Tourist Places Around the World.

Breaking

Monday 17 August 2020

தூய்மையான பக்தியை உணர்த்தும் கதை - ஆன்மீக கதைகள் (94)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


அன்புள்ளம் கொண்டவர்களின் பக்திக்கே இறைவன் இரங்கி அருள்வான். அதே நேரம் பக்தியில் கொஞ்சம் அகங்காரம் இருந்தாலும், இறைவனின் அருளைப் பெறுவது அரிது.  ஒரு விஷ்ணு ஆலயத்தில் திருமாலின் மகிமையைப் பற்றி சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார், அந்தக் கோவிலின் அர்ச்சகர். அந்த சொற்பொழிவை ஏராளமான பக்தர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். 


அந்தக் கூட்டத்தில் சுவாமி தரிசனத்திற்காக வந்திருந்த வேலவன் என்ற பக்தரும் ஒருவர். அர்ச்சகரின் சொற்பொழிவைக் கேட்டு மெய்மறந்து போனார் வேலவன். சொற்பொழிவு முடிந்ததும் வெளியே வந்த அர்ச்சகரைப் பார்த்து வணக்கம் கூறி, நலம் விசாரித்தார் வேலவன். ஆனால் அர்ச்சகரின் பேச்சில் பக்தியையும், ஞானத்தையும் விட ஏளனமும், கர்வமுமே தலை தூக்கி இருந்தது. அதைப் புரிந்து கொள்ளாத வேலவன், ‘ஐயா! அவ்வப்போது நானும் கண்ணனை தியானம் செய்கிறேன். இருப்பினும் கண்ணனின் தரிசனத்தை முழுமையாக என்னால் தியானிக்க முடியவில்லை. அந்த சிரமத்தில் இருந்து வெளிவர எனக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுங்கள்’ என்றார்.  


அவருடைய அப்பாவித்தனத்தைப் பார்த்த அர்ச்சகர், வேலவனிடம் விளையாட்டுக் காட்ட எண்ணினார். ‘நீ அந்த பரந்தாமனின் பக்தன் தானே.. அவனை எருமை மாடு வடிவத்தில் கூட தியானிக்கலாமே..’ என்று விளையாட்டாய் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். இதை உண்மை என நம்பிய வேலவன், அன்று முதல் எருமை மாடு வடிவத்திலேயே கண்ணனை தியானிக்கத் தொடங்கினார். அவருடைய தீவிரமான தியானத்தால், அவருக்கு எருமை மாடு வடிவிலேயே காட்சியளித்தார் கண்ணபிரான்.  


ஒரு நாள் விஷ்ணு ஆலயத்தில் உற்சவம் நடைபெற்றது. உற்சவத்தின் போது, உற்சவர் சிலையை ஊர்வலமாக தூக்கிக் கொண்டு வந்தனர். அப்போது கோவில் ஆலய வாசலைத் தாண்டி உற்சவர் சிலையைக் கொண்டுவர முடியவில்லை. சிலை வருவதில் எந்த தடையும் இல்லாத நிலையில், எதனால் சிலை வெளியே வர மறுக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை. பலரும் குழப்பத்தில் ஆழ்ந்து போயினர்.  


அப்போது வெளியே நின்று உற்சவரை தரிசனம் செய்து கொண்டிருந்தார் வேலவன். அவரது கண்ணுக்கு உற்சவ மூர்த்தியான கண்ணனின் உருவம் எருமை மாடு வடிவத்தில் காட்சியளித்தது. அந்த மகிஷத்தின் கொம்பு இடிப்பதாலேயே உற்சவர் சிலை வெளியே வர முடியவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. உடனே அவர், ‘சற்று வலதுபுறமாக சாய்த்து எடுங்கள். அங்குதான் கொம்பு இடிக்கிறது. அதனால்தான் சுவாமியால் வெளியே வர முடியவில்லை’ என்றார்.  ‘என்ன பிதற்றுகிறான் இவன்?’ என்று பலரும் நினைத்தாலும், அவன் சொன்னதைச் செய்து பார்ப்போமே என்று நினைத்தவர்கள், சற்று சாய்த்து முயற்சித்தபோது, உற்சவர் சிலை வெளியே வந்தது.  அப்போது கருவறையில் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகருக்கு, இறைவன் எருமை மாடு வடிவில் காட்சியளித்தார். 


மேலும், ‘என் பக்தனான வேலவன், இந்த வடிவில்தான் என்னை தியானித்து வருகிறான்’ என்று விவரித்தார்.  இப்போது அர்ச்சகருக்கு புரிந்து போனது. வேலவன் எதற்காக ‘கொம்பு இருப்பதால்தான் சுவாமி வெளியே வரமுடியவில்லை’ எனச் சொன்னார் என்று. அதோடு அவரது பக்தியையும், அவருக்கு கண்ணன் செய்த கருணையையும் நினைத்து நெகிழ்ந்தார். தனது ஆணவத்தால் செய்த பிழையை எண்ணி வருந்தினார். 


பின்னர் வேகமாக வெளியே வந்து வேலவனின் திருவடிகளில் விழுந்து ஆனந்த கண்ணீர் வடித்தபடி, நடந்த சம்பவங்களை விளக்கினார். அப்போதுதான் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கும், வேலவன் சொன்னதற்கான காரணம் புரிந்தது. தூய்மையான பக்தி, இறைவனையும் அசைத்துப்பார்க்கும் என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் , 

No comments:

Post a Comment