1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ராமாவதார காலத்தில், ரங்கநாதர் கோயில் அயோத்தியில் இருந்தது. ரங்கநாதரே அவரது குலதெய்வம். தனது பட்டாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, ராமபிரான் பரிசுகளை வழங்கினார். ராவணனின் தம்பி விபீஷணன், ரங்கநாதர் சிலை தனக்கு வேண்டுமென கேட்க, அதையே பரிசாகக் கொடுத்தார். பிராண வாக்ருதி என்னும் விமானத்தில் பெருமாளை வைத்து, ஆகாயமார்க்கமாக விபீஷணன் பறந்து வந்தார்.
காவிரி நதிக்கரையில் கோயில் கொள்ள விரும்பிய பெருமாள், அவருக்கு உடல்சோர்வை ஏற்படுத்தினார். அரங்கம் என்னும் மேட்டுப்பகுதியில் பெருமாளை வைத்துவிட்டு நீராடிய வீபிஷணன், மீண்டும் விக்ரஹத்தை அவ்விடத்தில் இருந்து எடுக்கமுடியவில்லை. தகவல் அறிந்த சோழமன்னன் தர்மவர்மன் அங்கு ஒரு கோயில் கட்டி வழிபட்டான். காலப்போக்கில் அக்கோயில் சிதிலமடைந்து காவிரி ஆற்றில் புதைந்தது. தர்மவர்மனின் மரபில்வந்த கிள்ளிவளவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
அங்கே, மரநிழலில் இளைப்பாறினான். அம்மரத்தில் வசித்த கிளி மன்னனிடம், மன்னா! பாற்கடல் வாசனான மகாவிஷ்ணு இங்கே ரங்கநாதராகப் பள்ளி கொண்டிருக்கிறார். ஸ்ரீரங்கம் என்னும் திருத்தலம் இது'' என்று அரங்கநாதரின் வரலாற்றை எடுத்துச் சொன்னது. அப்போது பெருமாளும் தன் இருப்பிடத்தை கிள்ளிவளவனுக்கு காட்டியருளினார். அரங்கனைக் கண்ட கண்கள் வேறொன்றினைக் காணாவே என்று மெய்சிலிரித்துப் போன மன்னன் அங்கே அழகிய ஆலயத்தை எழுப்பினான்.
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment