Tourist Places Around the World.

Breaking

Monday 17 August 2020

டீக்கடைக்காரனும் மல்யுத்த வீரனும் - ஆன்மீக கதைகள் (98)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


எந்த ஒரு செயலையும் முழு அர்ப்பணிப்போடும், உத்வேகத்தோடும் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்பதை உணர்த்தும் கதையை கீழே பார்க்கலாம்.


ஒரு ஊரில் ஒரு டீக்கடைக்காரனும், மல்யுத்த வீரனும் நண்பர்களாக இருந்தனர். மல்யுத்த வீரன், தினமும் பயிற்சிக்குச் செல்லும் முன்பாக, தனது நண்பனின் கடைக்கு வந்து தேநீர் அருந்துவது வழக்கம். திடீரென்று ஒருநாள் நண்பர்கள் இருவருக்கும் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பேச்சு வளர்ந்து பெரிய சண்டையாக மாறியது. இறுதியில் மல்யுத்தவீரன், டீக்கடைக்காரனை தன்னுடன் மல்யுத்தம் புரிய வரும்படி அழைத்தான். டீக்கடைக்காரனும் வீராப்பாக போட்டிக்கு ஒப்புக்கொண்டான்.  போட்டி நாள் நிர்ணயிக்கப்பட்டது. 


அதன் பிறகுதான் டீக்கடைக்காரனுக்கு பயம் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. மல்யுத்தம் செய்வதையே தொழிலாக பார்த்துவரும் நண்பனை நம்மால் எப்படி வெற்றிகொள்ள முடியும் என்று நினைத்து கவலையடைந்தான்.    இதையடுத்து டீக்கடைக்காரன், அந்த ஊரில் இருந்த ஒரு ஜென் துறைவியிடம் சென்றான். நடந்ததைக் கூறி உதவி கேட்டான். அவரோ, ‘போட்டிக்கு எத்தனை நாட்கள் இருக்கிறது?’ என்றார். ‘ஒரு மாதம் இருக்கிறது’ என்றான் டீக்கடைக்காரன்.  ‘சரி.. உனக்கு என்னத் தெரியும்?’.  


டீக்கடைக்காரனோ, ‘சுவாமி! எனக்கு டீ ஆற்ற மட்டும்தான் தெரியும்’ என்றான்.  துறவியோ, ‘சரி.. அதையேச் செய். பயம் போய் விடும்’ என்றார். ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் துறவியிடம் சென்றான் டீக்கடைக்காரன். ‘சுவாமி என்னுடைய பயம் போகவில்லையே?’ என்றான். ‘டீயை இன்னும் வேகமாக, முனைப்புடன் ஆற்ற வேண்டும்’ என்று கூறினார் துறவி. அவனும் துறவி சொன்னபடியே டீயை வேகமாக ஆற்றத் தொடங்கினான். அடுத்தடுத்த வாரங்களிலும் டீக்கடைக்காரனுக்கு இதே அறிவுரைதான் வழங்கப்பட்டது. போட்டிநாள் நெருங்கி விட்டது. 


இப்போதும் டீக்கடைக்காரனின் பயம் தெளியவில்லை. மீண்டும் துறவியிடம் ஓடினான். ‘சுவாமி! நான் என்ன செய்வது?’ என்றான். ‘மல்யுத்தம் தொடங்குவதற்கு முந்தின நாள், அவனை ஒரு முறை உன் கடையில் டீ குடிக்கச் சொல்’ என்றார் துறவி. டீக்கடைக்காரன், தன்னுடன் போட்டியிட இருக்கும் நண்பனை அழைத்தான். மல்யுத்த வீரனும் ஒப்புக்கொண்டான்.  டீக்கடைக்காரன் இத்தனை நாள் பெற்ற பயிற்சியின் விளைவாக, மிகுந்த வேகத்துடனும், வெறியுடனும் டீ ஆற்றிக்கொண்டிருந்தான். 


‘ஒரு டீயை ஆற்றுவதிலேயே இவனிடம் எத்தனை வேகம், எவ்வளவு முன்னேற்றம், எத்தகைய ஒரு துடிப்பு’ என வியந்தான் மல்யுத்த வீரன். ‘இவனுடன் சண்டையிட்டால் நாம் தோற்றுவிடுவோம்’ என்று நினைத்தவன், மல்யுத்தப் போட்டியே வேண்டாம் என்று ஓட்டம் எடுத்தான். எந்த ஒரு செயலையும் முழு அர்ப்பணிப்போடும், உத்வேகத்தோடும் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் என்பதே இந்தக் கதை வலியுறுத்தும் கருத்து. 


முழுமையான ஈடுபாட்டுடன் ஒரு காரியத்தைச் செய்யும்போது, அதில் நமது திறமை பன்மடங்காக வெளிப்படும். செய்யும் செயல் அழகாகும். பணியைச் செய்பவனின் முழுத் திறமையும், ஆற்றலும் அனைவருக்கும் புலப்படும். அதை அறிந்ததாலேயே ஜென் துறவி, டீக்கடைக்காரனை அவன் தொழிலில் முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தினார்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment