1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
மரத்திலோ, வீட்டுச்சுவரிலோ விளையாடுகிற மகனைப் பார்த்து கீழே விழுந்து விடாதே மகனே! கவனமாக இரு, என்று எச்சரிக்கை செய்கிற பாசத்திற்குரிய தாய்மார்களை உலகம் முழுக்கக் காணலாம். ஆனால், மகன் மரணத்தை தழுவ இருக்கிற வேளையில், போ.. மரணக்கயிற்றை முத்தமிடு. இது என்றேனும் ஒருநாள் உன்னைத் தேடி வரத்தான் போகிறது. எதுவரை வாழ்ந்தாய் என்பது முக்கியமல்ல.
எதற்காக வாழ்ந்தாய் என்பது தான் முக்கியம். நீ இந்த தேசத்துக்காக உயிர்விட்டால், நிச்சயமாக மரணமடைய மாட்டாய். உன்னைப் பற்றி தினமும் ஒருவன் எழுதிக் கொண்டிருப்பான், ஒருவன் பேசிக்கொண்டிருப்பான், ஒருவன் நினைத்துக் கொண்டிருப்பான், என்று முழக்கமிட்ட வீரத்தாய் ஒருத்தியும் இந்த பூமியில் தான் வசித்தாள். சுதந்திரப் போராட்ட சிரோன்மணி பகத்சிங்கின் தாயே அவர். விடுதலைக்காக பாடுபட்ட தீரன், சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, மார்ச் 23, 1931ல் மரணக்கயிற்றில் தொங்க வேண்டியிருந்த நிலையில், இருபது நாட்களுக்கு முன்பாக அவரது தாய் மகனைச் சந்தித்தார்.
தன் மரணத்துக்காக, தாயார் அழுது புலம்புவாரே! அவரை எப்படி சமாளிக்கப் போகிறோம்... வெள்ளையர் களைக் கண்டால் கர்ஜிக்கும் அந்த சிங்கம், தன் தாயின் முகத்தைப் பார்க்க தயங்கியது. இருப்பினும், சற்றே கண்களை உயர்த்தி அவரைப் பார்த்தபோது தான், அவள் தீட்சண்யமாக தன்னைப் பார்ப்பதைக் கவனித்தார். அப்போது, அந்தத்தாய் உதிர்த்த வார்த்தைகளைத் தான் மேலே வாசித்தீர்கள். ஆறு வயதானாலும், நூறு வயதானாலும் என்றோ ஒருநாள் மரணம் வந்தே தீரும். இந்த உண்மையை மனதில் வைத்து, பாசமுள்ள தாயாக மட்டுமல்ல... வீரத்தாயாகவும் இருந்து பிள்ளைகளை வளருங்கள். அவர்கள் உலக சரித்திரத்தில் இடம்பிடிப்பார்கள்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment