Tourist Places Around the World.

Breaking

Tuesday 23 June 2020

அழுகணிச் சித்தர் பாடல் (Part 3/3) / Azhukanni Siddhar Song

அழுகணிச் சித்தர் பாடல் - (Part 3/3)

Azhukanni Siddhar Song

அழுகணிச் சித்தர் பாடல் (Part 1/3)

அழுகணிச் சித்தர் பாடல் (Part 2/3)

ஆறாதாரம்

109: ஞானநூல் கற்றால் எவன் தற்றுறவு பூண்டால் என் மோன சமாதி முயன்றால் என் - தானாகி எல்லாக் கவலையும் ஆற்று இன்புற் றிருப்பதுவே சொல்லாரும் முத்தி சுகம்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


110: மேலத் தெருவாகி விந்துதித்த வீடாகிக் கோலத்தி னாலேயடி கூறும் அறுகோணம் சீலத்தில் முக்கோணம் சேர்ந்தப்பு வீடாகி மூலத்தில் மண்ணாகி - என் ஆத்தாளே முதலெழுத்தைப் போற்றி செய்தேன்.

111: ஆதியெனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி நீதியெனும் நாளமடி நின்று விசையெழுப்பி சாதிமதி யென்னும் தாகவிடாய் தானடங்கிச் சோதிவிந்து நாதமென்ன - என் ஆத்தாளே சுக்கிலமாய் நின்றதடி.

112: துய்யவெள்ளை ஆனதடி துலங்கும்வட்டத் தோரெழுத்து மெய்யில்நடு நாளமடி விளங்கும்விந்து தான்இரங்கிப் பைரஅளவு யோனியிலே பராபத்தி லேவிழுந்து செய்யவட்ட மாகியடி - என் ஆத்தாளே சீமுல மாச்சுதடி.

113: நவ்வோடே மவ்வாகி நாலிதழின் மேற்படர்ந்து உவ்வோடே சவ்வாகி உயர்வுன்னி யூடெழுந்து நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற காலாகி இவ்வோ டுதித்தாண்டி - என் ஆத்தாளே இலங்குகின்ற திங்களடி.

114: கதிரங்கி யாகியடி கருணையினில் விந்திரங்கி உதிரம் திரட்டியபடி ஓமென் றதனிலுன்னி சதுரமது மண்ணாகிச் சதுர்முகனார் வீடாகி மதுரம் பிறந்துதடி - என் ஆத்தாளே வையகனாய் வந்தாண்டி.

115: மெப்பாகச் சதுரமடி மெய்யாய் அதிற்பரந்து ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில்முளைத்துச் செப்பார் இளமுலையார் சீருடனே தானிருந்து அப்பாலே மாலாகி - என் ஆத்தாளே ஆனந்த மானதடி.

116: உன்னியப்பு மேலேயடி ஓங்கிக் கதிர்பரந்து மின்னியதில் தான்முளைத்து மேவுகின்ற சீயாகிப் பன்னிவரு முக்கோணப் பதியதனி லேமுளைத்து வன்னியென்னும் பேராகி - என் ஆத்தாளே மருவுகின்ற ருத்ரனடி.

117: வீரான வன்னியதன் மேல்நாளந் தான்முளைத்து ஓராறு கோணமதாய் உள்ளேஓர் காலாகிப் பேராகி நின்றுதடி பெருங்கிளையாங் கூட்டமதில் மாறாமல் மாறியடி - என் ஆத்தாளே வையத் துதித்தாண்டி.

118: உதையாமல் என்னைஇப்போது உதைத்தவனும்கீழிறங்கி மதியான மூலமதில் வந்திருந்துக் கொண்டான்டி நிதியாம் மிரண்டெலும்பு நீளெலும்பிரண்டாகி முதியாத மாங்கிசமும் - என் ஆத்தாளே மூடி யதிலிருந்து.

119: மாதவளைக் குள்ளேயடி வந்தவது கீழ்ப்படர்ந்து போதத்தின் முட்டியடி புகழ்நரம்பை உண்டுபண்ணி நீதம தாகவிந்த நீள்நிலத்தி லேதிரியப் பாதமாய் உன்னியடி - என் ஆத்தாளே பதியாய் வளர்ந்ததடி.

120: இருகண்ணின் மேலேயடி இருந்தநரம் பூடுசென்று பெருநரம்பாய் விம்மிப் பெருக்க முளைத்ததடி தரிநரம்பும் ஈரெலும்பாய்த் தான்ஒன்பது எலும்பாய் விரிநரம்பு போலாக - என் ஆத்தாளே மேலாய் நுழைந்ததடி.

121: இட்ட எழுத்திரண்டில் ஏங்கியதில் மேற்படர்ந்து எட்டமதி போலெலும்பு வளர்ந்து கவிந்ததடி எட்டிரண்டும் ஒன்றாகி இருந்தவர்க்கு வீடாச்சு வெட்டவெளி யானதடி - என் ஆத்தாளே மெய்யாய் இருந்துதடி.

122: அகார உகாரத்தில் ஆசூனி யம்பிறந்து அகாரந் தனில்இரங்கி அரிமூலம் தன்னில்வந்து உகாரத்துள் ஆவேறி ஓடி உலாவுவதற்கு நிகரற்ற நாதனடி - என் ஆத்தாளே லிங்கமாய் வந்தான்டி.

123: கருவாகி வந்தானோ கருவழிக்க வந்தானோ உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ திருவாகி வந்தானோ - என் ஆத்தாளே சீர்திருத்த வந்தானோ.

மெய்ஞ்ஞானம் 

124: ஐங்கரனைத் தெண்டனிட்டு அருளடைய வேணுமென்று தங்காமல் வந்தொருவன் - என் ஆத்தாளே தற்சொரூபங் கொண்டாண்டி.

125: உள்ளது ஒளியாக ஓங்காரத்து உள்ளிருந்து கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தாண்டி.

126: ஆதாரம் ஆறினையும் ஐம்பத்தோ ரட்சரமும் சூதானக் கேட்டையெல்லாம் - என் ஆத்தாளே சுட்டான் துருசாலே.

127: என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள் தன்னந் தனித்தேனே - என் ஆத்தாளே தானிருக்க மாட்டேண்டி.

128: கல்லில் ஒளியானைக் கருத்தி விளியாளைச் சொல்லி அழுதாலொழிய - என் ஆத்தாளே துயரம் எனக்கு ஆறாதே.

129: மண்முதலாய் ஐம்பூதம் மாண்டுவிடக் கண்டேன்டி விண்முதலாய் ஐம்பொறியும் - என் ஆத்தாளே வெந்துவிடக் கண்டேன்டி.

130: ஆங்காரந் தான்கெடவே ஆறடுக்கு மாளிகையும் நீங்காப் புலன்களைந்தும் - என் ஆத்தாளே நீறாக வெந்துதடி.

131: போற்றும்வகை எப்படியோ பொறிபேத கம்பிறந்தால் ஆத்தும தத்துவங்கள் - என் ஆத்தாளே அடுக்கழிய வெந்ததடி.

132: வித்தியா தத்துவங்கள் விதம்விதமாய் வெந்ததடி சுத்துவித்தை அத்தனையும் - என் ஆத்தாளே சுட்டான் துருசறவே.

133: கேடுவரும் என்றறியேன் கெடுமதிகண் தோற்றாமல் பாடுவரும் என்றறியேன் - என் ஆத்தாளே பதியில் இருந்தாண்டி.

134: எல்லோரும் போனவழி இன்னவிட மென்றறியேன் பொல்லாங்கு தீரவடி - என் ஆத்தாளே பொறிஅழியக் காணேன்டி.

135: உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்கமடிந்தார்கள் இக்கோட்டைக் குள்ளாக - என் ஆத்தாளே எல்லோரும் பட்டார்கள்.

136: உட்கோட்டை தானும் ஊடுருவ வெந்தாக்கால் கற்கோட்டை எல்லாம் - என் ஆத்தாளே கரிக்கோட்டை ஆச்சுதடி.

137: தொண்ணூற்று அறுவரையும் சுட்டேன் துருசறவே கண்ணேறு வாறாமல் - என் ஆத்தாளே கருவருக்க வந்தான்டி.

138: ஓங்காரம் கேட்குதடி உள்ளமெல்லாம் ஒக்குதடி ஆங்காரம் பட்டுவிழ - என் ஆத்தாளே அடியோடு அறுத்தாண்டி.

139: முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி தன்னையறிந்து - என் ஆத்தாளே தானொருத்தி யானேன்டி.

140: என்னை எனக்கறிய இருவினையும் ஊடறுத்தான் தன்னை அறியவாடி - என் ஆத்தாளே தனித்திருக்கல் னேன்டி.

141: இன்னந் தனியேநான் இங்கிருக்க மாட்டேன்டி சொன்னசொற் றிரவடிவு - என் ஆத்தாளே சுட்டான் துருசறவே.

142: வீட்டில் ஒருவரில்லை வெட்டவெளி யாச்சுதடி காட்டுக்கு எரித்தநிலா - என் ஆத்தாளே கனாவாச்சு கண்டதெல்லாம்.

143: நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்குப் பட்டலவோ பகையாரோ விண்டவர்கள் - என் ஆத்தாளே பாசம் பகையாச்சே.

144: என்னையிவன் சுட்டாண்டி எங்கே இருந்தான்டி கன்னி அழித்தாண்டி - என் ஆத்தாளே கற்பைக் குலைத்தான்டி.

145: உள்ளுரையிற் கள்ளனடி உபாயம் பலபேசிக் கள்ளக்கண் கட்டியடி - என் ஆத்தாளே காலைப் பிடித்தான்டி.

146: பற்றத்தான் பற்றுவரோ பதியி லிருந்தான்டி எற்றத்தான் என்றவரோ - என் ஆத்தாளே என்னை அறிந்தான்டி.

147: கண்டாருக்கு ஒக்குமடி கசடுவித்தை அத்தனையும் பெண்டாக வைப்பனென்று - என் ஆத்தாளே பேசாது அளித்தான்டி.

148: மால்கோட்டை இட்டுமென்னை வசையிலாக் காவல்வைத் தோல்கோட்டை இட்டடியோ - என் ஆத்தாளே தடுமாறச் சொன்னான்டி.

149: எந்தவித மோஅறியேன் இம்மாயஞ் செய்தான்டி சந்தைக் கடைத்தெருவே - என் ஆத்தாளே தடுமாறச் சொன்னான்டி.

150: சூலத்துக்கு ஆதியடி துன்பமுற வந்தூடே பாலத்தில் ஏறியடி - என் ஆத்தாளே பங்கம் அளித்தான்டி.

151: பண்டிவனை நானறியேன் பலகாலம் வந்தான்டி அண்டி இருந்தான்டி - என் ஆத்தாளே ஆகலத்தில் வைத்தான்டி.

152: பத்தினியாய் என்நாளும் பாடறிந்து சூடாமல் மத்தியா னத்தில் என்னை - என் ஆத்தாளே வாசிரிக்கச் சொன்னான்டி.

153: வாடைதனைக் காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் ஆடை குலைத்து எமையும் - என் ஆத்தாளே அலங்கோலஞ் செய்தான்டி.

154: கற்புக் கரசிஎன்ற காரப்பேர் விட்டுஅகலப் பொற்புக் குலைத்து எமையும் - என் ஆத்தாளே போதம் இழந்தனடி.

155: என்ன வினைவருமோ இன்னதெனக்கு என்றறியேன் சொன்ன சொல்லெல்லாம் - என் ஆத்தாளே சொல்லறவே வெந்ததடி.

156: கங்குல்பகல் அற்றிடத்தே காட்டிக் கொடுத்தான்டி பங்கம் அழித்தான்டி - என் ஆத்தாளே பாதகனைப் பார்த்திருந்தேன்.

157: ஓதியுணர்ந்து எல்லாம் உள்ளபடி ஆச்சுதடி சாதியில் கூட்டுவரோ - என் ஆத்தாளே சமையத்தாற் குள்ளாமோ.

158: என்னகுற்றஞ் செய்தேனோ எல்லவருங் காணாமல் அன்னை சுற்றமெல்லாம் - என் ஆத்தாளே அறியாரோ அம்புவியில்.

159: பொய்யான வாழ்வெனக்குப் போதமெனக் கண்டேன்டி மெய்யான வாழ்வெனக்கு - என் ஆத்தாளே வெறும்பாழாய் விட்டுதடி.

160: சொல்லானைச் சொல்லுதற்குச் சொல்லவாய் இல்லையென்று எல்லாருங் கண்டிருந்தும் - என் ஆத்தாளே இப்போது அறியார்கள்.

161: கன்மாயம் விட்டதடி கருத்தும் அழிந்தேன்டி உன்மாயம் இட்டவனை - என் ஆத்தாளே உருவழியக் கண்டேன்டி.

162: என்னசெய்யப் போறேன்நான் இருந்த அதிசயத்தைக் கன்னி இளங்கமுகு - என் ஆத்தாளே காரணமாய்க் காய்த்ததடி.

163: அந்தவிடம் அத்தனையும் அருளாய் இருந்துதடி சொந்தம் இடமெல்லாம் - என் ஆத்தாளே சுகமாய் மணக்குதடி.

164: இந்தமணம் எங்கும் இயற்கைமணம் என்றறிந்து அந்தச் சுகாதீதம் - என் ஆத்தாளே அருட்கடலில் மூழ்கினன்டி.

165: அத்திமதிசூடும் ஆனந்தப் பேரொளிதான் சத்திசிவம் என்றறிந்தே - என் ஆத்தாளே சச்சுபலங் கொண்டான்டி.

166: உள்ளத்தொளி யாகவடி ஓங்காரத்து உள்ளிருக்கும் கள்ளப் புலன் அறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தான்டி.

167: கணக்கனார் வாசலது கதவுதான் தாள்திறந்து பிணக்காத பிள்ளையென்று - என் ஆத்தாளே பீடமிடம் பெற்றேன்டி.

168: மூன்று சுழிவழியே முன்னங்கால் தான்மடித்து ஈன்று சுழிவழியே - என் ஆத்தாளே இசைந்திருந்த மந்திரமும்.

169: தோன்றாது தோன்றுமடி சுகதுக்கம் அற்றிடத்தே மூன்றுவழி போகவடி - என் ஆத்தாளே முதியமன ஆச்சுதடி.

170: சுத்த மத்தமற்றே தொண்டராய்த் தொண்டருடன் அத்திவித்தின் போலே - என் ஆத்தாளே அதிகம் அளித்தேன்டி.

171: வித்துருவத் தோடே விநாயகனைத் தாள்தொழுது அத்துருவம் நீக்கிபடி - என் ஆத்தாளே அறிய அளித்தேன்டி.

172: மின்னார் விளக்கொளிபோல் மேவுமிதே யாமாகில் என்னாலே சொல்லவென்றால் - என் ஆத்தாளே எழும்புதில்லை என் நாவு.

173: அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச் சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே தோன்றிற்றுத் தோன்றுமடி.

174: அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும் சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே தணலாக வெந்ததடி.

175: சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார் நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே நிலமை அறியாதார்.

176: கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார் தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே சொரூபம் அறியாதார்.

177: உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே பேரில் பிணக்கமடி.

178: தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம் ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே அவசமனம் வீசுதடி.

179: பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே சமையத்தார் ஏசுவரே.

180: நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம் சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே சொல்லி நகைப்பாரோ.

181: இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே தனம்போன மாயமடி.

182: வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல் இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே இடம் அறியாது ஆனேன்டி.

183: கல்லாலே வேலிகட்டி கனமேல் ஒளிவுகட்டி மல்லால் வெளிபுகட்டி - என் ஆத்தாளே மலவாசல் மாண்டுதடி.

184: ஆசாபாசம் அறியா தன்பு பொருந்தினபேர் ஏசாரோ கண்டவர்கள் - என் ஆத்தாளே எவரும் நகையாரோ

185: இன்பமுற்ற பேர்கடனை எல்லோரும் பேசுவரோ துன்பமுற்ற பேர்கடனை - என் ஆத்தாளே சொல்லி நகையாரோ

186: விண்ணைஎட்டிப் பாராமல் விதத்தை உற்றுப்பாராமல் மண்ணையெட்டிப் பார்த்தொருவர் - என் ஆத்தாளே வலுப்பேசி ஏசுவரோ.

187: என்னையிவன் கொண்டான்டி இருவினையும் கண்டான்டி சன்னைசொல்ல விண்டான்டி - என் ஆத்தாளே சமையம்பிணக் கானேன்டி.

188: இந்நிலத்திற் கண்காண ஏகாத மானிடத்தே கன்னி அழித்தாண்ட - என் ஆத்தாளே கற்பைக் குலைத்தாண்டி.

189: சுத்தத்தார் பார்த்திருக்கச் சூதுபலபேசிப் பத்தாவாய் வந்திருந்தான் - என் ஆத்தாளே பாசமதைத் தாண்டி.

190: அண்டத்தைக் கட்டியடி ஆசையறுத்தான்டி தொண்டராய்த் தொண்டருக்கு - என் ஆத்தாளே தோற்றம் ஒடுக்கமடி.

191: கற்பனையும் மூன்றுவிதம் காரமாய்க் கொண்டேன்டி ஒப்பனையும் அல்லவடி - என் ஆத்தாளே ஒடுக்கம் அறியேன்டி.

192: பாருக்குள் மாயையடி பார்க்கவெள்ளை பூத்ததடி மேருக்குள் வெண்ணெய்யைப்போல் - என் ஆத்தாளே முழங்கிக் கலந்திடவே.

193: உண்மைப் பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு விண்ணிலே போச்சுதடி - என் ஆத்தாளே வெகுபேரைப் பார்த்திருந்தேன்.

194: இரும்பில்உறை நீர்போல் எனவிழுங்கிக் கொண்டான்டி அரும்பில் உறை வாசமும்போல் - என் ஆத்தாளே அன்றே இருந்தாண்டி.

195: அக்கினிகற் பூரத்தை அறவிழுங்கிக் கொண்டதுபோல் மக்கனப் பட்டுள்ளே - என் ஆத்தாளே மருவி இருந்தான்டி.

196: கங்குகரை இல்லான்டி கரைகாணாக் கப்பலடி எங்கும்அள வில்லான்டி - என் ஆத்தாளே ஏகமாய் நின்றான்டி.

197: தீவரம்போல் என்னைச் சேர்ந்தபர சின்மயங்காண் பாவகம் ஒன் றில்லான்டி - என் ஆத்தாளே பார்த்திட எல்லாம்பரங்காண்.

198: உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான் கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தான்டி.

199: அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தான்காண் மெய்ப்பொருட்கு மெய்ப்பொருளாய் - என் ஆத்தாளே மேவி இருந்தான்டி.

200: நீரொளிபோல் எங்கும் நிறைந்த நிராமயங்காண் பாரொளிபோல் எங்கும் - என் ஆத்தாளே பரந்த பராபரன்காண்.

201: நூலால் உணர்வறியேன் நுண்ணிமையை யான்அறியேன் பாலாறு சர்க்கரைதேன் - என் ஆத்தாளே பார்த்தறிந்த பூரணன்காண்.

அழுகணிச் சித்தர் பாடல் (Part 1/3)

அழுகணிச் சித்தர் பாடல் (Part 2/3)

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


siddhar songs , siddhar songs lyrics in tamil , siddhar azhukanni padal , siddhar azhukanni padalgal , siddhar songs tamil , siddhar padalgal songs , siddhargal songs , sithargal songs , sithargal in tamil , sithargal songs lyrics in tamil , tamil sithargal songs ,

No comments:

Post a Comment