1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒருநாள், விடுமுறை நாள் காலையிலேயே மணி எழுந்து விட்டான். டீ குடித்த அவனிடம் அவன் அப்பா கந்தசாமி, டேய்! மணி! இன்று லீவாச்சே! இன்றைக்கு வீட்டிலுள்ள பழையனவற்றைக் கழித்து ஒழுங்குபடுத்துவது உன் வேலை என்றார். தந்தை சொல் தட்டாத மணியும், அக்கறையாக வேலையைத் தொடங்கினான். வெளியில் சென்ற தந்தை மதியம் வீட்டுக்கு வந்தார். கழித்துப்போட்ட ஒருபுத்தகத்தைக் கண்டு அதிர்ந்து விட்டார்.
அது திருக்குறள் புத்தகம். மணி! என்ன வேலை செய்தே? திருக்குறளை பழைய குப்பையோடு சேர்த்துட்டாயே! இது உன் தாத்தா எனக்கு வாங்கிக் கொடுத்தது, என்று சொல்லி கையில் எடுத்தார். அப்பா! நீங்க செய்ததைத் தான் நானும் செய்தேன். ஒருமுறை கூட, நீங்கள் இதைப் படிச்சு நான் பார்த்ததே இல்லை. புத்தகம் என்றால் படிப்பதற்குத் தான். வெறுமனே வீட்டில் இருந்தால், அது குப்பையில் அடக்கம் தானே! இதை உணர வைப்பதற்கு தான் இப்படி செய்தேன் என்று பதிலளித்தான்.
மகனின் பேச்சில் இருந்த நியாயத்தை உணர்ந்த கந்தசாமி, அன்றுமுதல் ஒரு குறளைப் பொருளோடு படிப்பது என்று முடிவெடுத்தார். அப்போது அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே, வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே என்ற பாடல் வானொலியில் மிதந்து வந்தது. ஹாலில் போட்டோவில் இருந்த தாத்தா, மகனைப் பார்த்து மகிழ்ச்சியில் புன்னகைத்தார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment