Tourist Places Around the World.

Breaking

Wednesday, 9 September 2020

திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள் கோவில் / Thirukannapuram Neelamegha Perumal Temple

 

நீலமேகப் பெருமாள் கோவில், திருக்கண்ணபுரம்  

NEELAMEGHA PERUMAL TEMPLE, THIRUKANNAPURAM, NAGAPATTINAM


இவ்விடம் நாகபட்டிணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நன்னிலம் நாகபட்டிணம் சாலையில் திருப்புகலூரிலிருந்து 2 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 2000 வருடங்களுக்கு முற்பட்டது. ஒரு சமயம் திருமாலை வேண்டி முனிவர்கள் பலர் இத்தலத்தில் தவம் இயற்றினர். இதனால் அவர்களின் தேகம் மெலிந்து நெற்பயிர் போலானது. திருமாலிடம் நமோ நாராயணா மந்திரத்தைக் கற்ற உபரிசிரவசு மன்னன் தன் படையினரோடு இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தான். படைவீரர்கள் பசியைப் போக்க நெற்பயிர்போல் காட்சியளித்த முனிவர்களை வெட்டினர்.  

இதனைத்தடுக்க திருமால் சிறுவனாக வந்து அவர்களுடன் போரிட்டார். உபரிசிரவசு நமோ நாராயணா மந்திரத்தை சிறுவனின் மீது உபயோகித்தான். மந்திரம் சிறுவனின் திருவடிகளில் விழுந்தது. திருமால் நீலமேகப் பெருமாளாகக் காட்சியளித்தார். மன்னனின் வேண்டுகோள்படி இத்தலத்தில் இருந்து அருளுகிறார்.  

திருமால் அடியவரான கோவில் அர்ச்சகர் ஒருவரை மன்னனின் தண்டனையிலிருந்து காப்பாற்ற அர்ச்சகரின் வேண்டுகோளுக்கு இணங்கி தன் திருமுடியை மன்னருக்கு காட்டியருளினார். எனவே இத்தல இறைவனை சௌரிராஜப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் திருமால் நின்ற கோலத்தில் அருளுகிறார். இத்தலத்தில் இறைவனின் கைகள் தானம் பெறுவது போல் (அதாவது பக்தர்களின் பாவங்களை எல்லாம் வாங்கிக் கொள்ளும் வகையில்) உள்ளன.

இங்கு திருமால் எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாக கையில் முழுவதும் திரும்பிய பிரயோகச் சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் கீழைவீடு என்று சிறப்பாக அழைக்கப்படுகிறது. வைகாசி பிரம்மோற்சவ விழவாவின் போது காலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் திருமால் என மும்மூர்த்தி வடிவில் அருளுவது இத்தலச் சிறப்பாகும். இராமர் இத்தலத்தில் விபீசணனுக்கு திருமால் வடிவில் நடந்து காட்டியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் அமாவாசை அன்று விபீசணனுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது.  

இக்கோவிலில் மூலவரை நோக்கி ஒரே வட்டத்தில் நவகிரகங்கள் காட்சியளிக்கின்றன. இத்தலம் இறைவன் வைகுந்த பதவியை வழங்குபவராகப் போற்றப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட அனைத்து நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும். இங்கு திருமால் நீலமேகப் பெருமாள், சௌரிராஜப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் கண்ணபுரநாயகி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசனம் செய்துள்ளனர்.


கோவில்கள் வரலாறு , இந்திய கோவில்கள் , கோவில்களின் மர்மங்கள் , சிறப்பு வாய்ந்த கோவில்கள் , பரிகார கோயில்கள் , பரிகார கோவில்கள் , பிரசித்தி பெற்ற ஆலயங்கள் , temples in india , famous temples in india , oldest temples in india , must visit temples in india , famous perumal temples in india ,  

famous perumal temples in tamilnadu , தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் , தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில் , தமிழ்நாட்டில் உள்ள  புகழ்பெற்ற கோவில்கள் , temples in tamilnadu ,  tamilnadu temple tour , oldest temple in tamilnadu ,must visit temples in tamilnadu , must visit temples in south india , south india temple tour , 

famous temples in nagapattinam , must visit temples in nagapattinam ,

No comments:

Post a Comment