Tourist Places Around the World.

Breaking

Tuesday, 18 August 2020

சீடர்களை சோதித்த குரு - ஆன்மீக கதைகள் (116)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


மனித மனம் எப்போது சலனமடையும் என்பதை சொல்வதற்கில்லை. அப்படி அது சலனமடையும் போது நடைபெறும் தவறான செயலுக்கு, அந்த மனம் நியாயங்களைத் தேடியே அலையும். அதே நேரம் திட மனது எந்த நிலையிலும் தடுமாறாது என்று சொல்வதைக் காட்டிலும், தடுமாற்றத்திற்கு அது இடமளிப்பதில்லை என்பதே பொருந்தும். 


இந்த தத்துவத்தை விளக்கும் ஒரு ஜென் கதையை இப்போது பார்க்கலாம்.  துறவி ஒருவர் ஆசிரமம் அமைத்து தங்கியிருந்தார். அவரிடம் 5 இளைஞர்கள், சீடர்களாக சேர்ந்திருந்தனர். தன்னுடைய சீடர்களுக்கும் சேர்த்து சமையல் உள்பட அனைத்து வேலைகளையும் குருவே கவனித்து வந்தார். தள்ளாத வயதிலும் கூட தன் பணியை அவரே செய்துகொள்வார். அவ்வப்போது சீடர்கள் அவருக்கு ஒத்தாசை செய்து வந்தனர். அவ்வாறு ஒத்தாசை செய்வது நாளடைவில் அவர்களுக்கு சோம்பலாக இருந்தது.    


இதனால் சீடர்கள் குருவிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர். ‘குருவே! சமையல் வேலைக்கு ஒரு ஆள் வைத்துக் கொள்ளலாமா?’.  ‘வேண்டாம். நம்மால் செய்யக் கூடியவற்றை நாமேதான் செய்ய வேண்டும். அதுதான் எப்போதும் சிறந்தது’ என்று தட்டிக் கழித்தார் குரு. சீடர்களோ ‘குறைந்தபட்சம் பாத்திரங்களை தேய்ப்பதற்காவது ஒருவரை போடலாமே’ என்றனர்.  ‘அதற்காக மட்டும் வேலைக்கு வரும் ஆட்கள் யாரும் இல்லை. வந்தாலும் அவர்கள் செய்யும் வேலை அவ்வளவு சுத்தமாக இருக்காது’ என்றார் குரு.  சீடர்கள் தொடர்ந்தனர். 


‘பெண்கள் யாரையாவது போட்டால், சுத்தமாக பாத்திரங்களை தேய்ப்பார்கள்’ என்றனர்.  குருவின் இப்போது நகைப்பு தோன்றியது. ‘வேண்டாம். அது தேவையில்லாத தொல்லை. நீங்கள் மன ஒருமைப்பாட்டிற்காக இங்கே வந்திருக்கிறீர்கள். ஆனால் அது நேர் உதிராக செயல்பட்டு உங்கள் கவனத்தை சிதறடிப்பதுடன், எண்ணங்களை அலைபாய வைக்கும்’ என்று மறுத்தார்.  சீடர்கள் விடுவதாக இல்லை. ‘வயதான பெண்மணியை வேலைக்கு நியமித்தால் கூடவா, மனம் அலைபாயும்’ என்றனர். அ


வர்களின் கேள்வியோடு, ஒரு கேலிப் புன்னகை பூத்தது. அதன் பிறகு குரு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்றைய உணவில் உப்பு, காரம், எண்ணெய் ஆகியவற்றை தூக்கலாக போட்டு சமைத்திருந்தார் குரு.  இரவு உணவை முடித்த சீடர்கள் உறங்கச் சென்றதும் குரு மட்டும் மெல்ல எழுந்து, ஆசிரமத்தின் வெளியே வந்து, கதவை பூட்டிவிட்டு எங்கோ சென்றுவிட்டார்.  இரவு சாப்பாடு இப்போதுதான் வேலை செய்யத் தொடங்கியது. உப்பு, காரம் அதிகமாக இருந்த காரணத்தால் சீடர்கள் அனைவருக்கும் தாகம் உண்டானது. ஒருவர் பின் ஒருவராக எழுந்தனர். 


ஆனால் ஆசிரமத்திற்குள் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. தண்ணீர் குடம் ஆசிரமத்திற்கு வெளியே இருந்தது. கதவை திறக்க முயன்றனர். அது வெளியே பூட்டப்பட்டிருப்பது அறிந்து செய்வதறியாது திகைத்தனர். ஆசிரமத்திற்குள் இருந்த உள் தொட்டியில் பாத்திரம் கழுவிய அழுக்கு நீர் மட்டுமே இருந்தது. இதற்குள் ஒருவனுக்கு விக்கல் எடுக்க ஆரம்பித்தது. அவன் பாத்திரம் கழுவி கொட்டப்பட்டிருந்த தொட்டியில் கைவிட்டு, மேலாக தெளிந்திருந்த நீரை அள்ளிப் பருகினான். அதைப் பார்த்த அடுத்தவன் மேலோட்டமாக கையால் நீரை அள்ளிக் குடித்தான். 


அவனைப் பின்பற்றி இன்னொருவன்.. இப்படி மாறி மாறி அவர்கள் அள்ளிப் பருகவே பாத்திரம் கழுவிய நீரும் கலங்கிப்போய்விட்டது. அதற்குள் இவர்களுக்கு அந்த நீர் பழகிப்போய், அதையே குடிக்கத் தொடங்கிவிட்டனர். அந்தத் தொட்டியில் இருந்த நீர் அனைத்தும் தீர்ந்து போனது.  மறு நாள் காலை ஆசிரமத்தின் கதவைத் திறந்து உள்ளே வந்தார் குரு. அவரிடம் சீடர்கள் அனைவரும், ‘எதற்காக எங்களை உள்ளே வைத்து பூட்டிச் சென்றீர்கள்’ என்று கேட்டு, தாங்கள் அனுபவித்த கஷ்டத்தைக் கூறினர்.  குருவிடம் சிரிப்புதான் வந்தது. ‘சிறிது நேரம் தொண்டை வறண்டு போனதும்.. அழுக்குத் தண்ணீரையே குடிக்க தயாராகிவிட்டது உங்கள் மனம். 


இந்த நிலையில் வயதான ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் என்ன நேரிடும்? தாகத்திற்கு எது கிடைத்தாலும் போதும் என்ற நிலையில் அல்லவா உங்கள் மன உறுதியை வைத்திருக்கிறீர்கள்’ என்றார் குரு. சீடர்கள் தங்களின் மனம் அலைபாயும் தன்மை கொண்டதாக இருப்பதை அறிந்து வெட்கித் தலை குனிந்தனர்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment