1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஆஸ்ரமத்தில் இருந்த சீடனுக்கு திருமண ஆசை வந்து விட்டது. துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தான் அங்கு அவன் வந்தான். ஆனால், ஏனோ மனம் அதில் லயிக்கவில்லை. அவன் அங்கே சமையல், குருநாதருக்கு கை கால் கழுவ தண்ணீர், மண் (அந்தக்கால சோப்) எடுத்து வைப்பது ஆகிய பணிகளைச் செய்வான். ஒருமுறை சாப்பாட்டில் புளி, காரம் வழக்கத்தை விட அதிகம் சேர்த்திருந்தான்.
துறவு வாழ்க்கை மேற்கொள்ள எண்ணுவோர் இதைக் குறைப்பதே வழக்கம். இந்த சாப்பாடு விஷயமே, அவனுக்கு கல்யாண ஆசை வந்து விட்டது என்பதை குருவுக்கு உணர்த்தி விட்டது. ஒருநாள், குருவுக்கு கை கால் கழுவ மண்ணையும், தண்ணீர் செம்பையும் கொடுத்து விட்டு கைகட்டி வாய் பொத்தி நின்றான். தன் கையில் இருந்த மண்ணை திருப்பிக் கொடுத்த குரு, சீடனே! உனக்கு கல்யாண ஆசை வந்துள்ளதை நான் அறிவேன். உன் இஷ்டப்படி நடத்தலாம். இந்த மண்ணை உன் துண்டில் முடிந்து கொள். நீ கிளம்பலாம். உனக்கு திருமணம் நல்லபடியாக நடக்கும். என் ஆசிகள், என்றார்.
மகிழ்ச்சியடைந்த சீடன், அவர் கொடுத்த மண்ணை துணியில் முடிந்து கொண்டு கிளம்பினான். ஊருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் இருட்டாகி விட்டது. ஒரு வீட்டின் திண்ணையில் படுத்தான். குருநாதர் கொடுத்த மணல் முடிந்த துணியை, கூரையில் கட்டி விட்டுத் தூங்கினான். இரவானதும், ஏதோ சூடு உடலில் படுவது போல் தெரிந்தது. கண்விழித்துப் பார்த்தால், கூரையில் கட்டிய துணியில் இருந்து நெருப்பு பறந்து கொண்டிருந்தது. அங்கு நின்ற ராட்சஷன் மீது அது பாய்ந்தது. அதன் உக்ரம் தாள முடியாமல் அவன் தடுமாறினான். சீடனிடம் வந்து, வாலிபனே! நான் ஒரு ராட்சஷன்.
இந்த வீட்டுக்குள் அவசரமாகச் செல்ல வேண்டும். ஆனால், நீ கட்டியுள்ள துண்டில் இருந்து பறந்து வரும் நெருப்பு என்னை சுடுகிறது. வீட்டிற்குள் போக முடியவில்லை. அந்தத் துண்டை அவிழ்த்து விடு, உனக்கு குடம் நிறைய தங்கக்காசு தருகிறேன், என்றான். எதற்காக நீ உள்ளே போக வேண்டும் என்கிறாய்? என்ற சீடனின் கேள்விக்குப் பதிலளித்த ராட்சஷன், இந்த வீட்டில் உள்ளவன் கடந்த ஜென்மத்தில் என் குழந்தைகளைக் கொன்று விட்டான். பழிக்குப் பழியாக அவனது ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன்.
இப்போது எட்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதைக் கொல்ல வந்துள்ளேன், பாவம் செய்தவனைத் தண்டிக்க வேண்டும், என்று பணிவும் கண்டிப்பும் கலந்த குரலில் சொன்னான். சரி.. சரி... நீ முதலில் தங்க குடத்தைக் கொடு. நான் துணியை அவிழ்த்து விடுகிறேன், என்று சீடன் சொன்னதும், கண்ணிமைக்கும் நேரத்தில் தங்கக்குடம் ஒன்றை வரவழைத்து கொடுத்தான். அதைப் பெற்றுக்கொண்ட சீடன், துண்டை அவிழ்த்து உள்ளிருந்த மண்ணை எடுத்து, ராட்சஷன் மேல் வீசினான். அவன் கதறியபடியே சாம்பலானான். அப்போது, வீட்டுக்கதவு திறந்தது. வீட்டுக்காரர் சீடனுக்கு நன்றி சொன்னார்.
நான் போனபிறவியில் செய்த தவறுக்குரிய தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தேன். தங்கள் அருளால் இனி பிழைத்தேன். அன்பரே! தாங்கள் செய்த உதவிக்கு கைமாறாக என் தங்கையை உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன். தாங்கள் எங்களுடனேயே தங்க வேண்டும், என்றார். அவர்களின் திருமணம் இனிதே நடந்தது. தங்கக்காசு கொண்ட குடமும் இருந்ததால் தம்பதியர் செல்வச்சிறப்புடனும் வாழ்ந்தனர். இவ்வளவு மகிமைமிக்க மண்ணைத் தந்த அந்த குரு யார் தெரியுமா? ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்.!
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment