1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
அரண்மனைக்குள் திருடன் ஒருவன் புகுந்தான். அந்தப்புரத்தை நெருங்கிய போது, ராஜாவும், ராணியும் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. மன்னா! நம் மகளுக்கு ஒரு சாதுவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். பக்திமானிடமே நம் பெண் நிம்மதியாக வாழ்வாள். அவன் பொறுமைசாலியாக இருப்பான், என்றாள். ராஜாவும் அதை ஒப்புக்கொண்டு, அதற்கென்ன கண்ணே! நாளையே நாம் ஆற்றங்கரைக்குச் செல்வோம். அங்கே தியானத்தில் இருக்கும் பல சாதுக்களில் ஒருவரைத் தேர்வு செய்வோம், என்றான்.
திருடனுக்கு பளிச்சென பொறி தட்டியது. நாமும் நாளை சாதுவைப் போல் வேடமிட்டு, ஆற்றங்கரையில் போல் தியானத்தில் இருப்பது போல் நடிப்போம். அதிர்ஷ்டம்இருந்தால், நானே ராஜாவின் மருமகன் ஆகிவிடுவேன். பிறகென்ன! தினமும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான், என முடிவெடுத்தான். அரண்மனையை விட்டு வெளியேறி ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டான். மறுநாள் ராஜாவும், ராணியும் ஆற்றங்கரைக்குச் சென்றார்கள். எல்லாத் துறவிகளும் திருமணத்துக்கு மறுத்துவிட, திருட்டுத் துறவி மட்டும் ஒப்புக்கொண்டான்.
அவனை பல்லக்கில் ஏறுமாறு ராஜா சொன்னதும், திருடனின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. ஆஹா! துறவியாக வேடமிட்டதற்கே இவ்வளவு மரியாதை என்றால், நிஜத்துறவியாக மாறி விட்டால், இன்னும் எவ்வளவு மரியாதை கிடைக்கும். நான் துறவியாகவே மாறி விடுகிறேன், என நினைத்தவன், நடந்ததை ராஜாவிடம் சொல்லி மன்னிப்பு கேட்டான். திருட்டு புத்தியை மாற்றும் சக்தி ஆன்மிகத்திற்கு மட்டுமே இருக்கிறது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment