Tourist Places Around the World.

Breaking

Friday 31 May 2019

கல்லை தொட்டு லிங்கமாக மாற்றிய மகான் படேசாகிப் / Bade Sahib Siddhar

மகான் படேசாகிப்!! (bade sahib siddhar)

கல்லை தொட்டு லிங்கமாக மாற்றிய மகான்

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


விழுப்புரம் மாவட்டம் கண்டமங்களம் அருகே உள்ள சின்னபாபா சமுத்திரத்தில் பாபா படேசாகிப் ஜீவ சமாதி உள்ளது. ஒன்றே குலம்  ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார். இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

புதுவை என்ற சிறு நிலப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் சமாதி எழுந்தருளியுள்ளார்கள். அவ்வகையில், சத்தியத்தின் ஒளிக்கதிர்கள் வீசுமிடமாக விழுப்புரத்திலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் 20 கி.மீ. தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே உள்ளது சின்னபாபு சமுத்திரம் கிராமம்.பல ஆண்டுகளுக்கு முன் மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், மற்றும் பல நாடுகளிலும் ஸ்ரீ வைத்தியநாதனாக மக்களின் பலதரப்பட்ட நோய்களைத் தீர்த்து இப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். மகான் ஓம் ஸ்ரீ படேசாகிப் சித்தர் அமைதியுடையவர், ஆத்மஞானி, ஆத்மஞானியிடம் அமைதி சரணடைகிறது. அமைதியும் ஆனந்தமும் கலந்த சச்சிதானந்தத்தில் வாழ்வதே ஆத்மஞானியின் முடிவு. இறைவன் படைத்தவைகளில் கவனத்தைச் செலுத்தாது இறைவனிடம் கவனம் செலுத்துதலே சிறந்தது.
இறைவனின் பேராற்றலை உணர்ந்த பிறகு சாதி, மதம், இனம் அறவே மறைந்துவிடும். படே என்றால் பெரிய என்று பொருள். உயர்ந்த இத்தகைய நிலையில் இருந்த உத்தமராக விளங்கியதால் இவரை பாபா படே சாயபு என்று அழைத்தனர்.ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மத ஒருமைப்பாட்டைக் காக்கும் சித்த புருஷரே ஸ்ரீ படேசாகிப் ஆவார். நோயாளிகளுக்கு விபூதி கொடுத்தே நோய்களைப் பறந்தோடச் செய்தார்.
இமயமலையின் அடிவாரத்தில் சுமார் 2000 அடி கீழே புதைத்திருந்த நிஷ்டதார்யம் எனப்படும் உளிபடாத கல்லை இறையருள் வழிகாட்டுதலால் இவர் தொட்டு அழகிய அருணாசலேஸ்வர் லிங்கமாக உருப்பெற செய்துள்ளார். இது இவரின் சமாதி அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவர் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அற்புத விநாயகர் சிலை அளவில்லா அருளை வாரி வழங்கி வருகிறார். அவ்வூரில் மகான் படேசாகிப் ஆத்ம சாதனை செய்து இறைவனோடு கலந்துள்ளார். இவ்வூரில் மகானின் சமாதி மிக அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது.
பாம்புக்கு மோட்சம் அளித்த மகான் சிவஸ்ரீ பாபா படேசாகிப்:
 ஒருநாள் வனத்தாம் பாளையம் சென்று பண்ணகுப்பத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வரப்பில் படுத்துக் கொண்டிருந்த ஒரு கருநாகம் மகானின் பாதத்தை தீண்டிச் சென்றது. அதைக் கண்டு அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் நடுநடுங்கினார்கள். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்று புலம்பினார்கள். ஆனால் மகான் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் போய்க் கொண்டே இருந்தார். மக்கள் அவர் கூடவே ஓடி, விஷ முறிவு மருந்து சாப்பிட வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட மகான் புன்முறுவல் பூத்தார். மக்கள் ஆச்சரியத்துடன் அவர் கூடவே பண்ணகுப்பம் போய்ச் சேர்ந்தார்கள்.
இரவு முழுவதும் மகானை கவனித்துக் கொண்டு உண்ணாமல் உறங்காமல் கவலையோடு இருந்தனர். இரவு முழுவதும் மகானும் உறங்கவில்லை. மறுநாள் காலை அங்கு உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்றார். ஆனை முகத்தானை வணங்கினார். அவர் உடல் முழுவதும் நீலம் பரவி இருந்தது. பகவானிடத்தில், சர்வேஸ்வரனின் புதல்வனிடத்தில், ஞான சொரூபமான பெரிய பிள்ளையினிடத்தில் உள்ளாழ்ந்த வலுவான எண்ணத்தைச் செலுத்தினார். இமைகள் மூடிக்கொண்டன. நிஷ்டை நிலைக்கின்றது. ஒன்றும் ஒன்றும் ஒன்றில் ஒன்றாகிவிட்டது. ஒரே ஏகாந்த நிலை கூடுகின்றது. குணங்களற்ற நிலை, காலங்களற்ற நிலை வந்தெய்துகிறது.

அப்போது அவரைத் தீண்டிய அதே கருநாகம் ஆனந்தமாக கோயிலுக்குள் நுழைந்தது. பக்கத்திலுள்ளவர்கள் அலறியடித்து எழுந்தார்கள். மகான் ஆனந்த அனுபூதியில் நிலைத்திருந்தார். அந்த கருநாகம் யாரையும் எதுவும் செய்யவில்லை. மகான் அருகில் வந்தது, அவரை மூன்று முறை வலம் வந்தது. அது தீண்டிய இடத்தில் வாயை வைத்து விஷத்தை உறிஞ்சியது. உடனே விநாயக பெருமானை வலம் வந்தது. சுற்றி இருந்தவரகளை திரும்பி திரும்பி நோக்கியது. மகானின் சிரசின்மேல் ஏறி படம் எடுத்தது. மறுபடியும் இறங்கி மூன்று முறை தன் தலையால் அவரின் பாதத்தில் வணங்கியது. அவரது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தது. ஒருமணிநேரம் கழித்து மகானின் கண்கள் மெல்லத் திறன்தன. நிஷ்டை கலைந்தது. தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் கருநாகத்தைப் பார்த்தார். அது உடனே அவர் கண்களை நோக்கி தன் உடம்பை சுருட்டி தலையைக் குனிந்து வணங்கியது. பின்னர் அவர் பாதத்தில் அப்படியே குனிந்தபடியே தன் உயிரை விட்டது.
அந்த நாகத்திற்கு மகான் தனது இரண்டு கைகளாலும் ஆசீர்வாதம் செய்து மோட்ச பதவியளித்தார். அதன் பூவுடலுக்கு தன் கைகளாலேயே இறுதிச்சடங்குகளும் செய்து முடித்தார். மக்கள் பிரமிப்புடன் இந்த நிகழ்ச்சியை கண்டனர். மரணத்தை வெல்லக்கூடிய சக்தி மகான் அவர் கையிலேயே வைத்திருந்தார் என்பதை புரிந்து கொண்டனர். கொடிய விஷத்தை கொடுத்த கருநாகத்திற்குகூட அவரால் மோட்சம் அளிக்க முடிந்தது. மேலும் அந்த ஊர் மக்களுக்கு விஷம் தீண்டாதபடியும், தீண்டினாலும் அது அவர்கள் உடலில் ஏறாதபடியும் விஷ ஜந்துக்களுக்கு ஆணையிட்டு ஆசீர்வதித்தார். மக்களின் மனதில் அந்த ஆத்மஞானி தெய்வம் என்ற நிலையில் வைத்து போற்றப்பட்டார். இன்றளவும் போற்றப்படுகிறார்.
ஒவ்வொரு வாரமும் வருகிற செவ்வாய்கிழமையும், ஒவ்வொரு மாதம் வருகிற ஆயில்ய நட்சத்திரமும் சித்தர் பீடத்தின் முக்கிய விசேஷ நாட்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் வருகிற ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர் பீடத்தை மகான் தேரில் பவனி வருகிறார். ஒவ்வொரு வாரம் வருகிற வியாழன், ஞாயிறு விசேஷ நாட்கள் ஆகும். கொடிய தொற்று நோய்கள், தீராத வியாதிகள் போன்றவற்றால் அவதியுறுவோர் செவ்வாய், வியாழன், ஞாயிறு கிழமைகளில் தரிசனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் நீர்மோர், பிஸ்கட், பழவகைகள் தானம் செய்தால் உத்தமமான பலன் கிடைக்கும். வேண்டுதலுடன் வருவோர் 5 செவ்வாய் கிழமை சித்தர் பீடத்தில் இரவு தங்கி சென்றால் உத்தமமான பலன் கிடைக்கும்.
அமைவீடம் : விழுப்புரம் இருந்து கண்டமங்களத்திற்கு பஸ் வசதி உள்ளது புதுவை மாநிலத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் உள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in villupuram , villupuram siddhargal , jeeva samadhi in villupuram , villupuram  siddhar , siddhar temple in villupuram , villupuram siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in villupuram , siddhar temples in villupuram , villupuram sitthargal , siddhars in villupuram ,  

No comments:

Post a Comment