Tourist Places Around the World.

Breaking

Sunday 16 June 2019

தவத்திரு சாது சாமிகள் / Sadhu Swamigal

தவத்திரு சாது சாமிகள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


கடந்த நூற்றாண்டில் பழனியம் பதி முருகபெருமானுக்கு ஆறுகால பூஜை குறைவற நடைபெற செய்தவர்களில் முதன்மையானவர்களில் ஒருவர் - தவத்திரு சாது சாமிகள் ஆவார்.  தவ திரு சாது சாமிகளின் குரு “நந்தி அடிகளார்” ஆவார் (18 சித்தர்களில் தலைமையாக இருந்த கைலாய வர்க்க நந்தி தேவர் அல்ல). இவர் திருச்சி மாவட்டம் லால் குடிக்கு அருகில் உள்ள பெருவள நல்லூரில் சமாதி கொண்டுள்ளார். ஒரு முறை நந்தி அடிகளார் காசி யாத்திரையை முடித்து பழனி வருகிறார். சாது சாமிகளை காசி செல்லுமாறு கூறுகிறார். முருக பெருமானின் பூஜை குறையற நடை பெற வேண்டும்.

அதற்கு தான் இங்கு இருக்க வேண்டுமென சாது சாமிகள் சொல்ல, அதற்கு நந்தி அடிகளார் நீ வரும் வரை நான் கவனித்து கொள்கிறேன் என பழனியில் தங்கினார். சாது சுவாமிகள் காசி யாத்திரை சென்றுவரும் வரை பழனியில் இருந்தார்.  பழனி கிரிவீதியில் தவ திரு சாது சாமிகளின் சமாதி திருக்கோவில் உள்ளது.

சமாதி முருகபெருமானின் ஆறு அட்சரங்கள் கொண்ட அறுங்கோன வடிவில் உள்ளது. சமாதி மேல் ஸ்ரீ சக்கரம் பிரதிஸ்டை செய்யப் பட்டுள்ளது. சமாதிக்கு சற்று அருகாமையில் வின்ச் பக்கத்தில் சாது சாமிகளுக்கு மடம் உள்ளது. தினதோரும் அன்ன தானம் குறைவின்றி வழங்கப்பட்டு வருகிறது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in palani , palani siddhargal , jeeva samadhi in palani , palani siddhar , siddhar temple in palani , palani siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in palani , siddhar temples in palani , palani sitthargal , siddhars in palani ,  

No comments:

Post a Comment