Tourist Places Around the World.

Breaking

Thursday 20 August 2020

வாயுவுக்கு ஏன் அனுமான் பிறந்தார்? - ஆன்மீக கதைகள் (195)

 

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள் 


உலகில் இருக்கிற ஒன்றை விட இல்லாத ஒன்றுக்கு தான் மதிப்பு. சூரியன் பகலில் இருக்கிறது. இரவில் மறைந்து இல்லாததாகி விடுகிறது. ஆக, இல்லாத ஒன்று காலையில் உதயமானதும் உயிர்கள் மகிழ்கின்றன. ஆனால், வாயுவான காற்று எப்போதும் இருக்கிறது. 24 மணி நேரமும் இருக்கிறது. சூரிய ஒளியைக்கூட பந்தல் போட்டு மறைத்து விடலாம். 


ஆனால், காற்று புகாத இடம் உலகில் உண்டா? ஒருவரை, இருட்டறையில் அடைத்துப் போட்டாலும் சுவாசத்துக்கு இடைஞ்சல் இருக்காது. இப்படி, காற்றாகிய வாயுபகவான் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மக்கள் சேவை செய்பவர். எனவே தான், அனுமானும் அவரைத் தனது தந்தையாகத் தேர்ந்தெடுத்து அவரது பிள்ளையானார். அவரது குணம் இயற்கையாகவே அமைந்தது. முன்பின் தெரியாத ராமனுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை செய்தார். 


காற்று புக முடியாத அளவு பாதுகாப்புமிக்க இலங்கைக்குள் அவர் புகுந்தார். அரக்கர்களை அழித்தார். இந்த சேவைக்காக அவர் ராமபிரானிடம் பாராட்டு பெற்ற போது, அவரது திருவடிகளில் விழுந்து, இந்த புகழெல்லாம் பகவானுக்கே உரியவை என்றார். தனது எஜமானனுக்கு மாறாத நம்பிக்கையும், பக்தியும் கொண்டிருந்த அனுமானின் இந்த அரிய பண்பை நாமும் நம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

1008 சித்தர்கள் வரலாறு மற்றும் ஜீவ சமாதிகள்


சித்தர் மந்திரங்கள் மற்றும் பாடல்கள்


ஆன்மீக கதைகள், தகவல்கள் மற்றும் கோவில்கள்


aanmeega kadhaigal , bakthi kathaigal in tamil , kadavul kathaikal , kadavul kathaigal , tamil siru kathaigal , spiritual stories in tamil , short stories in tamil , neethi kathaigal , divine stories , தமிழ் நீதி கதைகள் ,  ஆன்மிகக் கதைகள் , ஆன்மிகக்கதைகள் , ஆன்மீக சிறு கதைகள் , சிறு கதைகள் , குட்டி கதைகள் , பக்தி கதைகள் , நீதி கதைகள் , நீதிக்கதைகள் , நீதிக் கதைகள் , ஆன்மீக தத்துவ கதைகள் ,   

No comments:

Post a Comment