1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒரு தாசில்தார் ரொம்ப ரொம்ப சிடுசிடுப்பானவர். தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை கடுமையாகத் திட்டுவார். தாசில்தாரின் தந்தையும் உதவி கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மகன் மீதுள்ள பாசத்தில் சம்பாதித்த சொத்து, பணத்தைக் கொடுத்து விட்டு, அவர் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு வந்தார். மருமகள் மாமனாரை மதிக்கவே மாட்டாள். இந்த நிலையில், சில ஊழியர்கள் அவரைச் சந்தித்து, உங்கள் மகன் வார்த்தைகளால் எங்களைப் புண்படுத்துகிறார்.
அவரிடம் நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா? என்றனர். அன்று மாலை மகன் அலுவலகத்தில் இருந்து வந்ததும், ஏனடா! அடுத்தவங்க வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டுகிறாய்? எனக் கண்டித்தார். தாசில்தார் குதித்தார். எனக்கே புத்தி சொல்கிறாயா? நீயே என் வீட்டில் தண்டச்சோறு சாப்பிடுகிறாய். வெளியே போய்விடு.
பிச்சை எடுத்து சாப்பிடு, என்று கத்திவிட்டு போய்விட்டார். பெரியவர் சற்றும் கலங்கவில்லை. மறுநாள் காலை தாசில்தார் ஆபீஸ் முன் உட்கார்ந்து விட்டார். ஐயா! என் மகன் இந்த ஆபீசிலே தான் தாசில்தாரா வேலை செய்றான்! என்னை பிச்சை எடுத்து சாப்பிடச் சொல்லிட்டான். இரக்கமுள்ள ஐயாமாரே! தர்மப்பிரபு! பிச்சை போடுங்க சாமி, என கத்திக் கொண்டிருந்தார்.
அப்போது மகன் ஜீப்பில் அலுவலகத்துக்கு வர மானம் போய்விட்டது. அப்பாவை, உடனேயே ஜீப்பில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தகவல் பத்திரிகைகளுக்குப் போய் உயரதிகாரிகளின் கண்டனத்துக்கும் ஆளானார். இரக்கமில்லாத பிள்ளைகளுக்கு, இப்படி புத்தியில் உறைக்கிற மாதிரி பாடம் கற்பித்தால் தான், இந்த கலியுகத்தில் பெரியவர்களுக்குரிய மரியாதை கொஞ்சமாவது காப்பாற்றப்படும்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment