1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒரு வீட்டிற்கு வியாபாரி ஒருவர் வந்தார். வீட்டுக்காரரிடம், ஐயா! தங்கள் வீட்டில் சிலநாள் தங்கி, இவ்வூரில் வியாபாரப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. தங்குவதற்கும், உணவருந்தவும் பணம் தந்து விடுகிறேன், என்றார். வீட்டுக்காரரும் சம்மதித்தார். வியாபாரி இரவு வீட்டுக்கு வந்ததும், பெரும் பணத்தை எண்ணுவார். வீட்டுக்காரனுக்கு, அதை எப்படியாவது திருட வேண்டுமென்று எண்ணம் வந்தது.
வியாபாரி தூங்கியதும், நைசாக அவரது தலையணையின் கீழே, துழாவிப் பார்த்தார். பணம் சிக்கவில்லை. ஆனால், மறுநாள் வியாபாரி பாக்கெட்டில் பணம் எடுத்து வைப்பதைப் பார்ப்பார். இந்த மனுஷன் எங்கே தான் ஒளித்து வைக்கிறான்! தெரியவில்லையே ! என்று தவித்தான். தூக்கம் அறவே போய்விட்டது. மறுநாள், அவர் திருதிருவென விழிப்பதைப் பார்த்த வியாபாரி, என்னய்யா பணத்தை தேடுகிறீர்களா? என்றார்.
அவர் படீரென அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். நீங்கள் என்ன மந்திரவாதியா? பணத்தை எங்குதான் வைத்திருந்தீர்கள்? என்று கேட்டார். உன் படுக்கைக்கு கீழே பார், என்றார் வியாபாரி. அவரும் பார்க்க, அடியில் பணம் இருந்தது. நீ என் பொருட்களை நோட்டமிட்டதை நான் பார்த்து விட்டேன். எனவே, உன் படுக்கையின் அடியிலேயே வைத்து விட்டேன். இது தான் நான் செய்த தந்திரம், என்றார். வீட்டுக்காரர் தலை குனிந்தார். அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படுவது அவமானத்தை தரும்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment