Tourist Places Around the World.

Breaking

Friday 1 May 2020

கணக்கன்ப்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள் / Kanakkanpatti Mootai Swamigal

கணக்கன்ப்பட்டி சித்தர் நிகழ்த்திய அற்புதங்கள்

Kanakkanpatti Mootai Swamigal Miracles

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


பழனி முருகன் திருக்கோவில் அருகில் இருந்து 8கிமீ தொலைவில் இருக்கும் கிராமம் தான் கணக்கன்பட்டி. இங்கும் வாழ்ந்த மிக சக்தி வாய்ந்த மகான் கணக்கன்பட்டி மூட்டை சாமி என்கிற சத்குரு காளிமுத்து பழனி சாமி சித்தர். சாய்பாபாவின் மறு அவதாரமாக கருதப்படும் இவர் வாழும் போதே பல அதிசயங்கள் நிகழ்த்தியவர்.

ஒருநாள் வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்பம் பேச முடியத தன் குழந்தைக்கு பேச்சு வர பழனி முருகணை காண காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த கார் கணக்கன்பட்டி வழியே வரும்போது அங்கு ஒரு பெரியவர் பச்சை வேஸ்டி சட்டையுடன் தலை பாகையுடன் வழிமறித்தார். இவர்கள் பயத்துடன் இறங்கினர். இவர்கள் சுத்த சைவம் சாமி அவர்கள்”இந்த பொம்பல போய் எதிருல இருக்கற கடையில் பிரியாணி வாங்கிவா” என்றார். இவர்கள் முழித்தார், அருகில் இருந்தவர்கள் சாமி சொல்வதை செய்து விடுங்கள் சாமி சக்தி வாய்ந்தவர் என்றனர்.

மூக்கை பிடித்து கொண்டு வாங்கி வந்தார் அந்த பெண்மணி. இந்த சாப்பாட்டை அந்த பையனுக்கு கொடு என்றார். தடுமாறினர் அந்த பெண்மணி பொட்டலம் பிரித்து பார்த்தார் அந்த பெண்மணி வாங்கி வந்த பிரியாணி சாம்பார் சாதம் ஆக மாறி இருந்தது. இதை கண்டு ஆச்சரியத்துடன் கை எடுத்து வனங்கிவிட்டு பழனி நோக்கி சென்றனர். அப்போது அவர்களின் காருக்கு எதிரில் ஒரு வண்டி வந்தது அதை கண்ட அந்த சிறுவன் அம்மா வண்டி என்று கத்தினான்.


அந்த சிறுவனிடம் இதை சற்றும் எதிர் பார்க்காத அந்த பெண்மணி சாமியின் மகிமை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார் .அவர் இருக்கும் திசை நோக்கி வணங்கினார். இவ்வாறாக பலரின் கர்ம வினை தீர்த்து அவர்களின் வாழ்க்கையை மாற்றியவர் நம் சித்தர் கணக்கன்ப்பட்டி மூட்டை சாமி. இவரிடம் யார் சென்றாலும் போய் அந்த கல்லு எடுத்து அங்க போடு, இங்க கூடு கட்டு என்று சொல்லுவார்.

ஒருமுறை ஒருவர் நிலம் வாங்க இவரிடம் உத்தரவு கேட்கும் போது, கிழக்கு போய் வடக்கு போ என்று சூசகமாக கூறினார். உத்தரவு கேட்கவந்தவர் இரண்டு நிலம் பார்த்துள்ளார். அதில் ஒன்று வடக்கில் இருந்துள்ளது அதன் வழி கிழக்கு பார்த்து இருந்துள்ளது. கிழக்கு போய் வடக்கு போ என்று சுவாமி இதை தான் சூசகமாக கூறி உள்ளார் என்று எண்ணி அவரும் அந்த நிலத்தை வாங்கி வளர்ச்சி அடைந்துள்ளார். இவரின் ஜீவ சமாதிக்கு சென்றால் நிச்சயம் மாற்றம் உண்டாகும். இவரின் ஜீவ சமாதியில் ஒரு நல்ல அதிர்வலைகளை நன்றாக உணராலம்.பழனி பேருந்து நிறத்தில் இருந்து சுமார் 8கிமீ தொலைவில் உள்ளது பஸ் வசதியும் உள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


mahans in palani , palani siddhargal , jeeva samadhi in palani , palani siddhar , siddhar temple in palani , palani siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in palani , siddhar temples in palani , palani sitthargal , siddhars in palani ,  

No comments:

Post a Comment