Tourist Places Around the World.

Breaking

Tuesday, 23 June 2020

அழுகணிச் சித்தர் பாடல் (Part 2/3) / Azhukanni Siddhar Song

அழுகணிச் சித்தர் பாடல் - (Part 2/3)

Azhukanni Siddhar Song

அழுகணிச் சித்தர் பாடல் (Part 1/3)

அழுகணிச் சித்தர் பாடல் (Part 3/3)

வாத கற்பம் 

42: மூலம்நடுவீதி ஆத்தாளே மும்மண்டலத்து அமர்ந்த நீலகண்ட வத்துவைத்தான் - ஆத்தாளே நின்மலனைப் போற்றுவனே.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


43: மேகத்தான் விந்தாச்சு - ஆத்தாளே விசயரவிச் சுண்ணாம்பாம் ஆகச் சிவநீரால் - ஆத்தாளே அட்டசித்தி அவள்சக்தி.

44: இரவி முகத்தாலே - ஆத்தாளே ஈசன் என்ற உப்பாச்சு வருகங்கை தன்னாலே - ஆத்தாளே மயமாகச் சுத்தம் செய்தே.

45: முந்தின உப்பிரண்டும் - ஆத்தாளே முழுக்கல்லுப் பொன்னாகத் தொந்திக்க இவ்விடைக்க - ஆத்தாளே சூழ்சீனங் கால்சேர்த்து.

46: ஆறுதலச்செயநீர் - ஆத்தாளே அதிலேகற் சுண்ணாம்பாம் மீறுமிந்தச் சுண்ணாம்பில் - ஆத்தாளே வீரமுடன் கற்பூரம்.

47: சாரநீரால் அரைத்து - ஆத்தாளே தனிக்கவச மேபூசி ஆறுவகைச் செயநீரால் - ஆத்தாளே அதன்மேலே சுத்திவைக்க.

48: உப்பென்று அறியாரே - ஆத்தாளே உலகத்தி லுள்ளோர்கள் உப்பல்லோ சுண்ணாம்பாம் - ஆத்தாளே ஊர்க்குள் விலைகூறுதடி.

49: சவ்வீரம் முப்புச்சுண்ணம் - ஆத்தாளே தனிப்பூரம் மேற்பூசி ஒவ்வாத பான்முகத்தில் - ஆத்தாளே ஊடுருவச் சுண்ணாம்பாம்.

50: காரமிதில் ஏற்றலடி - ஆத்தாளே கருஅறியார் தண்ணீரைச் சீருடனே குத்தியடி - ஆத்தாளே தீமுகத்தில் வாட்டிவிடு.

51: கற்பூரச் சுண்ணமடி - ஆத்தாளே கடுங்காரச் சுண்ணமடி வெற்பாக வைத்தானே - ஆத்தாளே வேதைகவர் கோடியடி.

52: எண்ணெண் சரக்குமடி - ஆத்தாளே இப்பூரச் சுண்ணமடி கண்ணத்தில் வீரர் கசதில் சுண்ணாம்பாம்.

53: அக்காரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே ஆகரெண்டு சுண்ணமதை உக்காரம் மேற்பூசி - ஆத்தாளே உலையிலே வைத்தூத.

54: எண்ணெய் எல்லாம் போக்குமடி இருக்கும் சவுக்காரம் சுண்ணமடி மேற்கவசம் - ஆத்தாளே சொல்லுகிறேன் அப்புச்சுண்ணம்.

55: கற்பூரச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே கலந்திருந்த இண்டு மடி செப்பமுள்ள செயநீரால் - ஆத்தாளே சேர்த்தாட்டி வீரமிட்டு.

56: வழமலைக்கு - ஆத்தாளே வளமாய்ப் பொதிந்தபின்பு தழலிலே தானாட்டி - ஆத்தாளே சற்குருவாம் உப்பாலே.

57: உப்புச் சுண்ணங் கற்பூரம் - ஆத்தாளே உண்மை சவுக்காரம் செப்பமுடன் மூன்றுசுண்ணம் - ஆத்தாளே சேர்த்துரவியில் இட்டு.

58: இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே எடுத்துத் துருசில் இட்டு முக்கியமுடன் மேற்கவசம் - ஆத்தாளே முன்பூசி வெயிலில் வைக்க.

59: சுண்ணாம்பு தங்கியிது - ஆத்தாளே துடிதாளகம் வெளுக்கும் சுண்ணாம்பு வங்கமடி - ஆத்தாளே துடிலிங்கம் கைமாட்டும்.

60: சாதிலிங்கச் சுண்ணாம்பு - ஆத்தாளே தனிலோகச் சுண்ணாம்பாம் நாதாந்தச் சுண்ணாம்பாம் - ஆத்தாளே நாகமிதிற் சுண்ணாம்பாம்.

61: சுண்ணாந்தா னாகவடி - ஆத்தாளே துடிகெந்த கம்வெளுப்பாம் சுண்ணாம்பாங் கெந்தகந்தான் - ஆத்தாளே துடியானை பட்டுவிடும்.

62: சூதனடி பட்டாண்டி - ஆத்தாளே சூழ்ந்து அங்கந் தான்சேர்க்க வேதை சவ்வீரனடி - ஆத்தாளே மீறும்வகை மூன்றுமொன்றாய்.

63: சேர்ந்திருக்க வேமணியாம் - ஆத்தாளே செம்புவெள்ளி சேர்ந்தேதான் நூத்துக்கொரு மாவிடவே - ஆத்தாளே நூத்தெட்டு மாத்தாகும்.

64: இத்தங்கம் செந்தூரம் - ஆத்தாளே இந்த மணியாலே சத்தபேதி யாகுமடி - ஆத்தாளே தான்பரிச பேதியிதாம்.

65: மண்டலம் பேதிக்குமடி - ஆத்தாளே மலையும் பழுக்குமடி அண்டத்தை தொட்டாட்ட - ஆத்தாளே அடங்காப் பொருளாகும்.

66: மண்ணேது கல்லேது - ஆத்தாளே மரமேது இவ்வேதை ஒண்ணாது வொண்ணாது - ஆத்தாளே ஒடுங்கும் பொருளைப்பேண்.

67: தாளகம் வெள்ளியிலே - ஆத்தாளே தப்பாது பத்தரையும் பாளித்த லோகச்சுண்ணம் - ஆத்தாளே பத்தரையாம் வங்கமதில்.

68: வீரச்சுண்ணம் வெள்ளியதாம் - ஆத்தாளே வெள்ளிபதி னெட்டாகும் பூரச்சுண்ணஞ் சேர்க்கவடி - ஆத்தாளே பொன்வயதோ எண்ணான்காம்.

69: சிலபற்பம் செம்பினிலே - ஆத்தாளே சேர்க்கவய எட்டரையாம் துலையாக் கவர்கோடி - ஆத்தாளே சொன்னார் திருமூலர்.

70: பார்த்தேனடி கண்டேனடி - ஆத்தாளே பாசங் குருபாதம் காத்தேனடி கண்டேனடி - ஆத்தாளே கைமுறையாம் என்னூல்தான்.

71: கருவை ஒளியாமல் - ஆத்தாளே காசினியில் உள்ளோர்க்குக் குருவைநாம் காண்பித்தோம் - ஆத்தாளே குணமான வாதவித்தை.

72: உண்டென்ற பேர்க்குமடி - ஆத்தாளே உண்டாய் இருக்குமடி சண்டாளன் ஆனாக்கால் - ஆத்தாளே தான்லபிக்க மாட்டாதே.

73: லபிக்க வழி சொல்லுகிறேன் - ஆத்தாளே நந்திதிரு மூலரையும் லபிக்கக் கா லாங்கியையும் - ஆத்தாளே நாதாந்தப் போகரையும்.

74: சத்தி சிதம்பரமும் - ஆத்தாளே சட்டைமுனி பூசைசெய்வாய் உத்தமக் கொங்கணரை - ஆத்தாளே உசிதமாய்ப் பூசைசெய்வாய்.

75: கருவூரா னானந்தர் - ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர் ஒருநெறியாய் இவர்களையும் - ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்.

76: சண்டாளன் ஆனாலும் - ஆத்தாளே தான்வேதை காண்பானே கண்டசெய்தி சொன்னோன்நான் - ஆத்தாளே கற்பவகை சொல்லுபவனே.

77: சொல்லுகிறேன் கரிப்பான் - ஆத்தாளே சுத்த இலைபரித்துச் செல்லும் பழச்சாற்றில் - ஆத்தாளே செம்பழத் தளவரைத்து.

78: அரைத்தாவின் நெய்யதனில் - ஆத்தாளே அதுசிவக்கக் காய்ந்த திரமாயோர் பீங்கானில் - ஆத்தாளே செப்பமுடன் வைத்தேதான்.

79: பதனமாய் வண்டுகட்டி - ஆத்தாளே பரமென்று நம்பியேதான் திதிபூரு வந்தனிலே - ஆத்தாளே செயல்பொருந்தும் நாள்பார்த்தும்.

80: அமுதயோ கம்பார்த்து - ஆத்தாளே ஆனதொரு கற்பதைக் குமுதவொலி உண்ணாக்கில் - ஆத்தாளே குலாவுகின்ற வாசலிலே.

81: பெருவிரலால் அதைத்தொட்டு - ஆத்தாளே பேதைமனம் எண்ணாமல் ஒரு நெறியாய் நாலுதரம் - ஆத்தாளே உயரவலம் சுற்றிடவே.

82: நாலுதரம் சுத்திசெய்தால் - ஆத்தாளே நன்றாய் அகக்கதவில் ஆலமுண்டோன் தன்னாணை - ஆத்தாளே அஞ்சுகத வுந்திறக்க.

83: நாற்பதுநாள் கொள்வாரேல் - ஆத்தாளே நற்கதவு ஐஞ்சுந் திறக்கும் தீர்க்கமதாய் சித்தியுண்டாம் - ஆத்தாளே தேகம் வச்ரகாயமதாம்.

84: மறவாமற் கற்பவகை - ஆத்தாளே மனசாரத் தின்றுவிட்டால் இறவாமல் அட்டசித்தி - ஆத்தாளே இக்கற்பங்கொண்ட பின்பு.

85: உற்றதொரு கற்பமதை - ஆத்தாளே உணவாகத் தின்றுவிட்டால் செத்திறந்து போவதில்லை - ஆத்தாளே திடமா யிருக்குமடி.

86: கெதிபெற வேணுமென்றால் - ஆத்தாளே கேளாம லேகேட்டு மதியமுதம் கொண்டபின்பு - ஆத்தாளே மறுகற்பம் கொண்டிடுவாய்.

87: வேதாள கற்பமதை - ஆத்தாளே விதுவளரும் அட்டமிநாள் மாதாவிம் மூலிகைக்கு - ஆத்தாளே மயமாய்நெய் வேத்யமிட்டு.

88: நமக்கரித்துத் தரம்நோக்கி - ஆத்தாளே நயமாக வாங்கிவந்த நமக்கார சித்தியுடன் - ஆத்தாளே நன்றாய் நிழலுலர்த்தி.

89: சூரணஞ் செய்தேதான் - ஆத்தாளே சுயமான நாள்பார்த்து மீரும் வெருகடியாய் - ஆத்தாளே வேண்டுந்தேன் நெய்சேர்த்து.

90: கொள்ளவே மண்டலந்தான் - ஆத்தாளே கூறுமட்ட சித்தியுண்டாம் தெள்ளும் அவர்களுக்கு - ஆத்தாளே தேவ வருடமதில்.

91: பதினா யிரவருடம் - ஆத்தாளே பண்பாய் இருப்பனடி ரதிவேதப் பெண்முதலாய் - ஆத்தாளே நன்மையுடன் மேவுவர் பார்.

92: பூலோக மாதர்களை - ஆத்தாளே புகலவே ஆகாது மேலோகப் பெண்கள்சித்தி - ஆத்தாளே மேவுதற்குந் தானாகும்.

93: கையான்சங் காயளவு - ஆத்தாளே கறிமிளக திற்பாதி செய்யாதி மண்டலமே - ஆத்தாளே தின்றால் நரைகளில்லை.

94: திரையில்லை அட்டசித்தி - ஆத்தாளே தேகமது எவ்வர்ணமாய் வரைவச்ர காயமதாம் - ஆத்தாளே வயதுமுந் நூறிருப்பன்.

95: கொடுப்பையிலை லேசாக - ஆத்தாளே கொள்வாயோர் மண்டலமே நடுக்கமில்லை தான் பகலில் - ஆத்தாளே நட்சத் திரந்தோன்றும்.

96: பத்தியம் பச்சரிசி - ஆத்தாளே பாலிட்ட சோறாகும் மத்தொன்றும் ஆகாதே - ஆத்தாளே வண்மையுடன் இக்கொடுப்பை.

97: சமூலம் கழுவிநன்றாய் - ஆத்தாளே தயவாய் நிழல் உலர்த்தி சமூலம் இடித்துநன்றாய் - ஆத்தாளே சதிராகச் சூரணஞ்செய்.

98: பாலில் வெருகடியாய் - ஆத்தாளே பதிமண்ட லம்கொளவே மேலும் வச்ரகாயமடி - ஆத்தாளே வேதையுமி நீராலே.

99: பழுக்கும் நவலோகம் - ஆத்தாளே பரமட்ட சித்தியுண்டாம் அழுக்கெடுத்து வெள்ளீயம் - ஆத்தாளே அதில் ஈய நீர்வாங்கும்.

100: சித்திபெற்ற கற்பமடி - ஆத்தாளே தேவ வருடமதில் அத்தியின் தன்பிலமாய் - ஆத்தாளே ஆயிரம் வயதிருப்பாய்.

101: உத்தமர்க்குச் சொன்னேன்நான் - ஆத்தாளே உயர வெளிகண்டதெல்லாம் பத்தியுள்ள பத்தர்கட்கு - ஆத்தாளே பலிக்கும்பார் கண்டாயே.

102: பத்தியுடன் செய்துவந்தாள் - ஆத்தாளே பரம்பொருளுந் தோன்றுமடி சித்தி அடைந்தவர்க்கு - ஆத்தாளே தெரியுமே சோதியுந்தான்.

103: மாணிக்கத்து உள்ளொளிபோல் - ஆத்தாளே மருவிய சோதிதனைப் பேணித் தொழும்அடியார் - ஆத்தாளே பேசாப் பிரமமடி.

104: அன்றுமுதல் இன்றளவும் - ஆத்தாளே அறியாப் பருவமதில் என்றும் பொதுவாக - ஆத்தாளே இருந்த ரகசியந்தான்.

105: ஓங்காரங் கொண்டு - ஆத்தாளே உள்மூலந் தான்தெரிந்து

106: உள்ளுணர்வாய் நின்றிருக்கும் - ஆத்தாளே ஓங்காரம் தன்னையுமே எள்ளுளவா கிலுந்தான் - ஆத்தாளே ஏத்தித் துதிப்பாயே.

107: பாவிகள் தங்களுக்கு - ஆத்தாளே பரிவாக இந்நூலைத் தாவிக் கொடுக்காதே - ஆத்தாளே சண்டாளர் தங்களுக்கே.

108: அனுபோக கற்பசித்தி - ஆத்தாளே ஆகுமிதைப் படித்தோர் மனுவிக்யா னந்தெரிந்து - ஆத்தாளே வாழ்வார் வெகுகோடி.

அழுகணிச் சித்தர் பாடல் (Part 1/3)

அழுகணிச் சித்தர் பாடல் (Part 3/3)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar azhukanni padal , siddhar azhukanni padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment