1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
நம் நெஞ்சம் சிந்தனைகளின் பிறப்பிடமாக உள்ளது. அதில் கெட்ட சிந்தனைகள் தலை தூக்கும் போது படிக்க வேண்டிய கதை இது! ஒரு சிறுவன் மகாகெட்டவன். பறவைகளைப் பார்த்தால் எப்படியாவது வலை விரித்து பிடித்து விடுவான். சிலவற்றை கவண்கல் கொண்டு அடித்து காயப்படுத்தி கீழே விழச்செய்வான். அவ்வாறு விழும் பறவைகளின் இறக்கைகளைப் பிடித்து இழுத்து கொடுமை செய்வான்.
அவை வலிதாங்காமல் கீரிச்சிடும் போது, அதைக் கண்டு மகிழ்வான். இந்தக் கொடிய சிறுவன் ஒருநாள் காட்டுக்குப் போனான். மான், முயல் முதலான மிருகங்களைத் துன்புறுத்தி மகிழ்ந்தான். அப்போது வனதேவதைகள் சிலர் வந்தனர். அவர்கள் அவன் கண்ணில்படவில்லை. ஒரு தேவதை இன்னொருத்தியிடம், சகோதரி! இந்தச் சிறுவனை நாம் திருத்த வேண்டும். இவனை நல்ல இதயம் கொண்டவனாக மாற்றுவோம். அப்படியானால் இவன் திருந்தி விடுவான், என்றாள்.
அவளும் அதற்கு சம்மதம் தெரிவிக்கவே, அவனது இதயத்தில் நல்ல எண்ணங்களைப் புகுத்தினர். அதைக் கண்டு பயந்து போன கெட்ட எண்ணங்கள் பயந்து போய் ஓடிவிட்டன. மனமாற்றமடைந்த அந்தச் சிறுவன், அதன் பின் பறவைகளைத் தடவிக்கொடுப்பது, உணவளிப்பது, அடிபட்டு கிடக்கும் மிருகங்களுக்கு மருந்திடுவது என உதவினான். நம் உள்ளத்திலும் நல்ல எண்ணங்களைப் புகுத்துவோம். நல்லதையே சிந்திப்போம்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment