1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
நாயை துரத்திக்கொண்டே ஒருவன் ஓடுகிறான். அதுவும் பயந்து ஓடுகிறது. ஓரிடத்தில் போக வழியில்லை. வேகமாகத் திரும்பி துரத்தியவனைப் பார்த்து முறைக்கிறது. அவன் நடுங்கிப் போகிறான், பாய்ந்து வந்து கடித்து விடுமோ என! ஒரு நாய் கூட, தனக்கு வந்த துன்பத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள போராடுகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் கடுமையாக அஞ்சுகிறார்கள். அவர்களுக்காக ஒரு கதை! ஒரு படகில் பத்து பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீரென வழியில் கவிழ்ந்து விட்டது.
எட்டு பேர் மூழ்கி விட்டனர். படகுக்காரனும், இரண்டு நண்பர்களும் எப்படியோ தப்பி அருகில் இருந்த பாறையில் ஏறிக்கொண்டனர். அங்கிருந்து தப்பிக்கும் வழி பற்றி யோசித்தனர். அவர்களில் ஒருவன் முருகபக்தன். முருகப்பெருமானை மனதில் எண்ணி தியானித்தான். அவனது வேண்டுகோள் கருணைக் கடவுளான முருகனை எட்டியது போலும்! தூரத்தில் ஒரு படகு வந்தது. அதை கையசைத்து அழைத்தனர். அந்த படகுக்காரனும், ஆபத்தான நிலையில் நின்றவர்களைக் காப்பாற்ற படகை அங்கே ஓட்டி வந்தான்.
அதில் கவிழ்ந்த படகுக்காரனும், முருக பக்தனும் ஏறினர். ஒருவன் மட்டும் ஏற மறுத்தான். ஊஹூம்... இதில் நான் வரமாட்டேன். இப்போது, நாம் வந்த படகு கவிழ்ந்தது போல, இதுவும் கவிழாதென்று என்ன நிச்சயம்! மேலும், இந்த படகுக்காரன் கொள்ளைக்காரனாக இருந்தால், என் மடியில் கட்டி வைத்துள்ள பொருளைத் திருடிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் போங்கள், நான் கப்பல் ஏதாவது வந்தால் அதில் பாதுகாப்பாக கரைக்கு வருவேன், என்றான். அவர்கள் கிளம்பி பத்திரமாக கரை சேர்ந்தனர்.
பாறையில் நின்றவனை வேகமாக வந்த அலை கடலுக்குள் மூழ்கடித்து விட்டது. வீட்டில் நெருப்பு பற்றிக் கொண்டது என்பதற்காக, சமையலுக்கோ, விளக்கேற்றவோ மீண்டும் நெருப்பு பற்ற வைக்காமல் இல்லை. அதுபோல், மனிதனை துன்பங்கள் துரத்திக் கொண்டு தான் இருக்கும். ஆனாலும், அதைக் கண்டு மலைத்து விடக்கூடாது. எதிர்த்து போராடுபவனே வாழத் தகுதியானவன்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment