Tourist Places Around the World.

Breaking

Sunday, 23 August 2020

மன்னிப்பு - ஆன்மீக கதைகள் (362)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

பாண்டவர் வனவாசம் இன்னும் முடியாத காலம். வனவாசத்திலும் நிம்மதியற்ற வாழ்க்கை. பாஞ்சாலி... துருபதன் மகள், திட்டத்துய்மனின் சகோதரி, வீரன் அர்ஜூனன், பலவான் பீமன் இவர்களின் மனைவி... மாமியார் குந்திதேவி வகையில் கிருஷ்ணபரமாத்மா கூட உறவுதான். இவ்வளவு பலமிக்க உறவுகள் இருந்தும் விதியின் விளையாட்டு ஓயவில்லை. சோதனைகளும், வேதனைகளும் அவளைத் தொடர்ந்தன. 


ஒருசமயம், அவள் ஒரு குடிசை வாசலில் நின்றாள். வறுமை அவள் வனப்பைக் குறைக்கவில்லை. வனதேவதை போல காட்சியளித்த அவளின் விழிகளில் சோகத்தை மீறிய ஒரு நம்பிக்கைச்சுடர் ஒளிர்ந்தது. தருமரின் அறம், பீம அர்ஜூனரின் வீரம், நகுலரின்அறிவு, சகாதேவனின் பக்தி பற்றிய பெருமிதச் சுடர் அது. வெகுதொலைவில் தேர் ஒன்று வந்து கொண்டிருந்தது. சிந்துநாட்டு வேந்தனும், துரியோதன் தங்கை துச்சளையின் கணவனுமான ஜயத்ரதன் அதில் வந்தான். அவன் கண்களில் பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது. ஆம்... அந்த அழகுதேவதை அவன் கண்ணில் பட்டாள். 


சில பெண்களும், பிராமணர்களும் மட்டுமே அவளுக்கு துணையாக இருக்கிறார்கள் என்பதை அறிந்தான். பாண்டவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். இதை விட சரியான வாய்ப்பு கிடைக்குமா? வனவாசம் பாஞ்சாலிக்கு விரக்தியை அளித்திருக்காதா? சிந்து வேந்தனை அவள் ஏற்க மறுப்பாளா? முயன்று பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். ஜயத்ரதனின் தீயநோக்கம் தெரியாமல், பாஞ்சாலி அவனை அன்புடன் வரவேற்றாள். அனைவர் நலமும் விசாரித்தாள். 


சிற்றுண்டி அளிக்க தயாரானாள். ஆனால், அவன் எதிர்பார்த்தது சிற்றுண்டியையா? அவளையே அல்லவா? ஆசைவார்த்தைகளை அள்ளி வீசத் தொடங்கினான். அவள் நல்லவிதமாக ஜயத்ரதனுக்கு புத்திமதி சொல்லிப் பார்த்தாள். நீங்கள் என் கணவன்மார்களின் தங்கை கணவர், அதனால் என்ன? அவளையும் உன் அடிமைப்பெண் ஆக்குகிறேன், நாம் இருவருமே மணமானவர்கள், என் போன்ற அரசர்களுக்கு இப்படி கட்டுப்பாடு கிடையாது,''. வார்த்தை வளர்ந்து கொண்டே போனதால், வலிமையைப் பயன்படுத்தினான். 


அவளுடைய புடவையைப் பற்றி இழுத்தான். பலவந்தமாகத் தேரில் ஏற்றினான். உடனிருந்த பெண்களும், பிராமணர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயனில்லாமல் போனது. அர்ஜூனனும், பீமனும் இதைக் கேள்விப்பட்டனர். காட்டுத் தீ போல ஜயத்ரதனை நோக்கி விரைந்தனர். அவர்களைக் கண்ட ஜயத்ரதன் வெலவெலத்துப் போனான். தேரில் இருந்து கீழே குதித்து காட்டுக்குள் ஓடி தப்பிக்க முயன்றான். மலை போல இருந்த பீமனோ கையால் ஓங்கி அடித்தான். ஜயத்ரதனின் கிரீடம் கீழே விழுந்தது. அவன் மார்பில் ஓங்கி மிதித்தான். 


அவனது கனம் தாங்காமல் ஜயத்ரதன் கதறினான். அப்போது அர்ஜூனன் அண்ணனை நோக்கி கூவினான். அண்ணா! அவனைக் கொன்றுவிடாதே! நம் தங்கையின் கணவன் அல்லவா! இது தர்மர் ஆணை! என்றான். பீமன், ஜயத்ரதனின் கை கால்களைப் பிணைத்துக் கட்டி, தர்மரிடம் இழுத்து சென்றான். உயிர் கொடுத்த தர்மர் முன்னிலையில் ஜயத்ரதன் தலை கவிழ்ந்து நின்றான். தர்மர் அவனை மன்னித்து அனுப்பினார். ஆனால், ஜயத்ரதனோ இன்னொரு பழிச்செயலைச் செய்தபோது, அர்ஜூனன் அவனை மன்னிக்கவே இல்லை. ஆம்.. தன் மகன் அபிமன்யுவை அவன் கொன்ற போது பழிக்குப் பழி வாங்கி விட்டான்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,     

No comments:

Post a Comment