1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
கொம்பன் மாடு மேய்க்கும் தொழில் செய்தான். அதற்கு கூலியாக அவனுக்கு தினமும் சாப்பாடு கொடுப்பார் எஜமான். ஒருசமயம் மாடு மேய்க்கப் போன போது, ஓரிடத்தை கையில் இருந்த இரும்புக்கம்பியால் நோண்டிக் கொண்டிருந்தான். சிறிது ஆழத்திலேயே டங் என்று சத்தம் வர, உள்ளே பார்த்தான். ஒரு தகரப்பெட்டி தெரிந்தது. அதை வெளியே எடுத்துப் பார்த்தால் லட்சம் ரூபாய்க்கு குறையாமல் பணம் இருந்தது.
இது வெளியே தெரிந்தால் போலீஸ் பிடித்து விடும். அல்லது உடமையாளன் என சொல்லிக்கொண்டு யாராவது பிடுங்கிக் கொள்வார்கள். கொம்பன் பணப்பெட்டியை வேறு இடத்தில் மறைத்து விட்டான். தினமும் அதை திறந்து பார்த்துக் கொள்வான். அன்று மாலை மாடுகளை விட்டதும், ஏலே கொம்பா! தட்டை எடுத்துட்டு வா! சாப்பாடு வாங்கிக்கோ, என்றார் எஜமான். எஜமான்! இனிமேல் என்னை ஏலே ன்னு சொல்லக்கூடாது.
கொம்பா சாப்பாடு வாங்கிக்கோன்னு சொல்லணும், தெரியுதா? என்றான். அவரும் சரியப்பா! அப்படியே சொல்கிறேன், என்று சொல்லிவிட்டு போய் விட்டான். மறுநாள் கொம்பா வா என அவர் அழைக்க, இனிமேல் என்னை நீங்க வாங்க போங்கன்னு தான் சொல்லணும், என்றான். இவனது போக்கு எஜமானுக்கு புரியவில்லை.
மறுநாள், அவன் அறியாமல் மாடு மேய்த்த இடத்துக்குப் போனார். அவன் பணப்பெட்டியை அடிக்கடி திறந்து பார்ப்பதைக் கண்டார். அன்றிரவே பெட்டியை லவட்டிக்கொண்டு வந்து விட்டார். மறுநாள் கொம்பன் பெட்டியைக் காணாமல் தவித்தான். அன்றிரவு, கொம்பா வாங்க! சாப்பிடுங்க! என்ற எஜமானனிடம், பரவாயில்லே! ஏலே இங்கே வாலேன்னே கூப்பிடுங்க, என்றான் கொம்பன். பழசை எப்பவுமே மறக்கக்கூடாது.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment