1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
சுப்ரோத்தோ மித்ரா என்ற இளைஞர் வங்காளத்தைச் சேர்ந்தவர். சுவிஸ் நாட்டிலுள்ள மைக்ரோஸ் ஒழுங்குமுறை கடைகளில் அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது மாதச்சம்பளம் ரூ.600. முதல் மாத சம்பளத்தை வாங்கிக் கொண்டு தாய்நாடு வந்தார். அதை யாருக்காவது தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருள் இருந்தது. தனது தாயாரிடம், அம்மா! இதை யாருக்குத் தானம் செய்யலாம்? என்றார்.
அவர்கள் இந்துக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அந்தத்தாயின் வாயில், மகனே! அன்னை தெரசா இங்கு தானே இருக்கிறார். அவரை நேரில் சந்தித்துக் கொடு, என்றார். அவர் அன்னை தெரசாவைப் பார்க்க வந்தார். ஏராளமானோர் அவரைப் பார்க்க தங்கள் விசிட்டிங் கார்டுகளைக் கொடுத்து விட்டுக் காத்திருந்தனர். இளைஞரும் தன் கார்டை உள்ளே அனுப்பினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்தார். சாதாரணப்பட்டவர் என்றாலும், அந்த ஊழியரையும் உள்ளே அழைத்த அன்னை, அவருடன் கருணையுடன் பேசினார்.
ஒரு நடுத்தர குடும்பத்தினர், மகன் எப்போது முதல் மாத சம்பளம் வாங்குவான்? அதைக் கொண்டு தங்கள் தேவைகளையெல்லாம் நிறைவேற்றலாம் என்று தான் கணக்குப் போடுவார்கள். ஆனால், அந்த இளைஞனின் குடும்பம் அதைத் தானம் செய்தது கண்டு, அன்னை தெரசா நெகிழ்ந்து போனார். தகுதியான இடத்தில் தானத்தைச் சேர்த்த மகிழ்ச்சியில் இளைஞரும் ஆசிபெற்றார்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment