Tourist Places Around the World.

Breaking

Friday, 1 May 2020

சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆலயம் / Sri Sankaralingam Swami Siddhar Temple

சங்கடங்கள் தீர்க்கும் 
ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆலயம்

Sri Sankaralingam Swami Siddhar Temple

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பாடல்பெற்ற ஆன்மீக தலங்கள், ஜைனமதக்கோயில், தர்கா, பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் அதிகம் உள்ளது. அந்த வகையில் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு சித்தர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் சென்று வழிபடும் இடமாக உள்ளது ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆசிரமம்.

சிற்றுண்டி பிரசாதம்:  உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள இந்த சித்தர் ஆலயம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தினந்தோறும் சித்தர் ஆசிரமத்தில் டீ, காபி, பன் உள்ளிட்டவைகளை வைத்து வழிபடும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், அங்கு வழங்கப்படும் கஞ்சி, பொங்கல் என எந்த பிரசாதம் கொடுத்தாலும் அதனை தேவாமிர்தமாக வாங்கி சாப்பிட்டு செல்கின்றனர்.

இந்த சித்தர் ஆசிரமத்தில் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், விபத்துகளில் சிக்கி உடல்நிலை பாதிக்கபட்டவர்கள் என ஏராளமானவர்கள் ஆசிரமத்திலேயே தங்கி தினந்தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு ஓம் சங்கரலிங்காய நமஹ என வணங்கி வருகின்றனர்.

குருபூஜை:  ஒவ்வொரு ஆண்டு சித்தர் ஜீவசமாதி அடைந்த நாளில் குருபூஜை பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆண்டுகாலமாக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவின் போது விளக்கு பூஜைகள், சிறப்பு மகா யாகம் உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் திருமாங்கல்ய பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படும். கடந்த 20 ஆண்டுகாலமாக அணையாத விளக்காக சித்தர் ஆசிரமத்தை தேடி வரும் அனைவருக்கும் உணவு (அன்னதானம்) வழங்கப்பட்டு வருகிறது.

அமாவாசை பவுர்ணமி பூஜை:    உடல்நிலை மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், குடும்ப பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் அமாவாசை போன்ற தினங்களில் நள்ளிரவு நேரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு விடிய, விடிய சிவபுராண பாடல்களை பாடி மனம் உருகி வழிபட்டு வருகின்றனர்.

இந்த சித்தர் ஆசிரமத்திற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வருடந்தோறும் நடைபெறும் குருபூஜை விழா மற்றும் அவர் கட்சி சார்ந்த முக்கிய முடிவுகள் எடுக்கும் போதும் இந்த சித்தர் ஆசிரமத்திற்கு வந்து வழிபட்டு அன்னதானம் வழங்கிவிட்டு செல்வார். இதே போல் இப்போது உள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இந்த ஆசிரமத்திற்கு வந்து செல்வது வழக்கம். அரசியல் கட்சி தலைவர்கள் இங்கு வந்து எடுக்கும் முடிவு தங்களுக்கு வெற்றியை தரும் என்று நம்புகிறார்கள். அந்த வகையில் இந்த ஆசிரமம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

குறைகள் நீங்கும்:  ஓம் சங்கரலிங்காய நமஹ... என்று கூறி மனமுருக வழிபட்டால் பக்தர்களின் குறைகள் அனைத்தும் நீங்குவதாக நம்புகிறார்கள். திருமண தடை, குழந்தையின்மை, தொழில்முடக்கம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும், சங்கடங்களையும் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இதனால் தினந்தோறும் ஏராளமானவர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறினால் அரிசி மூட்டைகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்கி வந்து தங்களது காணிக்கையாக செலுத்திவிட்டு செல்கின்றனர்.

செல்வது எப்படி?  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டையில் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ஸ்ரீசங்கரலிங்கம் சித்தர் ஆலயம் உள்ளது.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


ulundurpet sittargal, mahans in ulundurpet , ulundurpet siddhargal , jeeva samadhi in ulundurpet , ulundurpet siddhar , siddhar temple in ulundurpet , ulundurpet siddhar swamy , siddhar jeeva samadhi , siddhargal jeeva samadhi in ulundurpet , siddhar jeeva samadhi temples in tamil nadu ,

No comments:

Post a Comment