1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
விப்ரோ டெக்னாலஜீஸ் லிமிடெட் என்ற புகழ் பெற்ற நிறுவனத்தை அறியாதவர்கள் இல்லை. இந்தக் கம்பெனியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 32 ஆயிரம் கோடி. இதன் தலைவர் அசிம் பிரேம்ஜி. உலகப்பெரும் பணக்காரர் வரிசையில் உள்ளார். வயது 57. 35 ஆண்டுகளுக்கு முன், அவர் அமெரிக்காவிலுள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எஸ். (அறிவியல்படிப்பு) படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரது தந்தை திடீரென காலமாகி விட்டார். அவர் செய்து கொண்டிருந்த தொழில் எண்ணெய் வியாபாரம். அதைக் கவனிக்க ஆளில்லாததால், பிரேம்ஜி இந்தியா திரும்பி விட்டார். அதன் பின் அவரது வாழ்வில் எவ்வளவோ முன்னேற்றம். இருந்தாலும், தான் படிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவருக்குள் இருந்தது. ஐம்பது வயதுக்குப் பிறகு, பாதியில்விட்ட பட்டப்படிப்பை படித்து முடித்தார். அவரிடம் பணம், புகழ் எல்லாம் கொட்டிக்கிடந்தும், விட்டதை நிறைவு செய்ய வேண்டும் என்ற முயற்சி ஊறிக்கிடந்தது.
அந்த முயற்சி தான் அவரை பெருமளவு உயர்த்தி இருக்கிறது. அந்தத் தொழிலதிபரின் அறிவு வேட்கையின் வெளிப்பாடு, எல்லாருக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருக்கிறது. அதுபோல, ஆன்மிக உலகில் நாம் இந்த ஏழாண்டுகளில் படித்தது அணுவளவே. இன்னும் தெரிந்து கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அவற்றையெல்லாம் தோண்டித் துருவி எடுப்போம். பாரதத்தின் அடிப்படையான ஆன்மிகத்தை பக்தி நீருற்றி வளர்ப்போம்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment