Tourist Places Around the World.

Breaking

Monday 17 August 2020

அரக்கனாக மாறிய வேதஞ்சிகன் - ஆன்மீக கதைகள் (60)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


மகிழ்ச்சி அடையும் ஒருவர், தன்னை உயர்வாகவும், மற்றவர்களைத் தாழ்வாகவும் நினைத்துக் கொண்டு, பிறரைத் தவறாகப் பேசுவதும், குறை கூறுவதும் போன்ற தவறான செயல்களைச் செய்யக்கூடாது.


கவுடதேசத்தைச் சேர்ந்த வேதஞ்சிகனுக்கு, பொன்னும் பொருளும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. பொன்னும் பொருளும் இருந்தால், மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்று நினைத்தான். அதோடு பொன், பொருள்தான் பிற்காலத்தில் தன்னைக் காப்பாற்றும் என்று கருதியவன், அவற்றை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே பல இடங்களில் புதைத்து வைத்தான். தானம், தருமம் செய்தாலோ, பிறருக்கு உதவிகள் செய்தாலோ, தன்னிடமிருக்கும் பொன்னும் பொருளும் குறைந்துவிடும் என்ற பயத்தில், அவன் அந்த ஊரிலிருப்பவர்கள் எவரிடமும் சேராமல் ஒதுங்கியே வாழ்ந்து வந்தான்.


ஒரு நாள் வேதஞ்சிகன், உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காகச், சிறிது தொலைவில் இருந்த ஊருக்குக் காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். வழியின் களைப்பு காரணமாக, அங்கிருந்த அரசமரம் ஒன்றின் அடியில் அமர்ந்து ஓய்வெடுத்தான். அப்போது, அருகிலிருந்த குருகுலம் ஒன்றில், குரு ஒருவர் தனது மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது வேதஞ்சிகன் காதுகளுக்கும் நன்றாகக் கேட்டது.  


குரு மாணவர்களிடம், ‘குழந்தை, பசு, வேதம் ஓதுவோர் போன்றவர்களுக்கு ஆபத்து வரும் காலத்தில், அவர்களைத் துணிந்து காப்பாற்றுபவர்கள், பூமி, பசு, யானை போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பவர்கள், கிணறு, குளம், ஆலயம் போன்றவற்றை உருவாக்குபவர்கள் மற்றும் அதைப் புதுப்பிப்பவர்கள், பிறருக்கு நல்லதை மட்டுமே செய்து அறநெறியில் வாழ்ந்து வருபவர்கள், தன்னால் முடிந்த வரை, பிறருக்குத் தான தர்மங்களைச் செய்து கொண்டிருப்பவர்கள், தினமும் இறைவனை வணங்கிச் செயல்படுபவர்கள், இறைவன் பெயரைச் சொல்லிக் கொண்டே இறப்பவர்கள் போன்ற வர்களுக்கு, அவர்களின் இறப்புக்குப் பின்பு சொர்க்கம் கிடைக்கும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.


அதைக் கேட்ட வேதஞ்சிகனுக்குத் தானும் இறந்த பின்பு சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆனால், குரு சொர்க்கம் செல்வதற்குச் சொன்ன எந்தவொரு நல்ல செயலையும் தான் இதுவரை செய்யாததால், தனக்குச் சொர்க்கம் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டான். சிறிது நேரத்துக்குப் பிறகு அவன், அங்கிருந்து புறப்பட்டுச் சென்று உறவினரைச் சந்தித்து விட்டு இரவில் வீடு திரும்பினான்.


சாபம் : அன்று இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. தான் இறந்த பின்பு எப்படியாவது சொர்க்கத்துக்குச் சென்று விட வேண்டும் என்கிற ஆசை, அவனுக்குள் அதிகமாகிக் கொண்டே இருந்தது. குரு சொன்னதில் ஒன்றை மட்டுமே தன்னால் செய்ய முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. சொர்க்கத்துக்குச் செல்லும் வழியில், ஒரு இடத்தில் பல முனிவர்கள் தியானத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர்களுக்குச் சில தேவலோகப் பெண்கள் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான்.

மறுநாள் அவன், அந்த ஊரில் பாழடைந்து கிடந்த விஷ்ணு கோவிலைப் பராமரிப்பு செய்து, மக்கள் வழிபாட்டுக்குரியதாக மாற்ற முடிவு செய்தான். அப்படியே, அந்தக் கோவிலுக்கு அருகில் அனைவரும் பயன்படுத்துவதற்கு ஒரு புதிய குளம் வெட்ட வேண்டும் என்றும் நினைத்தான். அதற்காகத் தான் சேர்த்து வைத்திருந்த பொன்னையும் பொருளையும் எடுத்துச் செலவு செய்தான்.  

அவன் செய்து வந்த கோவில் பராமரிப்புப் பணியும், குளம் வெட்டும் பணியும் முடிவடைவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகவே அவன் திடீரென்று இறந்து போனான். அவன் கடைசி காலத்தில் செய்த நற்செயலால் அவனுக்குச் சொர்க்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சொர்க்கத்துக்குச் செல்லும் வழியில், ஒரு இடத்தில் பல முனிவர்கள் தியானத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதையும், அவர்களுக்குச் சில தேவலோகப் பெண்கள் பணிவிடைகள் செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். 


உடனே அவன், தான் ஒரே ஒரு நல்ல செயலைச் செய்து சொர்க்கத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறோம். இங்கு பல முனிவர்கள், இறைவனை நினைத்துப் பல ஆண்டுகளாகத் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களால் சொர்க்கத்துக்குப் போக முடியவில்லையே என்று நினைத்தவன், முனிவர்களைப் பார்த்து, ‘முனிவர்களே! எத்தனையோ ஆண்டுகள் தவம் செய்தும், உங்களுக்குக் கிடைக்காத சொர்க்கம் எனக்குக் கிடைத்து விட்டது. சொர்க்கம் செல்ல முடியாமல், இங்கே உட்கார்ந்து வீணாகத் தவம் செய்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, பூலோகம் சென்று ஏதாவது நல்ல செயலைச் செய்யலாமே’ என்று அவனுக்குத் தோன்றியதைச் சத்தமாகப் பேசினான்.  


அவனுடைய சத்தத்தால் தவம் கலைந்த முனிவர்கள், கோபத்துடன் எழுந்தனர். முனிவர்களில் ஒருவர் அவனைப் பார்த்து, ‘வேதஞ்சிகனே! மனித வாழ்க்கை முழுவதும் இறைவனை வழிபட்டு, தானம், தருமம் செய்து கொண்டிருந்தவர்களுக்குக் கிடைக்காத சொர்க்கம், உனக்கு எளிதாகக் கிடைத்து விட்டதால், அதன் அருமை சிறிது கூட உனக்குத் தெரியவில்லை. இறைவனின் திருவடிகளை அடைவதற்காக நாங்கள் செய்த தவ முயற்சியைக் குறைத்துப் பேசி எங்களை அவமதித்து விட்டாய். நீ செய்த இந்தத் தவறுக்கு அரக்கனாக மாறித் துன்ப மடைவாய்’ என்று சாபமிட்டார்.


முனிவரின் சாபத்தால் வேதஞ்சிகன் சொர்க்கம் செல்ல முடியாமல் போனது. சிறிது நேரத்தில் அவன் உருவம் அரக்கனாக மாறியது. அப்போதுதான் அவனுக்கு, தான் முனிவர்களைக் குறைவாக மதிப்பிட்டுப் பேசியது தவறு என்பது புரிந்தது. உடனே அவன் அங்கிருந்த முனிவர்களைப் பார்த்து வணங்கி, தனது தவறை மன்னித்து சாப விமோசனம் தரும்படி வேண்டினான். அவன் வேண்டுதலைக் கேட்டு முனிவர் மனமிரங்கினார். ‘வேதஞ்சிகனே! பூலோகத்தில் அரக்கனாக இருக்கும் உனக்கு, இறைவனின் பெயரைச் சிலர் ஒன்றாகச் சேர்ந்து சொல்லிக் கேட்கும் போது, இந்தச் சாபத்திலிருந்து விடுதலை கிடைக்கும். அதன் பிறகு நீ விரும்பிய சொர்க்கம் சென்றடைவாய்’ என்றார். அதைக் கேட்டு அரக்கன் உருவத்திலிருந்த வேதஞ்சிகன் மகிழ்ச்சியடைந்தான். பின்னர் அவன் பூலோகத்தில் போய் விழுந்தான்.


விமோசனம் : அயோத்தியில் அரசராகப் பதவி ஏற்ற ராமர், அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் அசுவமேத வேள்வியைச் செய்ய முடிவு செய்தார். அந்த வேள்விக்காக, கறுத்த காது, வெளுத்த உடல், சிவந்த வாய், மஞ்சள் நிற வால் போன்றவைகளுடன் இருக்கும் உயர்ந்த வகைக் குதிரை ஒன்றைத் தேர்வு செய்தனர். ராமரின் ஆணைப்படி, அந்தக் குதிரை பல நாடுகளையும் சுற்றி வருவதற்காக அனுப்பப்பட்டது. அசுவமேத வேள்விக்காகப் பல நாடுகளையும் சுற்றி வர அனுப்பப்படும் குதிரையை யாராவது இடையில் கைப்பற்றி விட்டால், அந்த வேள்வி நிறைவடையாமல் போய்விடும் என்பதால், சத்ருக்கனன், அவரது மகன் புஷ்கரன், அனுமன் ஆகியோர் சிறிய படை ஒன்றை அழைத்துக் கொண்டு குதிரைக்குப் பாதுகாப்பாகச் சென்றனர்.


குதிரை பல நாடுகளையும் சுற்றி வந்து கொண்டிருந்தது. ஹேமகூடம் என்ற இடத்திற்கு வந்த போது, அந்தக் குதிரை அசையாமல் அப்படியே நின்றுவிட்டது. நகராத அந்தக் குதிரையைப் பாதுகாப்புக்கு வந்த வீரர்கள் பலரும், தங்கள் பலத்தைப் பயன்படுத்தி இழுத்துப் பார்த்தார்கள். ஆனாலும் குதிரை சிறிது கூட நகரவில்லை. அனுமன் தன் வாலால் சுற்றி முழு பலத்துடன் இழுத்தும் பலன் இல்லை. இந்த இடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால்தான் குதிரை நகர மறுக்கிறது என்று நினைத்த அவர்கள், அதற்கு என்ன காரணம் என்று யாரிடமாவது கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்தனர். அப்போது சிறிது தொலைவில் ஒரு ஆசிரமம் இருப்பது தெரிந்தது. அனுமன், தன்னுடன் சிலரை அழைத்துக் கொண்டு ஆசிரமத்தை நோக்கிப் போனார்.


அந்த ஆசிரமம் சவுனக முனிவருடையது. முனிவரை சந்தித்த அனுமன் நடந்ததை சுருக்கமாகச் சொன்னார். அதைக் கேட்ட முனிவர், ‘குதிரையின் காதுகளில் விழும்படி ராமனின் நாமத்தைச் சத்தமாகச் சொல்லுங்கள். குதிரை நகர்ந்துவிடும்’ என்று சொன்னார். அதன்படியே குதிரையின் காதில் ராம நாமம் சத்தமாக உச்சரிக்கப்பட்டது. அப்போது அந்த இடத்தில் அரக்கன் ஒருவன் தோன்றினான். அவன் சிறிது நேரத்தில் வேதஞ்சிகனாக சுய உரு பெற்றான். அனுமன் உள்ளிட்ட அனைவரும் அவனைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அவன் தன்னுடைய முன்கதையைக் கூறி விட்டு அங்கிருந்து சொர்க்கம் நோக்கிச் சென்றான்.


தனக்குக் கிடைத்த உயர்வை நினைத்து மகிழ்ச்சி அடையும் ஒருவர், தன்னை உயர்வாகவும், மற்றவர்களைத் தாழ்வாகவும் நினைத்துக் கொண்டு, பிறரைத் தவறாகப் பேசுவதும், குறை கூறுவதும் போன்ற தவறான செயல்களைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால், தங்களுக்குக் கிடைத்ததை இழப்பதுடன், மிகப்பெரும் துன்பத்தையும் சேர்த்துப் பெற நேரிடும் என்பதை வேதஞ்சிகன் பெற்ற சாபமும் விமோசனமும் நமக்கு உணர்த்துகின்றன.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment