1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
முதுபெரும் தலைவர் ராஜாஜி, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றிருந்த நேரம். தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். முஸ்லிம் நீதிபதி ஜனாப் அப்பாஸ் அலி வழக்கை விசாரித்தார். நீதிபதி தனது சேம்பருக்கு வந்ததும், கூண்டில் நின்ற ராஜாஜி அவருக்கு வணக்கம் தெரிவித்தார். எந்தக் கைதிக்காவது நீதிபதிகள் வணக்கம் செலுத்துவதுண்டா! ஆனால், அப்பாஸ் அலி அவருக்கு பதில் வணக்கம் செய்தார்.
இதைக் கண்டு, கோர்ட்டிலிருந்த எல்லாரும் ஆச்சர்யப்பட்டனர். நீதிபதி அப்பாஸ் அலிக்கு ராஜாஜியைப் பற்றி நன்றாகவே தெரியும். அவர் தேசத்துக்காக படும்பாட்டையும், மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கையும் அவர் அறிவார். இருப்பினும், கைதி என்ற நிலையில் அவருக்கு உதவ அவரால் எப்படி முடியும்? இருப்பினும் தழுதழுத்த குரலில் தீர்ப்பை வாசித்தார். அப்போது, திரு. ராஜாஜி அவர்களே! சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இந்த தீர்ப்பை வாசிக்கிறேன்.
உங்களுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்படுகிறது. நான் என் கடமையைச் செய்ய வேண்டிய சூழலில் உள்ளேன். நாட்டின் நெருக்கடி நீங்கி நீங்கள் விரைவில் விடுதலை பெற வேண்டும். விடுதலையானதும், இப்போது வகித்த பதவிகளை விட உயர்பதவிகளைப் பெற வேண்டும். அடைவீர்கள் என்பதும் நிச்சயமே! இதுவே என் விருப்பம்,'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
கடமையைச் செய் என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போதித்த கீதையில் இருந்து சில ஸ்லோகங்களையும் நீதிபதி எடுத்துச் சொல்லி, கீதோபதேசப்படி தன் கடமையைச் செய்வதாகவும் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த ராஜாஜி, என்னால் தங்களுக்கு தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டதற்கு வருந்துகிறேன். தங்களுடைய தீர்ப்பை அன்புமிக்க வாழ்த்தாக ஏற்கிறேன், என்றவர் நீதிபதிக்கு வணக்கம் தெரிவித்து விடைபெற்றார். நீதிபதி அப்போதும் ராஜாஜிக்கு பதில் வணக்கம் கூறினார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment