1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
தவத்தில் இருந்த விஸ்வாமித்திரரால் தனது தேவலோக தலைவர் பதவி ஆட்டம் கண்டுவிடும் என்று கருதிய இந்திரன், மேனகையை அனுப்பினான். அந்த மயக்கத்தில் பிறந்த மகளே சகுந்தலை. குழந்தையைக் காட்டில் விட்டுச்சென்றனர். அவளை பறவைகள் வளர்த்ததாம். சகுந்த' என்றால் பறவை. அலை' என்றால் வளர்க்கப்பட்டவள். பறவைகளால் வளர்க்கப்பட்டவள்' என்பதால் இப்படி ஒரு பெயர் இயற்கையாகவே அமைந்தது. பிறகு கண்வமகரிஷி அவளை வளர்த்தார். அவளை பார்த்த துஷ்யந்தன் காந்தர்வ மணம் செய்தான்.
அவள் கர்ப்பமானாள். ஒரு மோதிரத்தை பரிசாக அளித்து விட்டு கிளம்பினான். செல்லும்வழியில், சகுந்தலாவின் ஞாபகத்தில் ஒரு முனிவரை அவமதித்தான். என்னைக் கண்டுகொள்ளாமல், எந்தப் பெண்ணின் மதிமயக்கத்தில் சென்றாயோ, அவளை மறந்து போ, என அவர் சாபமிட்டார். சகுந்தலையை மறந்தான். சகுந்தலா ஒரு மகனைப் பெற்றாள். அவனுக்கு பரதன் என்று பெயர். அவனது பெயரால் தான், நம் தேசம் பரதகண்டம் என பெயர் பெற்று பாரதம் என மாறியது.
அவள் தன் கணவனைத் தேடி வந்தாள். அவனோ, அடையாளம் தெரியாமல் அவளைத் திட்டினான். அவள் தன் மனைவியல்ல என்று சத்தியம் செய்தான். மன்னா! சத்தியத்தை எவன் கடைபிடிக்கிறானோ அவனே உயர்ந்தவன். இதோ, நீங்கள் அணிவித்த மோதிரம், இதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? என காட்டினாள். அந்த நேரத்தில் சாபவிமோசனம் கிடைக்க, அவளை அடையாளம் கண்டு மகிழ்ந்தான். சத்தியம் என்றும் வெற்றி பெறும். சத்யமேவ ஜயதே! வாய்மையே வெல்லும் என்று இன்று நம் அரசுகள் பயன்படுத்தும் மொழிகள் பிறந்தது இவர்களால் தான்!
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment