1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
ஒரு பெண்ணுக்கு இரண்டு தன்னம்பிக்கை பாட்டுகளும், அவற்றின் பொருளும் தெரியும். ஆனால், அது தனக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும். யாருக்கும் தெரிந்தால் அவர்களும் தன்னம்பிக்கை பெற்று முன்னேறி விடுவார்கள் எனக் கருதி, கணவனிடம் கூட சொல்லாமல் இருந்தாள். அவன் தன்னை விட புத்திசாலியாகி விடக்கூடாதே என்ற நல்லெண்ணமே இதற்குக் காரணம். இதனால் கோபமடைந்த அந்த பாடல்களும், பொருளும் அவளைப் பழிவாங்க எண்ணின.
அவை இரு செருப்புகளாக மாறி அவள் வீட்டு வாசலில் கிடந்தது. அவற்றின் பொருள், ஆண்கள் அணியும் சட்டையாக மாறி அவள் வீட்டு நாற்காலியில் கிடந்தது. வெளியே சென்ற கணவன் வந்தான். செருப்பை பார்த்து யாரோ வந்திருக்கிறார் என யூகித்தான். உள்ளே கிடந்த சட்டையைப் பார்த்து, யார் வந்தது? என மனைவியிடம் கேட்டான். யாரும் வரவில்லையே! என அவள் கையை விரிக்க, அவள் மீது சந்தேகப்பட்டு அடித்தான். வருத்தத்துடன் அருகிலுள்ள மண்டபத்துக்கு போய் படுத்தான்.
அப்போது அந்த மண்டபத்துக்கு ஒவ்வொரு வீட்டிலும் அணைக்கப்பட்ட தீபங்கள் வந்து சேர்ந்தன. கடைசியாக ஒரு தீபம் வந்தது. கடைசி தீபம் மற்றவைகளிடம், இதோ! படுத்திருக்கிறானே! இவன் தேவையில்லாமல் மனைவியை சந்தேகப்பட்டவன், என்று நடந்த கதையைச் சொன்னது. அவன் உண்மையை உணர்ந்தான். மனைவியிடம் மன்னிப்பு கேட்டு, அந்தப் பாட்டையும், பொருளையும் கேட்டான்.
அவை அவளை விட்டு வெளியேறி செருப்பாகவும், சட்டையாகவும் மாறிவிட்டதால் அவளுக்கும் மறந்து விட்டது. புரிந்து கொண்டீர்களா! பயனுள்ள விஷயங்களை உடனுக்குடன் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை!
1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்
சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்
ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்
aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் , ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,
No comments:
Post a Comment