள். மண்டபத்தில் சிவன், முருகன், பார்வதி சிற்பம் இருந்தது. அதைப் பார்த்து, முருகா, சிவா, தாயே பார்வதி, என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? என் பிள்ளைகளும், மருமகள்களும் பாடாய் படுத்துகிறார்கள். சாப்பிட சோறில்லை, உடுத்த இந்தக் கந்தை தான். என்ன செய்வேன். கண் திறந்து பாரேன், என்றாள். இப்படியே அங்கு நிரந்தரமாக தங்கி அவள் அழுத அழுகையில், பாதி உடல் கரைந்து விட்டது.
யாராவது அந்த மண்டபத்திற்கு தங்க வருபவர்கள் தரும் உணவை சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே தங்கினாள். சோகத்தை சுமப்பவர்கள் தங்கள் குறைகளை கடவுளிடமோ, தங்கள் பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை சொல்லும் நற்குணமுள்ள பெரியோரிடமே எடுத்துச் சொல்ல வேண்டும். அது மனச்சுமையைப் பெரிதும் குறைக்கும்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment