Tourist Places Around the World.

Breaking

Tuesday 25 June 2019

சித்தர் வான்மீகரின் ஜீவசமாதி / Ettukudi Siddhar Vanmikar

சித்தர் வான்மீகரின் ஜீவசமாதி - எட்டுக்குடி

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை அருகே உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில் . புகழ் பெற்ற மிக பழமையான முருகன் கோவில்களில் எட்டுக்குடி முருகன் கோவிலும் ஓன்று. அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார். எட்டுக்குடியில் உள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் காட்சி தருகிறார்.

முருகன் அமர்ந்துள்ள மயில் சிற்பத்துக்கு தரையின் மீதுள்ள ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே..இங்கு முருகன் உக்கிரமாக இருப்பதால் பக்தர்கள் பாலபிஷேகம் செய்கிறார்கள். பிரகாரத்தில் முருகனுடன் சூரபத்மன் வதத்திற்கு துணையாக சென்ற 9 வீரர்களுக்கு சிலைகள் உள்ளது. சூரா சம்ஹாரம் செய்ய முருகன் இங்கிருந்து புறப்பட்டதாக ஐதீகம் .கோவிலின் கன்னி மூலையில் மனோன்மணி தாயார் அருள் செய்கிறார்.

வான்மிக சித்தர்க்கு எட்டுக்குடியில் உள்ள முருகன் கோவிலில் ஜீவசமாதி உள்ளது .இங்குள்ள வன்னி மரத்தடியில் சமாதி பெற்றுள்ளார்.. வடமொழியில் இராமாயணம் பாடிய வால்மீகி முனிவர் தான் தென்னகத்தில் வான்மீகர் என அழைக்கப் படுகிறார்..வான்மீகரைப் பற்றி போகர் முனிவர் புகழ்ந்து பாடியுள்ளதால் இவரை சித்தர் வரிசையில் இடம் பெறுகிறார் .போகர் 7000 -எனும் நூலில் பாடல் 5834 ல் வான்மீகர் எழு நூருக்கும் மேற்பட்ட காலம் வாழ்ந்ததாகவும் ..உலகிற்கு இராமாயணத்தை தந்தவர்..தமிழ் புலமை மிக்கவர் காய சித்திகொண்டு அகத்தூய்மையோடு வாழ்ந்தவர் என்றும் கூறுகிறார்.

வான்மிக சித்தரின் மற்றொரு ஜீவசமாதி திருவான்மியூர் மருந்தீசர் சன்னதியில் உள்ளது .. அடுத்து இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயத்தின் ஸ்தல விருச்சம் சரக்கொன்றை மரத்தின் கீழ் வெகு காலம் தவம் செய்துள்ளார்

இக்கோவில் குறித்த செய்தி : முத்தரசன் என்னும் சோழ மன்னன் சிக்கல் - சிங்காரவேலரின் சிலையை வடிக்கும்படி சிற்பி ஒருவரிடம் கூறினார். சிற்பியும் சிக்கல் சிங்கார வேலரை சிலையில் வடித்துக் கொடுத்தார். சிலையில் தெய்வீக அழகைக் கண்ட சோழன், இது போல இன்னொரு சிலையை சிற்பி செய்து விடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் கட்டை விரலை வெட்டி விட்டான்.

இதையடுத்து அருகில் உள்ள கிராமத்திற்கு சென்ற சிற்பி, அங்கு தன் கட்டை விரல் இல்லாமலேயே ஆறுமுகனுக்கு மீண்டும் ஒரு சிலையை வடித்தார். அந்த சிலை மிக்க உயிர்த்துடிப்புடன் அமைந்து, ஆறுமுகனின் உடலில் அக்னி ஜூவாலையும் உண்டாயிற்று. திடீரென சிலைக்கு உயிர்வந்து, முருகன் அமர்ந்திருந்த மயில் பறக்கத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த மக்கள் மயிலை, 'எட்டிப்பிடி' எனக் கூச்சலிட மயிலைப் பிடித்து சிற்பியிடம் கொடுத்தனர். சிறப்புபெற்ற திருத்தலம் மயிலின் நகத்தில் அந்த சிற்பி சிறிது மாறுதல் செய்ததும் மயில் பறப்பது நின்றதாம். 'எட்டிப்பிடி' என்ற வார்த்தையே காலப்போக்கில் 'எட்டுக்குடி' என்று ஆனதாகவும் ஒரு கூற்று உள்ளது.

தலபுராணம்: ஒரு சமயம் திருக்கயிலைக்கு சிவ பெருமானை வழிபட வந்த பிருங்கி முனிவர், அங்கிருந்த பார்வதி தேவியை வழிபடாமல் வண்டு உருவம் எடுத்து, ஈசனை மட்டும் வலம் வந்து தொழுது சென்றார். ஈசனிடம் இருந்து தம்மை தனியாகப் பிரித்தது அம்பிகைக்குப் பிடிக்கவில்லை. ஈசன் திருமேனியில் தாமும் இடம் பெறவேண்டி பூலோகம் வந்து தவம் மேற்கொண்டார். பூலோகத்தில் ஓரிடத்தில் நான்கு வேதங்களும் ஈசனை வழிபட்டுக் கொண்டிருந்தன. அத்தலம் வேதாரண்யம். அதன் அருகில் எட்டி மரங்கள் நிறைந்த காட்டில் வால்மீகி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த பார்வதிதேவி, ஈசனின் திருமேனியில் இடம்பெற வேண்டி, இங்கே தவம் புரிய வந்ததாகக் கூறினாள். 'கேதார கவுரி' விரதத்தை அனுஷ்டித்துப் பரமனை திருப்தி செய்து வேண்டிய வரம் பெறலாம்' என்று வழி சென்னார் வால்மீகி. எட்டி வனத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து புரட்டாசி வளர்பிறை அஷ்டமி தொடங்கி, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை அன்று 'கேதார கவுரி' விரதத்தை நிறைவு செய்தார் பார்வதி தேவி. உடனே ஈசன் அங்கு தோன்றி, தனது இடப்பாகத்தில் அன்னை பார்வதியை இருத்தினார்.

ஈசனும் அம்பாளும் ஒன்று சேர்ந்த அந்தத் திருவடிவே அர்த்த நாரீஸ்வரர். பார்வதி தேவி எட்டுக்குடியிலேயே கேதார கவுரி விரதத்தை அனுஷ்டித்து ஈசனின் சரிபாதி ஆனார் என்கிறது தலபுராணம். பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கம் சவுந்தரேஸ்வரர் என்ற பெயரில் உள்ளது. இத்தல அம்பிகையின் திருநாமம் ஆனந்த வல்லி என்பதாகும்.

கேதார கவுரி விரதம் இருந்து எட்டுக்குடியில் ஈசனின் உடம்பில் உமையவள் சரிபாதி ஆனதால் இத்தல அம்பாள் ஆனந்த பரவச நிலையில் உள்ளாள். இவளிடம் கேட்டது உடனே கிடைக்கும் என்பது ஐதீகம்

நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டுக்குடி முருகன் கோவில். அருமையாக உள்ளது.. ஒருமுறை சென்று வாருங்கள்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in nagapattinam , nagapattinam siddhargal , jeeva samadhi in nagapattinam nagapattinam  siddhar , siddhar temple in nagapattinam nagapattinam siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in nagapattinam siddhar temples in nagapattinam nagapattinam sitthargal , siddhars in nagapattinam 


1 comment: