Tourist Places Around the World.

Breaking

Sunday, 16 August 2020

பீஷ்மருக்கு ஏற்பட்ட தர்மசங்கடம் - ஆன்மீக கதைகள் (37)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


உறங்கிக் கொண்டிருக்கும் பீஷ்மரின் கால்களைச் சிறிதும் சத்தம் செய்யாமல் தொட்டு வணங்கினார், கிருஷ்ணர். திரவுபதியும் அதேபோல் செய்ய, அது ஒரு பெண் என்று அறிந்த பீஷ்மர், திடுக்கிட்டு எழுந்து ‘தீர்க்கசுமங்கலி பவ’ என ஆசீர்வாதம் செய்கிறார்.  பின்னர் தான் அது திரவுபதி எனத் தெரிகிறது. பார்த்தால் மூலையில் ஒன்றும் அறியாதவர் போல் நின்று கொண்டிருந்தார், கிருஷ்ணன்.  “கிருஷ்ணா! என் வாக்கு தர்மப்படி நான் துரியோதனனை வெல்ல வைக்க வேண்டும். இப்போது சொன்ன வாக்கின்படி பாண்டவர் அனைவரும் நெடு நாள் வாழ வழிசெய்ய வேண்டும். இரண்டில் நான் எந்த தர்மத்தைக் காப்பாற்றினாலும், இன்னொன்றை உடைத்தே ஆகவேண்டும். என்னை இப்படித் தர்ம சங்கடத்தில் மாட்டி விட்டு விட்டாயே” என்று கேட்டார் பீஷ்மா்.


மறுநொடியே பீஷ்மரின் மனதில் ஒரு காட்சி நிழலாடியது. அது இதற்கு முந்தைய நாள் யுத்தம் ஒன்றின்போது, அர்ச்சுனன் ஒருவித தயக்கத்துடனேயே பீஷ்மருடன் போரிடுவதை கிருஷ்ணா் பார்த்தார். உடனே அர்ச்சுனனைப் பார்த்து கோபமாக, “உனக்கு நான் உபதேசித்த கீதை வீணாகிப்போனது. நானே பீஷ்மரைக் கொல்கிறேன்” என்றபடி தேரை விட்டு இறங்கி, தோ் சக்கரம் ஒன்றை கையில் ஏந்தியபடி பீஷ்மரை நோக்கி பாய்ந்தாா். அதைக் கண்ட பீஷ்மரும் கூட, தன் இருகரங்களையும் அவரை நோக்கி கூப்பி, “நான் யாரோ ஒருவரால் சாவதை விட, உன் கையால் இறப்பதே நல்லது. என்னைக் கொன்று விடு கிருஷ்ணா” என்கிறார்.


இந்த இடத்தில் குருசேத்திரப்போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற தன்னுடைய வாக்கை கிருஷ்ணர் உடைத்ததை நினைத்துப் பாா்க்கிறார், பீஷ்மா். அவருக்குச் சட்டென்று ஞானம் பிறந்தது. தர்மம்தான் முக்கியம். தன்னுடைய வாக்கு அல்ல. இறைவனான கிருஷ்ணனே தர்மத்திற்காக தன் சுயவாக்கை உடைத்தானே. நான் என்பதைப் பெரியதாக நினைப்பதால்தான், என் வாக்கு என்ற அகங்காரத்தினால்தான், இத்தனை மோசங்கள் என்பதை பீஷ்மர் உணர்ந்தார்.


என் வாக்கு என்பதை விட தர்மம்தான் முக்கியம் என்கிற ஞானம் அவருக்கு வந்தது. ‘இரு தர்மங்கள் ஒன்றிற்கொன்று எதிராகும்பொழுது பலருக்கும் நன்மைதரும் போது தர்மத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற ஞானம் உண்டானது. பீஷ்மர் மனதில் இப்போது எந்த சலனமும் இல்லை. ஏனென்றால் அவருக்குத் தெளிவு பிறந்துவிட்டது. தர்ம சங்கடம் உண்டாகவில்லை. அந்த இடத்தில் எது தர்மமோ அதைச் செய்தார். துரியோதனனுக்கு வேண்டுமானால் பீஷ்மர் செய்தது நம்பிக்கைத் துரோகமாகத் தோன்றலாம். ஆனால் பீஷ்மர் செய்தது தவறல்ல.


பீஷ்மர் கிருஷ்ணனிடம், “எனக்கு மரியாதையான இறப்பைக் கொடு” எனக் கேட்டார். அந்த இறப்பினைக் கிருஷ்ணன் அளித்தார். பீஷ்மர் இறக்கும் தருவாயில் இருந்த போதுதான், ‘விஷ்ணு சகஸ்ர நாமம்’ என்ற உயர்ந்த வாக்குகளை வெளிப்படுத்தினாா்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment