Tourist Places Around the World.

Breaking

Saturday 25 April 2020

யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர் / Yazhpanam Arumuga Swamy Siddhar

thirupurambiyam,Yazhpanam Arumuga Swamy Siddar Jeeva Samadhi ...
யாழ்ப்பாண ஆறுமுகசுவாமி சித்தர்

Yazhpanam Arumuga Swamy Siddhar

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


யாழ்ப்பாணம் சுவாமிகள் தமிழகம் வந்து மதுரை திருஞான சம்பந்தர் திருமடம் ஆதீனத்தில் சந்நியாசம் ஏற்று கட்டளைத் தம்பிரானாக இருந்தார்கள், அங்கிருந்து வெளியேறிய சுவாமிகள் கும்பகோணம் வந்து, அறுபத்து மூவர் குருபூஜை திருமடம் கி.பி.1843-ல் ஸ்தாபித்தார்கள்.

இம்மடத்தில் 63 நாயன்மார்களின் படங்கள் அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுடன் படங்களாக வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாயன்மார் குருபூஜையின் போதும் மடத்திற்கு அருகில் இருக்கும் பேட்டை நாணயக்கார தெருவிலிருந்தும் அடியவர்கள் பொறுப்பேற்று. குருபூஜை அன்று அதற்குரிய நாயன்மாரின் வரலாற்றைப் படித்து பூஜை நடத்தி வந்தனர்.

இவ்வாறு மடம் சிறப்புற விளங்கி வரும் நாளில் கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் இருந்த மௌனசாமிகளை நாணயக்காரத்தெரு அன்பர்கள் கும்பகோணம் அறுபத்துமூவர் குருபூஜை மடத்திற்கு எழுந்தருளச் செய்தனர். மௌனசாமிகளின் அதீத ஆற்றலால் மடத்தின் புகழ், எங்கும் பரவியது. இந்த நிலையில் கும்பகோணத்திலிருந்து வெளியேறிய யாழ்ப்பாணம் சுவாமிகள் மதுரை ஆதீனத்திற்குப்பட்ட ஸ்ரீ சாட்சிநாதர் ஆலயம் இருக்கும் திருப்புறம்பயம் (கும்பகோணத்திற்கு வடமேற்கே பத்து மீட்டர் தொலைவு) கிராமத்திற்குச் சென்றார்கள்.

Sivan Aarthi Song By UnniKrishnan... by Tamil devotional songs ...

அங்கு மடம் அமைத்து அடியார்களை பேணி அறப்பணியாற்றினார்கள். அப்பகுதியில் அருளாளராக விளங்கிய தமது திருமடத்திலேயே பரிபூரணமானார்கள். அவரது ஸ்தூலத் திருமேனி மடத்தின் கீழ்பகுதியில் குகை செய்விக்கப்பட்டது.  சமாதி மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கிழக்குப் பார்த்த சந்நதி அதற்கு எதிரில் அவருடைய சீடர்கள் மூவரின் (சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர்) ஜீவசமாதி உள்ளது. மற்றும் இந்த மடத்தில் 3 அடியார்கள் சமாதி  அடைந்துள்ளார்கள். இவர்கள் வழியில் அவரது சீடரான தற்போது சுவாமிமலை பிரகாசம் சுவாமிகள் அருளாசி வழங்கி வருகிறார்கள். திருப்புறம்பயம் மடம் இருக்கும் தெருவிற்கு யாழ்ப்பாணம் சாமி மடத்து சந்து என்றே பெயர் வழங்குகிறது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

mahans in sri lanka , sri lanka siddhargal , jeeva samadhi in sri lanka sri lanka siddhar , siddhar temple in sri lanka sri lanka siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in sri lanka ,



No comments:

Post a Comment