Tourist Places Around the World.

Breaking

Saturday, 22 August 2020

அவன் இல்லாத இடமே இல்லை - ஆன்மீக கதைகள் (289)

 



இன்றைய உலகில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்ற போட்டி வலுத்திருக்கிறது. இதன் காரணமாக எங்கும் சண்டை, சச்சரவு.... உண்மையில் உலகில் யார் உயர்ந்தவர்? அரசன் ஒருவன் தன்னையே கடவுள் என எண்ணியிருந்தான். மக்களுக்கு இது பிடிக்கவில்லை. அவ்வூருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவர் மகாதபஸ்வி என்பதால் மக்கள், தோரணம் கட்டி வரவேற்றனர். முனிவர் அவைக்கு வந்தார். அங்கிருந்த எல்லாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்... ஒரே ஒருவனைத் தவிர... அவன் தான் மன்னன். தானே உலகில் உயர்ந்தவன் என்ற கர்வம் அவனை இவ்வாறு செய்ய வைத்தது. மன்னனும், முனிவரும் பேச ஆரம்பித்தனர். 

முனிவரே! என் நாட்டு மக்கள், என் அனுமதியின்றி முதன்முதலாக வரவேற்பு வளைவு, தோரணம் கட்டி உம்மை வரவேற்றுள்ளனர். அந்தளவுக்கு மக்கள் மனதில் நீர் இடம் பிடித்திருக்கிறீர்! இத்தனைக்கும் உம்மிடம் சல்லிக்காசு கூட கிடையாது. முற்றும் துறந்த உமக்கு எப்படி இவ்வளவு மதிப்பு? ஆச்சரியமாக உள்ளது. மக்கள் வேண்டுமானால் உம்மை மதிக்கலாம். ஆனால், செல்வத்திலும் பெயரிலும் புகழிலும் உம்மிலும் பல மடங்கு உயர்ந்துள்ள நான், பரதேசியான உம்மை நான் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம், என்றான். 

அப்போது ஒரு குடிமகன் வரிசையில் இருந்து சற்று முன்வந்து நின்றான். மன்னா! தங்களையும், இந்த முனிவரையும் விட உயர்ந்தவர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் கடவுள், என்றான். முனிவரே! இவன் சொல்வது சரிதானா! கடவுளா என்னை விட உயர்ந்தவர், என்று கேட்டான். இல்லை... இல்லவே இல்லை. அவன் தவறான தகவலைச் சொல்கிறான். நீ நினைத்தால் தவறு செய்யும் ஒருவனை நாடு விட்டு நாடு கடத்தலாம். ஆனால், கடவுளால் அப்படி செய்ய முடியாதே! காரணம், இந்த உலகம் முழுக்க அவருடையது. எனவே, நீ தான் உலகில் உயர்ந்தவன், என்றார்.


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,    

No comments:

Post a Comment